தாமஸ் கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்ற இந்திய பேட்மிண்டன் அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
அணியினரைப் பாராட்டிய பிரதமர் விளையாட்டு பகுப்பாய்வாளர்கள் இது இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வெற்றி என்று கணக்கில் கொள்வார்கள் என்றார். இந்த அணி எந்த சுற்றிலும் தோல்வி அடையவில்லை என்பது தமக்கு சிறப்பு மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.
எந்த கட்டம் அவர்கள் வெற்றிபெறப் போகிறார்கள் என்ற உணர்வைத் தந்தது என்று விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் வினவினார். காலிறுதிக்குப் பின் இந்த அணியின் மன உறுதி இறுதிவரை செல்வதற்கு மிகவும் பலமாக இருப்பதைக் கண்டதாகக் கிடாம்பி ஸ்ரீகாந்த் பிரதமரிடம் தெரிவித்தார். அணி உணர்வு உதவி செய்ததாகவும் ஒவ்வொரு வீரரும் தமது 100 சதவீதத் திறனை தந்ததாகவும் பிரதமரிடம் அவர் கூறினார்.
பயிற்சியாளர்களும் அனைத்து பாராட்டுக்கும் தகுதியானவர்கள் என்று பிரதமர் தெரிவித்தார். நீங்கள் அனைவரும் இத்தகைய சாதனை மிக்க தருணத்தை பெற்றிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த அணியும் வாழ்த்துக்களுக்கு உரியது. இந்தியாவுக்குத் திரும்பும்போது அவர்களுடன் உரையாடவும் அவர்களின் அனுபவங்களைக் கேட்கவும் தாம் விரும்புவதால் விளையாட்டு வீரர்கள் தங்களின் பயிற்சியாளர்களுடன் தமது இல்லத்திற்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல் போன்ற விளையாட்டுக்களை மேற்கொண்டுள்ள இளம் சிறார்களுக்கும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கும் வெற்றிகரமான அணியின் செய்தியை பிரதமர் கேட்டார். அணியின் சார்பாக பேசிய ஸ்ரீகாந்த், தற்போது இந்தியாவில் விளையாட்டுகளுக்கு மிகச்சிறந்த ஆதரவு இருப்பதாகக் கூறினார். நல்ல பயிற்சியாளர்களும் அடிப்படை வசதிகளும் இருக்கின்றன என்றும் அவர்கள் உறுதியுடன் இருந்தால் சர்வதேச நிலையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். நூறு சதவீத அர்ப்பணிப்புடன் பணி செய்தால் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கிடாம்பி ஸ்ரீகாந்த் கூறினார்.
ஒரு சவாலான பணியாக இருக்கும் விளையாட்டில் அவர்களை ஊக்கப்படுத்தியதற்காகவும் இறுதிவரை அவர்களுக்குத் துணைநின்றதற்காகவும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களையும் பிரதமர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் கொண்டாட்ட மகிழ்வில் இணைந்த பிரதமர் தொலைபேசி அழைப்பின் நிறைவாக "பாரத் மாதா கி ஜே" என்று முழக்கமிட்டார்.
A special interaction with our badminton 🏸 champions, who have won the Thomas Cup and made 135 crore Indians proud. pic.twitter.com/KdRYVscDAK
— Narendra Modi (@narendramodi) May 15, 2022