தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியில், அதிகாலையில் படிப்பது நல்லதா? அல்லது பின்னிரவு வரை படிப்பது நல்லதா? என்று மாணவர்கள் கேட்டனர். படிப்பதற்கு எது மிகச் சிறந்த நேரம் என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினார்கள்.
மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இதுகுறித்து மாணவர்களுக்கு ஆலோசனை கூற 50 சதவீதம் மட்டுமே தாம் ஏற்றவர் என்றும், ஏனெனில் தாம் அதிகாலை எழுந்தாலும், தனது வேலைப்பளு பின்னிரவு வரை தம்மை பணியில் ஈடுபடச் செய்வதாகவும் கூறினார்
“அதிகாலையில் எழுந்திருங்கள், நமது மனம் அப்போது புத்துணர்ச்சியுடன் இருக்கும், அப்போது நாம் படிப்பது சிறப்பாக மனதில் பதியும். ஆனால், ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த பழக்கங்கள் இருக்கும். எது அவர்களுக்கு வசதியோ அதனைப் பின்பற்றலாம்” என்று பிரதமர் மோடி கூறினார்.
தாங்கள் விரும்பிய குறிப்பிட்ட உணவை தயாரிக்குமாறு தங்கள் தாயிடம் கேட்டுச் சாப்பிடுவதை சில குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட பிரதமர், ஒரு சிலர், படிப்பதற்கென அதிகாலையில் எழுப்பி விடும்படி, கேட்பதும் உண்டு என்று கூறினார்.