பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ. 1,000 கோடி உத்தேச தனியார் கூட்டு மூலதனத்திற்கான இந்த நிதியத்தின் செயல்பாட்டுக் கால அளவு செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகளையும் நிதித் தேவையையும் பொறுத்து நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 150 முதல் 250 கோடி வரை இருக்கும். உத்தேசமான ஒதுக்கீட்டு அளவு வருமாறு:
2025-26 ரூ. 150 கோடி, 2026-27 ரூ. 250 கோடி, 2027-28 ரூ. 250 கோடி, 2028-29 ரூ. 250 கோடி, 2029-30 ரூ. 100 கோடி
நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை, தேசிய விண்வெளித்திறன்கள் மீதான அதன் ஆற்றல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தேச முதலீடு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 60 கோடி வரை இருக்கும். முதலீட்டு சமபங்கு விகிதம் வளர்ச்சி நிலையில் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 30 கோடி வரை, பிந்தைய வளர்ச்சி நிலையில் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 30 கோடி வரை என இருக்கும்.
.இந்த நிதி இந்தியாவின் விண்வெளித் துறையை முன்னேற்றுவதற்கும், தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து, பின்வரும் முக்கிய முயற்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேபடுத்துவதற்கும் உத்திபூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது:
மூலதனத்தை உட்செலுத்துதல்
இந்தியாவில் நிறுவனங்களைத் தக்கவைத்தல்
வளரும் விண்வெளிப் பொருளாதாரம்
விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல்
உலகளாவிய போட்டித்திறனை அதிகரித்தல்
தற்சார்பு இந்தியாவை ஆதரித்தல்
துடிப்பான புதிய கண்டுபிடிப்புச் சூழல் அமைப்பை உருவாக்குதல்
பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம்
நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்தல்
இந்த உத்தேச நிதியானது முழு விண்வெளி விநியோகச் சங்கிலித் தொடரிலும் ஸ்டார்ட் அப்-களை ஆதரிப்பதன் மூலம் இந்திய விண்வெளித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.