பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது. குறைக்கடத்திகள் துறை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் விவாதித்தார். நமது பூமியின் வளர்ச்சிப் பாதையை இந்தத் துறை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து திரு மோடி பேசினார். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுவதையும் அவர் எடுத்துரைத்தார்.
குறைக்கடத்தி துறையின் வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டியதுடன், நடைபெற்ற கூட்டம்,முன் எப்போதும் இல்லாதது என்றும், இதில் ஒட்டுமொத்த குறைக்கடத்தி துறையின் தலைவர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினர்.
மைக்ரான் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ரா, இந்தியாவில் குறைக்கடத்திகளை உருவாக்குவது மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்த பிரதமரின் பார்வை மிகவும் உற்சாகமானது என்றும், இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிரதமர் திரு மோடி அமைத்த கொள்கையும் மிகவும் உற்சாகமானது என்றும் கூறினார்.
செமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அஜித் மனோச்சா, இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் உத்வேகம் அளித்துள்ளது என்று கூறினார்.
என்.எக்ஸ்.பி தலைமை நிர்வாக அதிகாரி திரு கர்ட் சீவர்ஸ், பிரதமரைப் போல குறைக்கடத்தி துறையில் ஆழமான நிபுணத்துவம் பெற்ற வேறு எந்த உலகத் தலைவரையும் தாம் சந்தித்ததில்லை என்று கூறினார்.
டி.இ.பி.எல் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரந்தீர் தாக்கூர், பிரதமரின் பார்வை மற்றும் நம் நாட்டின் எதிர்காலத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பது குறித்து குறைக்கடத்தி தொழில் மிகவும் உற்சாகமாக உள்ளது என்று கூறினார். வளர்ந்த பாரதம் திட்டத்தில் குறைக்கடத்திகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: