ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. யூசுப் பின் அலாவி பின் அப்துல்லா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் இந்திய – ஓமன் நாடுகளின் உறவுகள் குறித்த தங்களின் கருத்துகளை பிரதமர் மோடியும் யூசுப் பின் அலாவி பின் அப்துல்லாவும் பகிர்ந்து கொண்டனர்.
தனது அரசர் சுல்தான் காபூஸ் பின் சயத் அல் சயத் அவர்களின் வாழ்த்துகளை பிரதமரிடம் திரு. யூசுப் பின் அலாவி பின் அப்துல்லா தெரிவித்தார். ஓமன் அரசருக்கு பிரதமரும் தனது வாழ்த்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.