வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேகாலயாவின் ரி போய் பகுதியைச் சேர்ந்த திருமதி சில்மே மராக்கின் வாழ்க்கை, அவரது சிறிய கடையிலிருந்து ஒரு சுய உதவிக் குழுவாக மாறியபோது நேர்மறையான திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் இப்போது உள்ளூர் பெண்களை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்க உதவுவதுடன், 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்க உதவியுள்ளார். அவர் பிரதமரின் வேளாண் வருவாய் ஆதரவு நிதி, காப்பீடு மற்றும் பிற திட்டங்களின் பயனாளி ஆவார்.
சில்மே சமீபத்தில் தனது விரிவாக்கப் பணிக்காக ஒரு ஸ்கூட்டியை வாங்கியுள்ளார். அவர் தனது பகுதியில் ஒரு வாடிக்கையாளர் சேவை மையத்தையும் நடத்தி வருகிறார். அரசுத் திட்டங்களைப் பெற மக்களுக்கு உதவுகிறார். அவரது குழு, உணவு பதப்படுத்துதல், அடுமனையில் தீவிரமாக உள்ளது. பிரதமர், அவரது தன்னம்பிக்கையை பாராட்டிக், கைதட்டி கவுரவித்தார்.
அரசின் திட்டங்களில் அவரது நேரடி அனுபவம், இந்தி மொழியில் சிறந்த ஆளுமை ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், "நீங்கள் மிகவும் சரளமாகப் பேசுகிறீர்கள், ஒருவேளை என்னை விட சிறந்தவர்" என்று பிரதமர் கூறினார். அவரது சமூக சேவை மனப்பான்மையை பாராட்டிய பிரதமர், "உங்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்புதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் திட்டத்தின் பலன்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்தின் பின்னணியில் உள்ள பலம் என்று தெரிவித்தார். உங்களைப் போன்றவர்கள் என் வேலையை மிகவும் எளிதாக்குகிறீர்கள். நீங்கள்தான் உங்கள் கிராமத்தின் மோடி" என்று பிரதமர் பாராட்டினார்.