அவசர நிலையின் இருண்ட காலத்தில் காங்கிரஸ் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக நரேந்திர மோடி தலைமறைவு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். “நரேந்திர கக்கா சர்தார்ஜியாக தாமாகவே வேடமணிந்து காவலரிடமிருந்து தப்பித்தார்” என்று குஜராத்தைச் சேர்ந்த ரோஹித் அகர்வால், 1975 ஆம் ஆண்டில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை எடுத்துரைத்தார்.
சர்தாராக உடையணிந்து வீட்டிலிருந்து நரேந்திர மோடி வெளியே வந்தபோது அந்த நேரத்தில் அவரை தேடுவதற்காக காவலர் அங்கே வந்தார் என்ற சம்பவத்தை திரு.அகர்வால் நினைவுகூர்ந்தார். காவல்காரர் மட்டுமின்றி அவரது வீட்டைச் சேர்ந்த எவரும் கூட நரேந்திர மோடியை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்று அகர்வால் கூறினார்.
“1975-ல், இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தியபோது நரேந்திர கக்கா சர்தார்ஜியாக வேடமணிந்து அந்த காலத்தில் எங்கள் வீடு இருந்த மது கஞ்சில் எங்களுடன் தங்கியிருந்தார். சர்தார்ஜி உடையணிந்து அவர் வெளியே வந்தபோது காவலர்கள் அவரை அணுகி, நரேந்திர மோடி எங்கே இருக்கிறார் என்று கேட்டனர். எனக்கு தெரியாது என்று மோடி பதிலளித்தார். நீங்கள் உள்ளே சென்று விசாரியுங்கள். காவலர்களை உள்ளே அனுப்பிய நரேந்திரபாய் எனது சகோதரருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்று விட்டார். காவலர்கள் மட்டுமின்றி நரேந்திர மோடியின் தோற்றத்தால் நாங்களும் ஏமாற்றமடைந்தோம்.”
#ModiStory
— Modi Story (@themodistory) March 29, 2022
Do you know how Narendra Modi evaded police during emergency?
Rohit Agrawal from Gujarat narrates an interesting encounter.
For more: https://t.co/9iulCar3rR
Follow: @themodistory pic.twitter.com/mYPbzRMTDu
பொறுப்புதுறப்பு:
பிரதமர் திரு.நரேந்திர மோடி & மக்களின் வாழ்க்கையில் அவரது தாக்கம் குறித்து மக்கள் எடுத்துரைக்கும் அல்லது நினைவுகூரும் சம்பவங்கள் / கருத்து / ஆய்வு ஆகியவற்றை தொகுப்பதற்கான முயற்சியில் இதுவொரு பகுதியாகும்.