பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டின் நோக்கம் தேர்வு தொடர்பான அனைத்து வகையான மன அழுத்தங்களிலிருந்தும் மாணவர்களை விடுவிப்பதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கோடர்மாவில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டினைப் படித்த பின் தேர்வு தொடர்பான பதற்றத்திலிருந்து விடுபட்டதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பதிவிட்டிருந்த ட்விட்டருக்கு பதிலளித்த திரு மோடி இவ்வாறு கூறினார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மிக நன்று! தேர்வு தொடர்பான அனைத்து வகையான மன அழுத்தங்களிலிருந்தும் மாணவர்கள் விடுபட வேண்டும், அதுவே பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டின் நோக்கம்...."
बहुत अच्छा! विद्यार्थी परीक्षा को लेकर हर प्रकार के तनाव से मुक्त हों, यही तो एग्जाम वॉरियर्स का उद्देश्य है… https://t.co/d9pbPrzzoS
— Narendra Modi (@narendramodi) February 25, 2023