நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
நாடு முழுவதிலுமிருந்து, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்ட பயனாளியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த சப்னா பிரஜாபதியும் தொற்றுநோய்களின் போது முகக் கவசங்களைத் தயாரிப்பதன் மூலம் பங்களித்தார். தனது பெரும்பாலான வணிகத்தை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நடத்தியதற்காக பிரதமர் அவரைப் பாராட்டினார். விழிப்புணர்வை விரிவுபடுத்தவும் பரப்பவும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவைத் தலைவருமான திரு ஓம் பிர்லா மூலம் அவர் ஊக்கம் பெற்றார். சப்னாவின் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிறுதானியங்களை ஊக்குவித்து பணியாற்றுவது குறித்துப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
'குயவர்' சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு விஸ்வகர்மா திட்டம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். "கூட்டான மகளிர் சக்தி உங்களைப் புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்” என்று அவர் கூறினார். மேலும் அவர்கள் பெறுகின்ற நன்மைகள் பற்றி மக்களுக்குச் சொல்வதன் மூலம், மோடியின் உத்தரவாத வாகனப் பிரச்சாரத்தை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுமாறு அவர்கள் அனைவரையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்."