இந்தியாவை குப்பை இல்லாத நாடாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்ட தூய்மையான இந்தியா இயக்கம் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை இப்போது தொட்டுள்ளது.

 

வேறு யாருமல்ல; இந்தியாவின் பிரதமர்தான் 2015 ஆகஸ்ட் 15ஆம் நாள் செங்கோட்டையின் கொத்தளத்தில் நின்றபடி தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தும்போது தூய்மையைப் பற்றி முதன்முறையாகப் பேசினார். அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் நாளன்று தானே துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சியில் பிரதமர் முன்னணியில் நின்றார். தூய்மையைப் பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார். இதன் மூலம் மக்களின் பேச்சுவழக்கில் அதை அவர் முன்னுக்குக் கொண்டு வந்தார். அதிகாரபூர்வமான அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது அரசியல் சார்ந்த பேரணியாக இருந்தாலும் சரி, தூய்மை என்ற விஷயமானது அவரால் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டுக் கொண்டே வந்தது.  

 

தூய்மையான இந்தியா இயக்கத்திற்கு இதுவரை கண்டிராத உற்சாகத்துடன் அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தருவதில் எவ்வித வியப்பும் இல்லை. ஊடகங்களும் கூட இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தன.

 

தூய்மையான இந்தியா இயக்கமும், பிரதமரின் வார்த்தைகளும் நாட்டின் மீது எத்தகைய செல்வாக்கை செலுத்தின என்பதற்கு உதாரணமாக சந்திரகாந்த் குல்கர்னியின் செயல்களையே குறிப்பிடலாம்.

 

ஓய்வுபெற்ற அரசு ஊழியரும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருமான சந்திரகாந்த் குல்கர்னி, மாதந்தோறும் ரூ. 16,000 மட்டுமே ஓய்வூதியமாகப் பெற்று வருபவர். தூய்மை இந்தியா இயக்கத்தினால் பெரிதும் கவரப்பட்ட அவர், இந்த நோக்கத்திற்காக மாதந்தோறும் தன்னுடைய பங்காக ரூ. 5,000-ஐ வழங்குவது என முடிவு செய்தார். அதுவும் கூட ஒரேயொரு முறையல்ல; வரவிருக்கும் மாதங்களின் தேதியொன்றை கொண்டதாக முன்தேதியிட்ட 52 காசோலைகள் வடிவத்தில்!

 

ஓய்வூதியம் பெறும் ஒருவர் தனது வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை தூய்மையான இந்தியாவிற்காகத் தருகிறார் என்னும்போது மக்களின் மனதில் பிரதமரின் வார்த்தைகள் எத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன என்பதையும், முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்கு நாட்டை எடுத்துச் செல்வதில் ஒருங்கிணைந்த பகுதியாகவே தாங்களும் இருக்கிறோம் என்றே குடிமக்கள் உணர்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுவதாகவே இது அமைகிறது. ‘தூய்மையான இந்தியாவை உருவாக்க மக்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது குறித்து இது போன்ற எண்ணற்ற சம்பவங்களை திரு. மோடி தன் பங்கிற்கு பகிர்ந்து வந்திருக்கிறார். அவரதுமன் கீ பாத்வானொலி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தூய்மையை அடிப்படையாகக் கொண்ட குறைந்தது ஏதாவதொரு சம்பவத்தைக் குறிப்பிடுவதாக இருக்கும்.

 

பிரதமர் என்ற வகையில், திரு. மோடி அவர்கள் தூய்மைக்கான மக்கள் இயக்கமொன்றை உருவாக்குவதில் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கும் அது நன்மை தருவதாகவே இருக்கும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Annual malaria cases at 2 mn in 2023, down 97% since 1947: Health ministry

Media Coverage

Annual malaria cases at 2 mn in 2023, down 97% since 1947: Health ministry
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.