இங்கிலாந்து பிரதமர் மேதகு தெரசா மே, அவர்களே,
என்னோடு பணியாற்றும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்களே,
சி.ஐ.ஐ.யின் தலைவர் டாக்டர் நவ்ஷாத் போர்ப்ஸ் அவர்களே,
கழகத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
புகழ்மிக்க அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களே,
இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் தொழில்துறை தலைவர்களே,
மதிப்புமிகு பெண்கள் மற்றும் ஆண்களே,
1. நான் 2016, இந்தியா-,இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
2. நான் கடந்த வருடம் நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு வருகை புரிந்தபோது, இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையயான நட்பை பலப்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்ப மாநாட்டை நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். இது 2016-ம் ஆண்டை “கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடித்தலுக்கான இந்தியா-இங்கிலாந்து வருடம்” என அனுசரிப்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
3. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து பிரதமர் மேதகு தெரசா மே அவர்கள் பங்கேற்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதமர் அம்மையார் அவர்களே, இந்தியா உங்கள் இதயத்தில் மிக நெருக்கமாக உள்ளதையும், நீங்கள் இந்தியாவிற்கு மிகப் பெரிய நண்பராக இருப்பதையும் நான் அறிவேன். சமீபத்தில் நீங்கள் உங்களது இல்லத்தில் இந்தியா சமூகத்தினருடன் ‘தீபாவளி’யை கொண்டாடினீர்கள்!
4. இன்று இங்கு உங்களின் பங்கேற்பு இருநாட்டு உறவில் நீங்கள் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் அண்டைநாடுகளுக்கு அடுத்து இருநாடுகளுக்கிடையேயான பயணமாக இந்தியாவை முதலில் தேர்ந்தெடுத்தது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவமாகும். உங்களை மனதார வரவேற்கிறோம்.
5. இன்று, உலகம், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மாற்றங்கள் நடைபெறும் நிலையில் மாறுதலுக்கான இடத்தில் உள்ளது. வரலாற்றில் தொடர்புடைய இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் 21-ம் நூற்றாண்டில் அறிவு பொருளாதாரத்தை விளக்கும்வகையில் ஒன்றாக பணியாற்றுவது மிக முக்கியமாகும்.
6. தற்போதைய உலக சூழ்நிலையில் வணிகம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் பொருளாதார சவால்களை இருநாடுகளும் சந்தித்து வருகின்றன. ஆனால், நாம் ஒன்றாக நமது அறிவியல் சக்திகள் மற்றும் தொழில்நுட்ப வீரத்தின் மூலம் புதிய வாய்ப்புக்களை உருவாக்க இயலும் என நான் நம்புகிறேன்.
7. திறந்த முதலீட்டு சூழ்நிலையுடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக தற்போது இந்தியா விளங்குகிறது. எங்களது புதிய கண்டுபிடிப்பு தொழில்முனைவோர்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உடனான மிகப் பெரிய சந்தைகள், பூலோக ஆதாயங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார போட்டிகள் ஆகியவை உலக பொருளாதாரத்திற்கான புதிய வளர்ச்சி ஆதாரங்களை அளிக்கும்.
8. அதே போன்று, கடந்த காலங்களில் இங்கிலாந்தும் பெரிதான வளர்ச்சியை கண்டுள்ளது. அது கல்வி பெறுவதற்கான தாகம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குகிறது.
9. கடந்த ஐந்து ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் அதே நிலையில் இருந்தாலும், இருதிசைகளிலும் எங்களது முதலீடுகள் வலுவாக உள்ளது. இங்கிலாந்தில் இந்தியா 3வது மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. இந்தியாவில் இங்கிலாந்து மிகப் பெரிய ஜி20 முதலீட்டாளராக உள்ளது. இரு நாடுகளும் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரங்களுக்கு உதவும் வண்ணம் அதிக அளவு வேலைவாய்ப்பினை அளித்துள்ளது.
10. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா-இங்கிலாந்தின் தற்போதைய கூட்டுறவு ‘உயர் தரம்’ மற்றும் ‘உயர் தாக்கம்’ ஆராய்ச்சி பங்களிப்பினால் இயங்குகிறது. இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாக, ‘நியூட்டன்-பாபா” திட்டத்தின் கீழ் நாங்கள் சமூக சவால்களுக்கு தீர்வு காணும் பொருட்டு அடிப்படை அறிவியலிலிருந்து தீர்வு அறிவியலை உள்ளடக்கிய விரிவான கூட்டுபணிகளை துவக்கி உள்ளோம்.
11. நமது அறிவியல் சமூகங்கள், பரவும் நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகள், புதிய எளிய பொருட்கள், தூய்மையான சக்தி மற்றும் தட்பவெட்பநிலை மாறுதல் மட்டுப்படுத்தலுக்கான தீர்வு அளித்தல், மற்றும் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பயிர் உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.
12. 10 மில்லியன் பவுண்டுகள் கூட்டு முதலீட்டுடன் சூரிய எரிசக்திக்கான இந்தியா-இங்கிலாந்து தூய சக்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை அமைக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். 15 மில்லியன் பவுண்டுகள் கூட்டு முதலீட்டுடன் நுண்ணுயிர்க் கொல்லிகள் எதிர்ப்பிற்கான ஒரு புதிய முனைப்பும் துவங்கப்பட்டுள்ளது.
13. நோய் தவிர்ப்பு சுகாதார பேணலை முழுமையான வகையில் அணுகும் வகையில் நவீன அறிவியல் விசாரணையோடு இந்தியாவில் உள்ள பரந்த பாரம்பரிய அறிவுத் தளத்தை வளர்ப்பதற்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து பங்குதாரராக இருக்கும் என நான் கருதுகிறேன். நாம் எதிர்கொள்ளும் சில நவீன வாழ்க்கை முறை வியாதிகளுக்கு இது தீர்வளிக்கும்.
14. தொழிற்துறை ஆராய்ச்சியில் இங்கிலாந்துடன் இந்தியா பங்குதாராக அமைந்து மேற்கொள்வது நமது முக்கிய உற்சாகமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது. சி.ஐ.ஐ.யின் உலக கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப கூட்டு அல்லது ஜி.ஐ.டி.ஏ தளம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இங்கிலாந்தின் இன்னோவேட் அமைப்பின் ஆதரவுடன் எளிதான உடல்நலபாதுகாப்பு, தூய்மையான தொழில்நுட்பம், உருவாக்குதல் மற்றும் ஐ.சி.டி.யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள செய்துள்ளது.
15. இப்பிரிவுகள் அறிவியல் அறிவை தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களாக மாற்றி இந்தியா மற்றும் இங்கிலாந்து வணிகங்களில் புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது. கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப-தொழில்முனைவோர்களை வளர்க்கும் வகையிலான இருநாட்டு திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இங்கு கூடியுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் பங்களிக்க கேட்டுக் கொள்கிறேன்.
16. நமது உறவில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவை முக்கிய வளர்ச்சி ஆதாரங்களாக உள்ளன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நமது தொழில்நுட்ப பலம் மற்றும் அறிவியில் அறிவு பரிமாற்றம் அடிப்படையில் இருதரப்பும் பயனடையும் வகையிலான நமது செயல் உத்தி சார்ந்த கூட்டை வலுவாக்க இம்மாநாடு குறிக்கோளாக கொண்டுள்ளது.
17. அறிவியல் உலகமாகும் ஆனால் தொழில்நுட்பம் உள்ளூர் ஆகும் என நான் எப்போதும் கூறுவேன். அந்த வகையில், இத்தகைய மாநாடுகள் ஒருவருக்கொருவரின் தேவைகளை அறிந்துக் கொள்ளவும் அந்த புரிந்துணர்வின் அடிப்படையில் எதிர்கால உறவை வலுப்படுத்தவதற்கான வாய்ப்பையும் அளிக்கின்றன.
18. எனது அரசின் முக்கிய வளர்ச்சி இயக்கங்கள், நமது தொழில்நுட்ப சாதனைகள் மற்றும் உணர்வுகள் மற்றும் நமது இருநாடுகளுக்கிடையேயான உறுதியான உறவுகள் ஆகியவற்றை ஒருமுகப்படுத்துதல், இந்திய மற்றும் பிரிட்டிஷ் தொழிற்சாலைகளுக்கு அதிகளவிலான புதிய வளர்ச்சிக்கான வழிகளை அளிக்கும்.
19. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கூட்டாக செயல்பட்டு தகவல் ஒருமுகப்படுத்தல் மற்றும் மக்களை மையமாக கொண்ட இணைய-அரசாட்சியை விரிவாக்க வாய்ப்புள்ளது.
20. 154% நகர தொலை-அடர்த்தியை உள்ளடக்கிய பில்லியன் தொலைபேசி இணைப்புகளை இந்தியா விரைவில் பெறும். நாங்கள் 350 மில்லியன் இண்டர்நெட் உபயோகிப்பாளர்களை கொண்டுள்ளோம். தொலைதூர இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 100,000 கிராமங்களில் இணைப்பை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இத்தகைய அளப்பெரிய வளர்ச்சி, இங்கிலாந்து மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு புதிய டிஜிட்டல் நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய சந்தைகளை உருவாக்கியுள்ளது.
21. இந்தியாவின் துரித வளர்ச்சி நிதிச் சேவைகள் பிரிவில் இயற்கையான ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் 220 மில்லியன் புதிய குடும்பங்களை ‘ஜன் தன் யோஜனா’ குடையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இந்தியாவிற்கு அடுத்த மிகப் பெரிய மாற்றமாக ‘பின்டெக்’ உருவாகி வருகிறது. இந்த நிதி சேர்ப்புத் திட்டத்தை, உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக உருவாக்குவதற்காக மொபைல் தொழில்நுட்பம் மற்றும் தனி அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது.
22. நிதி தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிதியில் இங்கிலாந்தின் தலைமைப்பண்புடன், இந்த இயக்கத்தில் நமது தொழிற்நிறுவனங்கள் புதிய வாய்ப்புக்களை உருவாக்க இயலும்.
23. இருநாடுகளுக்கு இடையேயான பங்கேற்பில் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ முக்கிய பிரிவாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்திட்டத்தின் கீழ் உயர்அளவிலான உற்பத்தி சிறப்பான முயற்சியாக இருக்கும். பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மற்றும் மின்னணுவியல் பொறியியல் ஆகியவற்றில் எங்களது தாரள வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையின் மூலம் இங்கிலாந்து முக்கிய நாடாக பயன் பெறும்.
24. ‘ஸ்மார்ட் நகரம்’ இயக்கம், துரிதமாக வளர்ந்து வரும் நமது நகரமாயக்கல் சுற்றுச்சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பை குறிக்கோளாக கொண்டுள்ளது. புனே, அமராவதி மற்றும் இந்தோர் ஆகிய இடங்களுக்கான திட்டங்களில் இங்கிலாந்திடம் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து நிறுவனங்கள் ஏற்கனவே 9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக நான் அறிந்து கொண்டேன் மற்றும் நான் இன்னும் அதிகளவிலான பங்கேற்பை உற்சாகப்படுத்துகிறேன்.
25. நமது தொழில்நுட்ப-உபயோக இளைஞர்களுக்காக, ‘துவங்கு இந்தியா’ திட்டம் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை தொழில்முனைவோரோடு ஒருங்கிணைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இன்று, இந்தியா மற்றும் இங்கிலாந்து முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை கொண்டு உலகின் தலைசிறந்த மூன்று மிகப்பெரிய தொழில்துவங்கும் முகமைக்கான இடங்களை பெற்றுள்ளது.
26. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வணிக செயலிகள் உருவாக்குவதற்கான வலிமையான மற்றும் உறுதியான சூழ்நிலையை நாம் இணைந்து உருவாக்குவோம்.
27. நமது வணிக உறவுகளில் புதிய தொழில் கூட்டுக்களை உருவாக்கும் வகையில், உயர்அளவிலான தயாரிப்பு, உயரி-மருத்துவ சாதனங்கள், வடிவமைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் ஆகியவை இந்த மாநாட்டின் தலைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
28. இந்தியா மற்றும் இங்கிலாந்து, உலக சவால்களை எதிர்கொள்ளும் வண்ணம் உயர் தர அடிப்படை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அமைப்பை உருவாக்கி தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் என நான் நம்புகிறேன்.
29. இந்திய-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாடு உயர்கல்வி குறித்து கவனம் செலுத்துவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது மாணவர்களுக்கு கல்வி இன்றியமையாததாக இருப்பதோடு, நமது எதிர்கால உறவையும் விரிவாக்க செய்யும். ஆகவே, நாம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளில் அதிகளவிலான இளைஞர்களை பங்கேற்க செய்வதை உற்சாகப்படுத்த வேண்டும்.
30 இங்கிலாந்தை பங்கேற்பு நாடாக கொண்டு இந்த முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையையும், இந்திய தொழில் கூட்டமைப்பையும் நான் பாராட்டுகிறேன். இந்த தொழில்நுட்ப மாநாடு இந்திய-இங்கிலாந்து உறவின் அடுத்த கட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டும் என நான் நம்புகிறேன். இது அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்ப வீரத்தை பரிமாற்றம் அடிப்படையிலான நமது பயணத்திற்கு அழைத்துச் செல்லும்.
31. இந்த மாநாடு வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பங்கேற்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்துக் கொண்டு பெருமை சேர்த்ததற்காகவும், புதிய இந்திய-இங்கிலாந்து உறவை கட்டமைப்பதற்கான அவரது கருத்துக்களையும் தொலைநோக்குபார்வையையும் தெரிவித்ததற்காகவும் பிரதமர் தெரசா மே அவர்களுக்கு நான் மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.