பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐக்கிய அரசு அமீரகத் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் உள்ள ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்தில் பாரத் மார்ட்டுக்கு அடிக்கல் நாட்டினர்.
ஜெபல் அலி துறைமுகத்தின் அமைவிடம் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் வலிமையை மேம்படுத்த பாரத் மார்ட், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். வளைகுடா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியாவில் உள்ள சர்வதேச வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான சிறந்த தளத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் திறனை பாரத் மார்ட் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.