நண்பர்களே,
சுழற்சி பொருளாதார தொழில்நுட்ப போட்டியை நடத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து கடந்தாண்டு ஜூன் மாதம், பிரதமர் மோரிசன் மற்றும் நானும் ஆலோசித்தோம்.
எங்களது யோசனை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த கூட்டு முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்காக, எனது அருமை நண்பர் பிரதமர் ஸகாட் மாரிசனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கொவிட்-19 தொற்று இருந்தபோதிலும், இதில் பங்கேற்ற அனைவரின் அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் வெற்றியாளர்கள்.
நண்பர்களே,
பருவநிலை மாற்றத்தால், ஏற்படும் சவால்களை மனிதர்கள் சந்திப்பதால், இந்த போட்டியின் கருப்பொருள், ஒட்டுமொத்த உலகுக்கும் பொருத்தமானதாக உள்ளது.
நுகர்வு சார்ந்த பொருளாதார மாதிரிகள், நமது உலகுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
பூமி தாய் வழங்கும் அனைத்துக்கும் நாம் உரிமையாளர்கள் இல்லை. ஆனால், வருங்கால சந்ததியினர் அனைவருக்கும் நாம் பாதுகாவலர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.
நமது தயாரிப்பு முறையை அதிக திறம்படவும், குறைந்த மாசு ஏற்படுத்துவதாக ஆக்குவது மட்டும் போதாது.
ஒருவர் எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக ஓட்டுகிறார் என்பது முக்கியம் அல்ல. செல்லும் திசை தவறாக இருந்தால், அவர் தவறான இடத்துக்குதான் செல்ல வேண்டும்.
அதனால், நாம் சரியான திசையில் செல்ல வேண்டும்.
நமது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், நமது நுகர்வு முறையை நாம் கவனிக்க வேண்டும்.
இங்குதான் சுழற்சி பொருளாதாரம் என்ற கருத்து வருகிறது.
நமது பல சவால்களுக்கு தீர்வு காண்பதில், இது முக்கிய நடவடிக்கையாக இருக்க முடியும்.
மறு சுழற்சி, பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, கழிவுகளை அகற்றுவது, வளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது போன்றவை நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
இந்த தொழில்நுட்ப போட்டி, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மாணவர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடமிருந்து புதுமை கண்டுபிடிப்பு தீர்வுகளை கண்டுள்ளது.
இந்த புதுமை கண்டுபிடிப்புகள், சுழற்சி பொருளாதார தத்துவத்துக்கு உங்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
உங்களது புதுமை கண்டுபிடிப்புகள், நமது இரு நாடுகளும், சுழற்சி பொருளாதார தீர்வுகளில் முன்னணி வகிக்க ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கு இந்த கருத்துக்களை, மேலும் வளர்ப்பது குறித்து நாம் இப்போதே ஆராய வேண்டும்.
நண்பர்களே,
புதிய கருத்துக்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் அபாயத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றிலிருந்து தான் இளைஞர்களின் சக்தி வெளிப்படுகிறது.
இன்றை இளம் பங்களிப்பாளர்களின் சக்தி மற்றும் உத்வேகம்தான், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான, முன்னோக்கு கூட்டுறவின் அடையாளம்.
இன்றைய இளைஞர்களின் சக்தி, படைப்பாற்றல் மற்றும் சிந்தனையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அவர்களால், இரு நாடுகளுக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலகத்துக்கும் நிலையான, முழுமையான தீர்வுகளை வழங்க முடியும்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வலுவான கூட்டு, கொவிட்டுக்கு பிந்தைய உலகை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும்.
நமது இளைஞர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், தொடக்க நிறுவனங்கள் இந்த கூட்டுறவின் முன்னணியில் இருப்பர்.
நன்றி !
மிக்க நன்றி !