Both our societies share deep rooted historical ties and civilizational linkages: PM Modi to Nepalese PM
As immediate neighbours and close friendly nations, peace, stability, and economic prosperity of Nepal is our shared objective: PM
At every step of Nepal's development journey and economic progress, we have been privileged to be your partner: PM Modi
Open borders between our countries provide great opportunities for cooperation and interaction among our people: PM Modi to Nepalese PM
India’s initiatives for open sky, cross-border power trade, transit routes, cross-border connectivity would directly benefit Nepal: PM

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மையத்தை புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் இதுபோன்ற நிகழ்வுக்கு மிகவும் பொருத்தமான நாள் என்று கூறினார். மகாத்மா காந்தி இந்தியாவை விட்டுச் சென்றுவிட்ட போதிலும், நாட்டுக்கான தேவை அவரை இங்கே திரும்பவும் கொண்டு வந்து சேர்த்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை வெறும் எண்ணிக்கையாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு வலிமையாகப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். பல ஆண்டுகளாக “அறிவாளிகள் வெளியேறுகிறார்கள்” என்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். ஆனால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நமது வலிமையாக நாம் பார்த்தால், அதை “அறிவாளித்தனத்தின் ஆதாயம்” என மாற்றலாம் என்றும் பிரதமர் கூறினார்.

உலகமே இந்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டக் கூடிய சமயத்தில், “அடையாளம் தெரியாதவர்களின் பயம்” மிகப் பெரிய தடையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதை வெற்றி கொள்வதற்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் உதவ முடியும் என்றார் அவர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி தொடங்கி வைத்தார் என்றும், அடுத்தடுத்து வந்த அரசுகள் அதை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிடத்தக்க மனிதாபிமான பணிகளை ஆற்றியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். போர் மற்றும் பேரழிவு சூழ்நிலைகளில் இந்தியர்கள் மட்டுமின்றி, வேறு பல நாடுகளின் குடிமக்களையும் எவ்வாறு இந்தியா காப்பாற்றியது என்பது பற்றி அவர் குறிப்பிட்டார்.



எந்த நாட்டையும் இந்தியா தாக்கியது கிடையாது என்று பிரதமர் கூறினார். இரண்டு உலகப் போர்களில் அந்நிய நாடுகளைக் காப்பாற்ற இந்திய வீரர்கள் செய்தத் தியாகங்களை அவர் நினைவுகூர்ந்தார். இந்தத் தியாகத்தை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது “காந்தி – ஓர் வெளிநாடுவாழ் இந்தியர்” என்ற தலைப்பிலான கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். நீரிழிவைக் கட்டுப்படுத்த யோகா பயிற்சிகள் குறித்த சிறு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். “இந்தியாவை அறிவோம்” என்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.

Explore More
78వ స్వాతంత్ర్య దినోత్సవ వేళ ఎర్రకోట ప్రాకారం నుంచి ప్రధాన మంత్రి శ్రీ నరేంద్ర మోదీ ప్రసంగం

ప్రముఖ ప్రసంగాలు

78వ స్వాతంత్ర్య దినోత్సవ వేళ ఎర్రకోట ప్రాకారం నుంచి ప్రధాన మంత్రి శ్రీ నరేంద్ర మోదీ ప్రసంగం
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
సోషల్ మీడియా కార్నర్ 21 నవంబర్ 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage