2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (ரூ.1 குவிண்டாலுக்கு): 

பயிர்கள்

எம்எஸ்பி 2014-15

எம்எஸ்பி 2022-23

எம்எஸ்பி 2023-24

உற்பத்தி
விலை*
கரீஃப் பருவம்
2023-24

2022-23-ஆம் ஆண்டு எம்எஸ்பி-யைவிட கூடுதல்

உற்பத்தி விலை லாபம்- சதவீதத்தில்

நெல்- பொது

1360

2040

2183

1455

143

50

முதல்தர வகை நெல்

1400

2060

2203

-

143

-

ஒட்டுரக ஜோவார்

1530

2970

3180

2120

210

50

ஜோவார்- மல்தாண்டி

1550

2990

3225

-

235

-

கம்பு (பஜ்ரா)

1250

2350

2500

1371

150

82

கேழ்வரகு

1550

3578

3846

2564

268

50

மக்காச்சோளம்

1310

1962

2090

1394

128

50

துவரை

4350

6600

7000

4444

400

58

பச்சைப் பயறு

4600

7755

8558

5705

803

50

உளுந்து

4350

6600

6950

4592

350

51

நிலக்கடலை

4000

5850

6377

4251

527

50

சூரியகாந்தி விதை

3750

6400

6760

4505

360

50

சோயாபீன் (மஞ்சள்)

2560

4300

4600

3029

300

52

எள்

4600

7830

8635

5755

805

50

நைஜர்விதை

3600

7287

7734

5156

447

50

பருத்தி (நடுத்தர இழை)

3750

6080

6620

4411

540

50

பருத்தி (நீண்ட இழை)

4050

6380

7020

-

640

-

 

* உற்பத்தி விலை என்பது,  விவசாய பணியாளர்களுக்கான செலவு, கால்நடைகள் மற்றும் இயந்திரங்களுக்கான செலவு, விதைகள், உரங்கள் மற்றும் நீர்ப்பாசன செலவுகள், பம்ப்செட் போன்றவற்றின் தேய்மானச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

* முதல்தர வகை நெல், ஜோவார் – மல்தாண்டி, நீண்ட இழை பருத்தி ஆகியவற்றுக்கு உற்பத்தி விலை தனியாக கணக்கிடப்படவில்லை.

2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி விலையைவிட குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்குக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு  நியாயமான விலை கிடைக்கும் வகையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான கரீஃப் சந்தைப்பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பஜ்ராவுக்கு 82 சதவீதமும், துவரைக்கு 58 சதவீதமும், சோயாபீனுக்கு 52 சதவீதமும், உளுந்துக்கு 51 சதவீதமும், விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கும் மற்ற பயிர்களுக்கு  உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத அளவுக்கு விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள்  போன்றவற்றின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதுடன் அவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து வழங்கி வருகிறது. இது தவிர தேசிய விவசாயிகள் வளர்ச்சித்திட்டம் (ஆர் கே வி ஒய்), தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய  2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும்.  அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இதுவாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930440

 

  • Reena chaurasia September 08, 2024

    BJP BJP
  • krishangopal sharma Bjp June 03, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏
  • krishangopal sharma Bjp June 03, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏
  • krishangopal sharma Bjp June 03, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏
  • VenkataRamakrishna March 03, 2024

    జై శ్రీ రామ్
  • Raman Sharma June 09, 2023

    Farmers should be freed from the so called farmers’s leaders as they are exploiting them mostly for their political advantage.
  • shankar dayal dwivedi BJP June 09, 2023

    जय हो
  • Dr ANIL KUMAR HEGDE M June 08, 2023

    Sir, you continue to do many things like urban infrastructure in Delhi, increase in MSP, Airports across the country etc. neither our party nor media is covering it. Our govt has treating deceitful wrestlers front people of Deepinder hooda by giving them lot of space which is unfortunate. Sportsmen win medals but Union govt's sports policy and honest tax payers hard earned money is involved in they some time winning the medals. We as a Rashtra bhakt's party must play front foot not only reacting to agenda set by Desh drohi's that's where we faltering. we must set the agenda not other way around. Unless gaddars out on bail, convicted are shown their place people start questioning our govt's intent not realising judiciary tareek pe tareek motto
  • Tushar June 08, 2023

    सबका साथ , सबका विकास....
  • Rakesh Singh June 08, 2023

    जय हो 🙏🏻
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
What Happened After A Project Delayed By 53 Years Came Up For Review Before PM Modi? Exclusive

Media Coverage

What Happened After A Project Delayed By 53 Years Came Up For Review Before PM Modi? Exclusive
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the passing of Shri Fauja Singh
July 15, 2025

Prime Minister Shri Narendra Modi today condoled the passing of Shri Fauja Singh, whose extraordinary persona and unwavering spirit made him a source of inspiration across generations. PM hailed him as an exceptional athlete with incredible determination.

In a post on X, he said:

“Fauja Singh Ji was extraordinary because of his unique persona and the manner in which he inspired the youth of India on a very important topic of fitness. He was an exceptional athlete with incredible determination. Pained by his passing away. My thoughts are with his family and countless admirers around the world.”