பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தைக் கையாண்ட வீணாதேவி , தனது தனித்துவமான காளான் வளர்ப்பு தொழில்நுட்பம், தன்னைத் தன்னிறைவு பெறச் செய்தது மட்டுமின்றி, தனது மன உறுதியையும் பலப்படுத்தியது என்பதைப் பகிர்ந்து கொண்டார்
பீகாரில் உள்ள முங்கெரைச் சேர்ந்த வீணா தேவி, "மனமிருந்தால் மார்க்கமுண்டு. மன உறுதியின் மூலம் எதையும் சாதிக்கலாம்," என்றார்.
வீணா தேவி, தனது கட்டிலின் அடியில் காளான்களை வளர்க்க ஆரம்பித்தார். "எந்தத் துறையிலும் பெண்கள் இப்போது பின் தங்கி இருக்கவில்லை. ஒரு நாட்டில் உள்ள பெண்களின் வலிமை தீர்மானிக்கப்பட்டால், வீட்டில் இருந்தே தங்கள் பயணத்தை அவர்களால் தொடங்க முடியும். காளான் வளர்ப்பு மூலம் எனக்கு மரியாதை கிடைத்தது. இதனால் நான் ஊர் தலைவர் ஆனேன். என்னைப் போல் பல பெண்களுக்கு இதே போன்ற பயிற்சி வாய்ப்புகள் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், முங்கெரைச் சேர்ந்த பெண்கள் இப்போது ஒட்டுமொத்த தேசத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள். வீட்டிலியே விவசாயம் செய்வதிலிருந்து, விளை பொருட்களை உள்ளூர் சந்தைகளில் விற்பது வரை, அனைத்து வேலைகளையும் தானே செய்யும் தனது வாழ்க்கைக் கதை அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது என்றார்.
जहां चाह वहां राह… इच्छाशक्ति से सब कुछ हासिल किया जा सकता है।
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
मेरी वास्तविक पहचान पलंग के नीचे एक किलो मशरूम की खेती से शुरू हुई थी।
लेकिन इस खेती ने मुझे न केवल आत्मनिर्भर बनाया, बल्कि मेरे आत्मविश्वास को बढ़ाकर एक नया जीवन दिया।
वीणा देवी, मुंगेर #SheInspiresUs pic.twitter.com/MkfyZ8mnZp