தேர்வுக்கான கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான அனில் கும்ளேயை உதாரணமாகக் குறிப்பிட்டார். 2002 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், மிகக் கடுமையாக காயம்பட்ட போதிலும், கும்ளே சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
“அனில் கும்ளே கடுமையான காயத்திற்கு இடையிலும் பந்து வீசியதை யாராலும் மறக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அனில் கும்ளேக்கு தாடையில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் போட்டியிலிருந்து விலகவில்லை. தாடையில் ஏற்பட்ட முறிவின் வேதனைக்கு இடையே அவர் பந்து வீசி, அப்போது மிகச்சிறந்த ஆட்டக்காரராக திகழ்ந்த பிரையன் லாராவை வீழ்த்தினார்” என்று பிரதமர் கூறினார்.