உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும், உலகளவில் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவை முக்கியமானவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் என்கோஸி ஒகோன்ஜோ-இவெலாவின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"உங்கள் ஆதரவு மற்றும் மதிப்புமிக்க நுண்ணறிவுத் திறன்களுக்கு நன்றி. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கும் உலகளவில் வாழ்க்கையை மாற்றுவதற்கும் முக்கியமானதாகும். @NOIweala"
Thank you for your support and valuable insights. The emphasis on Digital Public Infrastructure, AI and data for governance is key to achieving inclusive growth and transforming lives globally. @NOIweala https://t.co/gdfID6oZza
— Narendra Modi (@narendramodi) November 19, 2024