உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா சென்றடையச் செய்வதை உறுதி செய்வதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி, யோகா ஆசிரியர்கள், யோகாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் மற்றும் யோகா பணியுடன் தொடர்புடைய அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் உரையாற்றினார்.
கீதையிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர், யோகாவில் அனைவருக்கும் தீர்வு இருப்பதால், யோகாவின் கூட்டுப் பயணத்தில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று கூறினார். துன்பங்களிலிருந்து விடுபடுவது யோகா, இது அனைவருக்கும் உதவுகிறது என்று பிரதமர் கூறினார்.
யோகா மீதான மக்களின் ஆர்வத்தையும், அது பிரபலமடைந்து வருவது குறித்தும் எடுத்துரைத்த பிரதமர், ஒவ்வொரு நபரை சென்றடையும் போதும், யோகாவின் அடித்தளத்தையும் மையத்தையும் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம் என்றார். அனைவருக்கும் யோகாவை எடுத்துச் செல்லும் இந்தப் பணியில் யோகா ஆசியர்களும், நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.