உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கடந்த் ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து மக்களுக்கு அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். முழுமையடையாத லக்னோ மெட்ரோ கட்டுமானப் பணிகளை தேர்தல்கள் காரணமாக, உ.பி. அரசு தொடங்கி வைத்துள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டினார். ``மாநிலத்தில் தேர்தல்கள் வருவதால், முழுமையடையாத மெட்ரோ பணிகளை லக்னோவில் உ.பி. அரசு தொடங்கி வைத்துள்ளது! லக்னோவுக்கு அகிலேஷ்ஜி வர வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். நானும் வருகிறேன். நாம் மெட்ரோவில் பயணம் மேற்கொள்வோம். ரயில்களும் ஓடவில்லை. ரயில் நிலையங்களும் முழுமையாக முடியவில்லை. திட்டத்தை நீங்கள் தொடங்கி வைத்துவிட்டீர்கள்'' என்று பிரதமர் கூறினார்.
மருத்துவ வசதிகள் இன்னும் தொடங்காத மற்றும் டாக்டர்கள் இல்லாத மருத்துவமனையை உ.பி. அரசு தொடங்கி வைத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.