உத்தரபிரதேசத்தின் கஜனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெல்கல் - சிக்ரிகஜ் இடையேயான 8 கிலோமீட்டர் தூர சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அப்பகுதி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த சான்ட்கபிர்நகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரவீன் நிஷட்–டின் டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
அதில், பிரதமர் கூறியிருப்பதாவது:
"சாலை இணைப்பு வசதிகளில் நாட்டின் செழுமை அடங்கியிருக்கிறது என்பதால்தான், அது நம்முடைய முன்னுரிமையில் முன்னணி வகிக்கிறது."
बहुत-बहुत बधाई। कनेक्टिविटी में ही देश की समृद्धि निहित है और ये हमारी प्राथमिकताओं में सबसे ऊपर है। https://t.co/tHDv53h5j9
— Narendra Modi (@narendramodi) February 25, 2023