Quote“இயற்கைக்கும், மகிழ்ச்சிக்கும் அப்பால், கோவா என்பது வளர்ச்சியில் புதிய மாதிரி, கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு, பஞ்சாயத்து முதல் அரசு நிர்வாகம் வரை வளர்ச்சிக்கான ஒருமைப்பாடு ஆகியவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது”
Quote“திறந்தவெளியில் மலம் கழிக்காதது, மின்சாரம், குழாய் மூலம் குடிநீர், ஏழைகளுக்கு உணவுப் பொருள் விநியோகம் போன்ற அனைத்து முக்கியத் திட்டங்களிலும் கோவா 100% சாதித்துள்ளது”
Quote“ஸ்வயம்பூர்ண கோவா என்பது கோவா குழுவில் புதிய குழு உணர்வின் விளைவாகும்”
Quote“கோவாவில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியிருப்பது விவசாயிகள், கால்நடைப் பராமரிப்போர், மீனவர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவும்”
Quote“சுற்றுலாவைக் கொண்டுள்ள மாநிலங்கள் தடுப்பூசி இயக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளன, இதனால் கோவா பெருமளவில் பயனடைந்துள்ளது”

ஸ்வயம்பூர்ண(தன்னிறைவு) கோவா  திட்டம் மூலம் தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றிய கோவா மக்களை நான் வரவேற்கிறேன்.  உங்களின் அயராத முயற்சியால் கோவாவிலேயே கோவா மக்களின்  தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

 

கோவா தன்னிறைவுத் திட்டப் பயனாளிகளுடனான கலந்துரையாடிலின் போது,  அரசு ஆதரவுக்கும், மக்களின் கடின உழைப்புக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருக்கும்போது ஏற்படும் மாற்றம் மற்றும் தன்னம்பிக்கையை நாம் பார்த்தோம். கோவாவுக்கு அர்த்தமுள்ள மாற்றத்துக்கானப் பாதையைக் காட்டிய  முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த்  அவர்களே, மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அவர்களே, கோவா துணை முதல்வர் திரு மனோகர் அஜ்கோன்கர் அவர்களே, இதர கோவா அமைச்சர்களே, எம்.பிக்களே, எம்.எல்.ஏ.க்களே, அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளே, ஜில்லா பரிஷத் உறுப்பினர்களை, பஞ்சாயத்து உறுப்பினர்களே, சகோதார சகேதாரிகேள! 

கோவா என்றால் மகிழ்ச்சி, கோவா என்றால், இயற்கை, கோவா என்றால் சுற்றுலா என கூறப்படுகறது. ஆனால், இன்று கோவா என்பது வளர்ச்சியில் புதிய மாதிரி, கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு, பஞ்சாயத்து முதல் அரசு நிர்வாகம் வரை வளர்ச்சிக்கான ஒருமைப்பாடு என நான் கூறுவேன்.

|

நண்பர்களே,

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதது,  மின்சாரம், குழாய் மூலம் குடிநீர், ஏழைகளுக்கு உணவுப் பொருள் விநியோகம் போன்ற அனைத்து முக்கியத் திட்டங்களிலும் கோவா 100% சாதித்துள்ளது.

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன்பாக 100 கோடி கொவிட் தடுப்பூசி என்ற மிகப் பெரிய இலக்கை இந்தியா கடந்தது. இதிலும், முதல் டோஸ் தடுப்பூசியில் 100 சதவீதச் சாதனையை கோவா படைத்துள்ளது. 2வது டோஸ் தடுப்பூசியிலும் 100 சதவீதச் சாதனையை படைக்க கோவா அனைத்து முயற்சிகளும் எடுக்கிறது

 

சகோதார, சகோதரிகளே,

பெண்களுக்கு வசதியையும், கண்ணியத்தையும் அளிக்கும் மத்திய அரசின் திட்டங்களை, கோவா வெற்றிகரமாக அமல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விரிவுபடுத்தவும் செய்கிறது. கழிவறைகள் கட்டுவது, உஜ்வாலா கேஸ் இணைப்பு வழங்குவது, ஜன்தன் வங்கிக் கணக்கு ஏற்படுத்துவது போன்ற அனைத்திலும் கோவா சிறப்பானப் பணியைச் செய்துள்ளது.  

 

சகோதர, சகோதரிகளே,

 

கொரோனாவோடு, புயல், வெள்ளம் போன்ற சவால்களையும் கோவா சந்தித்தது. கோவா சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை நான் உணர்கிறேன். இந்தச் சவால்களுக்கு இடையிலும், கோவா அரசும், மத்திய அரசும், கோவா மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை இரட்டைப் பலத்துடன் அளித்தது.  கோவாவில் வளர்ச்சிப் பணிகள் நிற்க நாங்கள் அனுமதிக்கவில்லை. கோவா வளர்ச்சியில் அடிப்படையான, கோவா தன்னிறைவுத் திட்டத்தை செயல்படுத்தியற்காக பிரமோத் மற்றும் குழுவினரை பாராட்ட விரும்புகிறேன்.  இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த அரசு உங்கள் வாசலில் என்ற மற்ற திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

|

நண்பர்களே,

மக்களுக்கு ஆதரவான, திறனுள்ள அரசின் நீட்டிப்புதான் இத்திட்டம்.  இந்த உணர்வுடன்தான் கடந்த 7 ஆண்டுகளாக நாடு முன்னோக்கிச் செல்கிறது. மக்களிடம் அரசு சென்று, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் நிர்வாகம்.  மத்திய அரசின் பல திட்டங்களில் 100 சதவீத வெற்றியை கோவா பெற்றதுபோல், இதர திட்டங்களில் 100 சதவீத இலக்கை கோவா விரைவில் அடையும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

|

நண்பர்களே,

கோவாவைப் பற்றி நான் பேசினால், அதில் கால்பந்து பற்றி குறிப்பிடாமல்  இருக்க முடியாது. கால்பந்து மீது கோவாவுக்கு உள்ள ஆர்வம் விதிவிலக்கானது. இலக்கை அடைய வேண்டும் என்ற உணர்வு கோவாவில் ஒரு போதும் தவறியதில்லை. கோவாவில் முன்பு இருந்த அரசுகளிடம், சாதகமானச் சூழலை உருவாக்கும்  குழு உணர்வுக் குறைவு. நீண்ட காலமாக, கோவாவில் நல்ல நிர்வாகத்தை விட அரசியல் நலன் முக்கியமானதாக இருந்தது.  அரசியல் நிலையற்றத் தன்மையும் கோவாவின் வளர்ச்சியைப் பாதித்தது.  பிரமோத் குழுவினர், கோவுக்கு புதிய உச்சத்தை அளிக்கின்றனர். இன்று புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் கோவா முன்னேறுகிறது.

 

சகோதார மற்றும் சகோதரிகளே,

கோவா வளமான ஊரகப் பொருளாதாரம் மற்றும் ஈர்க்கக்கூடிய நகர்ப்புற வாழ்க்கையைக் கொண்டுள்ளது. கோவாவில் பண்ணைகளும் உள்ளன, கடல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களும் உள்ளன.  தற்சார்பு இந்தியாவுக்குத் தேவையான அனைத்தும் கோவாவில் உள்ளது. ஆகையால், கோவாவின் ஒட்டமொத்த மேம்பாட்டில் இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

 

நண்பர்களே,

இரண்டாவது விமான நிலையம், போக்குவரத்து மையத்துக்கான கட்டுமானம், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய கேபிள் பாலம், ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம் ஆகியவை கோவாவின் தேசிய மற்றும் சர்வதே இணைப்புக்கான புதிய கோணங்களை அளிக்கவுள்ளன.

|

சகோதார சகோதரிகளே,

கோவாவில் மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு, விவசாயிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் நமது மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.  கோவாவின் ஊரகக் கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கான நிதி, 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரகக் கட்டமைப்பை மேம்படுத்த கோவாவுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கியுள்ளது.  இது தற்போது நடைபெறும் வேளாண் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் தொடர்பானத் திட்டங்களுக்குப் புதிய உந்துதலை அளிக்கும்.

 

நண்பர்களே,

விவசாயிகள் மற்றும் மீனவர்களை வங்கிகளுடனும், சந்தைகளுடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டங்களில், கோவா அரசு உறுதியுடன் உள்ளது. கிசான் கடன் அட்டை திட்டம் இங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆடு,மாடு மேய்ப்பவர்களும், மீனவர்களும் முதல் முறையாக இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.  கோவாவில் குறுகிய காலத்துக்கும் புதிய கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழும் கோவா விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். இந்த முயற்சிகளால், பல புதிய நண்பர்கள் விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.  ஓராண்டுக்குள், கோவாவில் காய்கறி, பழங்கள் உற்பத்தி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்த முறை விவசாயிகளிடமிருந்து கோவா அதிகளவில் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

 

நண்பர்கேள,

கோவா தன்னிறைவுத் திட்டத்தில், உணவு பதப்படுத்துதல் தொழில் முக்கிய சக்தியாக இருக்கப்போகிறது. மீன் பதப்படுத்துதல் தொழிலில் இந்தியாவின் பலமாக கோவா மாற முடியும்.  இந்திய மீன்கள் எல்லாம், கிழக்கு ஆசிய நாடுகளில் பதப்படுத்தப்பட்டு உலகச் சந்தையை அடைகின்றன. இந்த நிலையை மாற்ற மீன்வளத்துறைக்கு  முதல் முறையாக மிகப் பெரிய அளவில் உதவி அளிக்கப்படுகிறது.  கோவா மீனவர்கள், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகின்றனர்.

 

நண்பர்களே,

கோவாவின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா மேம்பாடு, இந்தியாவின் வளர்ச்சியில் நேரடியாக தொடர்புடையது.  கடந்த சில ஆண்டுகளாக கோவா சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.  வருகையின்போது விசா பெரும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.   கடந்த சில ஆண்டுகளாக கோவாவின் சுற்றுலா மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோடிக்கணக்கான நிதியுதவி கோவாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

இந்தியாவின் சுற்றுலா மையங்களாக உள்ள கோவா உட்பட சில மாநிலங்களில், தடுப்பூசித் திட்டத்தில்  சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கோவா வெகுவாக பயனடைந்துள்ளது. தகுதியான அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பு ஊசிப்போட கோவா 24 மணி நேரமும் நடவடிக்கை எடுத்தது. தற்போது நாடு 100 கோடித் தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில், கோவா சுற்றுலாத்துறை புதிய சக்தியை காணவுள்ளது. கோவாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் அதிகரிப்பர்.

 

சகோதர மற்றும் சகோதரிகளே,

வளர்ச்சிக்கான சாத்தியங்களை 100 சதவீதம் பயன்படுத்தும்போதுதான் கோவா தன்னிறைவு அடையும். சாதாரண மனிதனின் விருப்பங்களை நனவாக்க, கோவா தன்னிறைவுத் திட்டம்தான் தீர்வு. தன்னிறைவு கோவாவில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகள் உள்ளன. இது 5 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளுக்கான திட்டம் அல்ல. அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கின் முதல் படி. இந்த நிலையை அடைய கோவாவில் உள்ள ஒவ்வொருவரும் செயல்பட  வேண்டும். இதற்கு கோவாவில், இரட்டை இன்ஜின் வளர்ச்சித் தொடர வேண்டும். கோவாவிற்கு தற்போதுள்ள வெளிப்படையான கொள்கை, நிலையான அரசு மற்றும் ஆற்றல்மிக்க தலைமைத் தேவை. கோவாவின் முழு ஆசிர்வாதத்துடன், தன்னிறைவுக் கோவா தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவோம். இதே நம்பிக்கையுடன், உங்களுக்கு நல் வாழ்த்துகள்.

 மிக்க நன்றி!

  • Jitendra Kumar March 29, 2025

    🙏🇮🇳
  • mahendra s Deshmukh January 04, 2025

    🙏🙏
  • didi December 25, 2024

    🙏
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • krishangopal sharma Bjp December 18, 2024

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
  • Rahul Rukhad October 08, 2024

    bjp
  • Manish sharma September 19, 2024

    nmo
  • Sanjay Shivraj Makne VIKSIT BHARAT AMBASSADOR May 25, 2024

    new india
  • Jitendra Kumar May 25, 2024

    🌹🌹🌹
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar

Media Coverage

'Operation Brahma': First Responder India Ships Medicines, Food To Earthquake-Hit Myanmar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 30, 2025
March 30, 2025

Citizens Appreciate Economic Surge: India Soars with PM Modi’s Leadership