உண்மையான தைரியம்

Published By : Admin | September 16, 2016 | 23:46 IST

2013ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று பாட்னாவின் புகழ்பெற்ற காந்தி மைதானத்தைக் கூறு போட்ட வகையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்காமல் இருந்திருந்தால் அதுவும் ஏனைய ஞாயிற்றுக்கிழமைகளைப் போலவேதான் கழிந்திருக்கும்.  இந்த மோசமான, துயரமிக்க சம்பவம் நிகழ்ந்த மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் அப்போது பி.ஜே.பி கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்த திரு. நரேந்திர மோடி பேசுவதாக இருந்தது.

 

மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் அந்த மைதானத்தை நோக்கி அலையலையாக வந்து குவிந்தபோதுதான் மைதானத்தின் அடித்தளப்பகுதியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக குண்டுகள் வெடிக்கத் துவங்கின.

 

திரு. நரேந்திர மோடி பாட்னா நகரத்தை வந்தடைந்தபோது அவருக்கு முன்னால் இரண்டு விதமான வாய்ப்புகள் இருந்தன. ஒன்று (அந்த மிகப் பெரும் மைதானத்தில் அப்போது நிலவியிருந்தயத்தை மேலும் அதிகமாக்குவதைப் போல) பேரணியில் பேசாமல் குஜராத் மாநிலத்திற்குத் திரும்பிப் போவது; அல்லது திட்டமிட்டதைப் போல் அந்த மைதானத்திற்கு வந்து பேரணியில் உரை நிகழ்த்துவது.

 

அந்தப் பேரணியில் திரு. மோடி உரை நிகழ்த்தியது மட்டுமின்றி ஒருவரை எதிர்த்து மற்றொருவர் போராடுவதற்குப் பதிலாக இந்துக்களும் முஸ்லீம்களும் வறுமையை எதிர்த்துப் போராட ஒன்றிணைய வேண்டும் என்று மிகுந்த உணர்ச்சிகரமான வேண்டுகோளையும் அவர் அங்கே முன்வைத்தார். மேலும் யாருக்கும் எவ்விதமான இடையூறையும் ஏற்படுத்தாமல் ஒழுங்கு முறையுடன் அமைதியாக பேரணியிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அங்கு கூடியிருந்த பெருந்திரளினரை அவர் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்.

 

திரு. மோடி பேசிக் கொண்டிருந்த மேடைக்குக் கீழே ஒரு வெடிகுண்டு இருந்தது பின்னர் தெரிய வந்தது.

 

இந்தப் பேரணி நடந்து முடிந்த சில வாரங்களுக்குப் பிறகு திரு மோடி குறிப்பிட்டார்.: “அந்தப் பேரணியில் ஏதாவதொரு விலங்கை அவிழ்த்து விட்டிருந்தாலும் கூட மிக அதிகமான அளவில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்பதை அமைப்பு ரீதியான நீண்ட கால அனுபவம் எனக்குக் கற்றுத் தந்திருந்தது. எனவே அங்கே வெடிகுண்டுகள் இருக்கின்றன என்றோ அல்லது அந்தப் பேரணியில் நான் பேசப்போவதில்லை என்றோ யாராவது அறிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். எனவே பேரணியில் பேசுவதற்காக மேடைக்குப் போவதில்லை என்ற கேள்வியே எனக்குள் எழவில்லை.”

 

இந்தச் சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்குப் பிறகு திரு. மோடி மீண்டும் பாட்னா நகரத்திற்கு வந்தார். இந்தமுறை மைதானத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளால் தங்கள் உறவினர்களை இழந்த குடும்பங்களை சந்திக்கவே அவர் வந்திருந்தார்.

 

பாட்னா நகரின் ஹுங்கர் பேரணி திருப்புமுனையாகவே நினைவுகூரப்படுகிறது. குறிப்பாக மிகவும் மோசமானதொரு சூழ்நிலையில் உண்மையான தலைமை எப்படியிருக்க வேண்டும் என்பதை மிக அழகாக விளக்குவதாகவே அது இருந்தது. ஒருவரை ஒருவர் எதிர்த்து அல்ல; வறுமையை எதிர்த்தே போராட வேண்டும் என்ற அவரது செய்தியும்கூட கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களில் எதிரொலித்தன.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடியின் இதயத்தைத் தொடும் கடிதம்
December 03, 2024

திவ்யாங் (ஊனமுற்றோர்) கலைஞர் தியா கோசாய்க்கு, படைப்பாற்றலின் ஒரு தருணம் வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அக்டோபர் 29 அன்று பிரதமர் மோடியின் வதோதரா ரோட்ஷோவின் போது, அவர் பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவரான மாண்புமிகு திரு. பெட்ரோ சான்செஸ் ஆகியோரின் ஓவியங்களை வழங்கினார். இரு தலைவர்களும் அவரது இதயப்பூர்வமான பரிசை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

பல வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி, தியா தனது கலைப்படைப்பைப் பாராட்டி, ஸ்பெயின் ஜனாதிபதி மாண்புமிகு திரு. சான்செஸ் கூட அதை எப்படிப் பாராட்டினார் என்பதைப் பகிர்ந்து கொண்ட கடிதத்தைப் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றார். "விக்சித் பாரத்" (வளர்ந்த பாரதம்) அமைப்பதில் இளைஞர்களின் பங்கில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அர்ப்பணிப்புடன் நுண்கலைகளைத் தொடர பிரதமர் மோடி அவரை ஊக்குவித்தார். அவர் தனது தனிப்பட்ட தொடர்பை வெளிப்படுத்தி, அவரது குடும்பத்தினருக்கு அன்பான தீபாவளி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்த தியா, அந்தக் கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டினார், அவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கௌரவத்தைக் கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைந்தனர். "எங்கள் நாட்டின் சிறிய பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மோடி ஜி, உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கியதற்கு நன்றி," என்று கூறிய தியா, பிரதமரின் கடிதம் வாழ்க்கையில் தைரியமான செயல்களைச் செய்ய தன்னை ஆழமாகத் தூண்டியது, மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்ய அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

திவ்யாங்களுக்கு (ஊனமுற்றோர்) அதிகாரம் அளிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் பிரதமர் மோடியின் இந்தச் செய்கை அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகம்யா பாரத் அபியான் (இந்தியாவில் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம்) போன்ற பல முயற்சிகள் முதல் தியா போன்ற தனிப்பட்ட தொடர்புகள் வரை, அவர் தொடர்ந்து ஊக்கமளித்து மேம்படுத்துகிறார். இந்த ஒவ்வொரு முயற்சியும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.