பிரதமர் மோடியின் எளிமையான அணுகுமுறை ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர் நீரஜ் சோப்ராவை மிகவும் கவர்ந்தது. விளையாட்டு ஆளுமைகளுக்கும் உதவியாளர்களுக்கும் தமது இல்லத்தில் பிரதமர் காலை சிற்றுண்டி அளித்தபோது அவருடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்த நீரஜ் சோப்ரா பிரதமருடன் பேசுவதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை அங்கிருந்த அனைவரிடமும் பிரதமர் மோடி மிகவும் அன்போடு, எளிமையாகப் பழகியதாக அவர் கூறினார்.
விளையாட்டு ஆளுமைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவரங்களையும் பிரதமர் மோடி தெரிந்து வைத்திருப்பதாக நீரஜ் கூறினார். இந்த விவரங்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்வதற்கு முன் பிரதமர் கூறியதாக அவர் கூறினார். பிரதமர் மோடியின் எளிமையான அணுகுமுறை அனைவரையும் மகிழ்ச்சியாகவும், இயல்பாகவும் உணரச்செய்தது என்று அவர் குறிப்பிட்டார். இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியும்கூட அவர் பேசினார்.
“நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பின் கேலோ இந்தியா போல இந்திய விளையாட்டுக்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தப் போட்டியிலும் பங்கேற்பதற்கு முன் அவரிடமிருந்து நாங்கள் பேராதரவைப் பெற்றோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு குடிமக்களை அவர் கேட்டுக்கொள்வார். இந்த முறை ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. போட்டிகளிலிருந்து திரும்பிய பின் விளையாட்டு ஆளுமைகள் பதக்கம் வென்றார்களா இல்லையா என்பது பற்றி நினைக்காமல் அனைத்து வீரர்களும், வீராங்கனைகளும் சமமான மதிப்பைப் பெற்றனர். பதக்கங்களின் அந்தஸ்தை கருதாமல் அனைத்து விளையாட்டு ஆளுமைகளையும் அவர் சந்தித்தார். இது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
#ModiStory
— Modi Story (@themodistory) March 26, 2022
“We never felt like we were speaking with the Prime Minister of India. Such unpretentious behaviour is heartening.” Olympic gold medalist @Neeraj_chopra1 moved by Narendra Modi’s simplicity and affability!
Visit: https://t.co/9iulCar3rR
Follow: @themodistory pic.twitter.com/DYizzpqUyL