ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

|

இலச்சினை மற்றும் கருப்பொருளின் விளக்கம்

இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள நிறங்களான ஆரஞ்ச், வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களிலிருந்து ஜி-20 இலச்சினை வரையப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் கூடிய புவிச் சின்னம் சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “பாரத்” என்ற வார்த்தை தேவநாகிரி முறையில் இடம் பெற்றுள்ளது.

இலச்சினை வடிவமைப்பிற்கான திறந்தவெளி போட்டி மூலம் இது வடிமைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிற்காக 2,000 விண்ணப்பங்கள் மைகவ் இணையதளத்தில் பெறப்பட்டது.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருள் – வசுதைவக் குடும்பகம் அல்லது ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் – என்பது மகா உபநிஷத்தின் பழமையான சமஸ்கிருத உரையிலிருந்து எடுக்கப்பட்டது.

ஜி-20 இணையதளம்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான இணையதளமான www.g20.in பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. டிசம்பர் 1, 2022  அன்று ஜி-20 தலைமைத்துவதற்திற்கான இணையதளம் www.g20.org  என்று மாறியுள்ளது. இதில் ஜி-20 குறித்த தகவல்கள், சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றிய தகவல்களும் இடம் பெறும். குடிமக்கள், தங்களது கருத்துக்களை பதிவிடுவதற்கான பிரிவும் இந்த இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜி-20 செயலி

இணையதளத்துடன் ஜி-20 இந்தியா என்ற மொபைல் செயலியும் வெளியிடப்பட்டது.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Agri and processed foods exports rise 7% to $ 5.9 billion in Q1

Media Coverage

Agri and processed foods exports rise 7% to $ 5.9 billion in Q1
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 18, 2025
July 18, 2025

Appreciation from Citizens on From Villages to Global Markets India’s Progressive Leap under the Leadership of PM Modi