உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி செலுத்துவதாக இருந்தாலும் அல்லது மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக இருந்தாலும், சுகாதாரத்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கொரோனோ பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் 130 கோடிப் பேர் காட்டிய உறுதிப்பாடு புதிய இந்தியாவின் வலிமைக்கு சான்றாகும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
“"கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் 130 கோடி பேர் காட்டிய உறுதியானது, புதிய இந்தியாவின் ஆற்றலுக்கான அங்கீகாரமாகும். உள்நாட்டு தடுப்பூசிகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி பிரச்சாரமாக இருந்தாலும் அல்லது மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக இருந்தாலும், நாடு சுகாதாரத் துறையில் சாதனை படைத்துள்ளதை இது காட்டுகிறது”.
कोरोना से लड़ाई में 130 करोड़ देशवासियों ने जिस संकल्प शक्ति का परिचय दिया है, वो नए भारत के सामर्थ्य की पहचान है। स्वदेशी टीकों के साथ विश्व का सबसे बड़ा मुफ्त वैक्सीनेशन अभियान हो या मेडिकल इंफ्रास्ट्रक्चर का विकास, स्वास्थ्य के क्षेत्र में देश नित नए मानदंड स्थापित कर रहा है। pic.twitter.com/E92ZC9UxcA
— Narendra Modi (@narendramodi) April 12, 2022