அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் இன்று பிற்பகல் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் மேற்கொண்ட விரிவான, தெளிவான, பயனுள்ள கலந்துரையாடலை பிரதமர் நினைவு கூர்ந்தார். தங்களது வலுவான ராணுவரீதியான கூட்டணியை மேலும் வளர்த்தெடுப்பது என்ற தங்களின் உறுதிப்பாட்டை இரண்டு நாடுகளும் மீண்டும் உறுதி செய்து கொண்டன. இருநாடுகளுக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது ஆகியவை குறித்தும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மட்டிஸ் பிரதமர் விளக்கினார்.
பகுதியளவிலும், உலக அளவிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அமைதி, நிலைத்தன்மை, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது ஆகிய இருநாடுகளின் பரஸ்பர முன்னுரிமைகளை பின்பற்றுவது ஆகியவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இரு நாடுகளின் பரஸ்பர விருப்பங்களின் அடிப்படையிலான பகுதிவாரியான, உலக அளவிலான விஷயங்கள் மீது இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் நிலவி வருவது குறித்து பிரதமர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.