சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை இன்று தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய தொலைக்காட்சியை வேகமாக மாறிவரும் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது குறித்து பாராட்டினார். அதுவும், உரையாடல் மற்றும் தொடர்பு மூலம் புரட்சியை 21-ம் நூற்றாண்டு கொண்டுவரும் வேளையில் இது நடந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். சன்சத் டிவியைத் தொடங்குவது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்ட அவர், சன்சத் தொலைக்காட்சியின் வடிவில், நாடு தகவல் தொடர்பு மற்றும் உரையாடலுக்கான தளத்தை பெறுகிறது என்றும், இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் புதிய குரலாக மாறும் என்றும் கூறினார். . தூர்தர்ஷன் 62 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பொறியாளர் தினத்தையொட்டி அனைத்து பொறியாளர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று சர்வதேச ஜனநாயக தினம் என்றும் குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகம் என்று வரும்போது, இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதால் இந்தியாவின் பொறுப்பு அதிகம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கான ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை. இந்தியாவில் ஜனநாயகம் என்பது ஒரு அரசியலமைப்பு மட்டுமல்ல, அது ஒரு ஆன்மா. இந்தியாவில் ஜனநாயகம் என்பது அரசியலமைப்புகளின் நீரோட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை நீரோட்டம், என்றார் அவர்.
கடந்த 75 வருட சுதந்திரத்தின் பின்னணியில் ஊடகங்களின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், கடந்த காலத்தின் வெற்றியும், வருங்காலத்தின் உறுதியும் நமக்கு முன் உள்ளதுஎன்றார். தூய்மை இந்தியா இயக்கம் போன்றவற்றை குறித்து ஊடகங்கள் எடுத்து சொல்லும் போது, அது மக்களை மிகுந்த வேகத்தில் சென்றடைகிறது என்றார். சுதந்திரப் போராட்டம் குறித்து 75 அத்தியாயங்களைத் திட்டமிடுவதன் மூலமும், அது குறித்த சிறப்பு இணைப்புகளை வெளியிடுவதன் மூலமும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் போது மக்களின் முயற்சிகளைப் பரப்புவதில் ஊடகங்கள் பங்கு வகிக்கலாம் என்றும் அவர் கூறினார் .
உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி பிரதமர் பேசுகையில், ‘உள்ளடக்கம் தான் அரசன்’ என்று கூறப்படுவதாகவும், ஆனால் தமது அனுபவத்தில் ‘உள்ளடக்கமே தொடர்பு’ என்றும் கூறினார். ஒருவரிடம் சிறந்த உள்ளடக்கம் இருக்கும்போது, மக்கள் தாமாகவே அதில் ஈடுபாடு கொள்வார்கள் என்று அவர் விளக்கினார். இது ஊடகங்களுக்கு எவ்வளவு பொருந்துமோ, அதே அளவுக்கு நமது நாடாளுமன்ற முறைக்கும் பொருந்தும், ஏனெனில் நாடாளுமன்றத்தில் அரசியல் மட்டுமல்ல, கொள்கையும் உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளுடனான தொடர்பை பொதுமக்கள் உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த திசையில் பணியாற்றுமாறு புதிய தொலைக்காட்சியை அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற கூட்டங்களின் போது பல்வேறு விஷயங்களில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. எனவே இளைஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று பிரதமர் கூறினார். நாடு அவர்களை பார்க்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறந்த நடத்தை மற்றும் விவாதத்திற்கான உத்வேகம் பெறுகிறார்கள். குடிமக்களின் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார் மேலும் இந்த விழிப்புணர்வுக்கு ஊடகங்கள் ஒரு பயனுள்ள வழி என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளிலிருந்து, நமது ஜனநாயக அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் குடிமைக் கடமைகள் பற்றி நமது இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அதுபோலவே, இந்திய ஜனநாயகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் பணிக்குழுக்கள், நாடாளுமன்றப் பணிகளின் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் பற்றிய தகவல்கள் நிறைய இருக்கும். அடித்தட்டு ஜனநாயகமாக செயல்படும் பஞ்சாயத்துகள் குறித்த நிகழ்ச்சிகளும் நாடாளுமன்ற தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஒரு புதிய ஆற்றலை, ஒரு புதிய உணர்வை கொடுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
तेजी से बदलते समय में मीडिया और टीवी channels की भूमिका भी तेजी से बदल रही है।
— PMO India (@PMOIndia) September 15, 2021
21वीं सदी तो विशेष रूप से संचार और संवाद के जरिए revolution ला रही है।
ऐसे में ये स्वाभाविक हो जाता है कि हमारी संसद से जुड़े चैनल भी इन आधुनिक व्यवस्थाओं के हिसाब से खुद को ट्रान्स्फॉर्म करें: PM
India is the mother of democracy.
— PMO India (@PMOIndia) September 15, 2021
भारत के लिए लोकतन्त्र केवल एक व्यवस्था नहीं है, एक विचार है।
भारत में लोकतंत्र, सिर्फ संवैधानिक स्ट्रक्चर ही नहीं है, बल्कि वो एक स्पिरिट है।
भारत में लोकतंत्र, सिर्फ संविधाओं की धाराओं का संग्रह ही नहीं है, ये तो हमारी जीवन धारा है: PM
मेरा अनुभव है कि- “कन्टेंट इज़ कनेक्ट।”
— PMO India (@PMOIndia) September 15, 2021
यानी, जब आपके पास बेहतर कन्टेंट होगा तो लोग खुद ही आपके साथ जुड़ते जाते हैं।
ये बात जितनी मीडिया पर लागू होती है, उतनी ही हमारी संसदीय व्यवस्था पर भी लागू होती है!
क्योंकि संसद में सिर्फ पॉलिटिक्स नहीं है, पॉलिसी भी है: PM
हमारी संसद में जब सत्र होता है, अलग अलग विषयों पर बहस होती है तो युवाओं के लिए कितना कुछ जानने सीखने के लिए होता है।
— PMO India (@PMOIndia) September 15, 2021
हमारे माननीय सदस्यों को भी जब पता होता है कि देश हमें देख रहा है तो उन्हें भी संसद के भीतर बेहतर आचरण की, बेहतर बहस की प्रेरणा मिलती है: PM @narendramodi
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.