கோவா ஆளுநர் திரு.பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, பிரபல இளைய முதலமைச்சர் திரு.வைத்ய பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு.சர்பானந்த சோனாவால் அவர்களே, திரு.ஸ்ரீபத் நாயக் அவர்களே, டாக்டர் மகேந்திரபாய் முஞ்சபாரா அவர்களே, திரு சேகர் அவர்களே, உலகம் முழுவதிலும் இருந்து உலக ஆயுர்வேத மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அறிஞர்களே, நிபுணர்களே, இதர பிரதிநிதிகளே, தாய்மார்களே, பெரியோர்களே!
அழகிய நிலப்பரப்பான கோவாவில் நடைபெறும் உலக ஆயுர்வேத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திரண்டுள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். உலக ஆயுர்வேத மாநாட்டின் வெற்றிக்காக உங்கள் அனைவருக்கும் நான் மனப்பூர்வமாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பு ஆண்டு ஜி-20 அமைப்பு கூட்டம் இந்தியாவில் நடைபெறுவதுடன், அதற்கு தலைமையும் தாங்குகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்த ஆண்டின் ஜி-20 மாநாட்டின் கருப்பொருளாகும். உலக ஆயுர்வேத மாநாட்டில் உலகம் முழுவதுக்குமான சுகாதாரம் குறித்த பேச்சுக்களுடன் இந்த கருப்பொருள் குறித்தும் நீங்கள் விவாதித்தீர்கள். ஆயுர்வேத மருத்துவ முறையை பாரம்பரிய மருத்துவ முறையாக உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் ஒன்றிணைந்து மேலும் அதிக நாடுகள் ஆயுர்வேத முறையை அங்கீகரிக்கும் வகையில் எடுத்துச்செல்ல வேண்டும்.
நண்பர்களே,
ஆயுஷ் தொடர்பான 3 நிறுவனங்களையும் இன்று அர்ப்பணித்து வைப்பதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. கோவாவில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிலையம், காசியாபாத்தில் உள்ள தேசிய யுனானி மருத்துவ நிலையம், தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிலையம் ஆகியவை ஆயுஷ் சுகாதார கட்டமைப்புக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
சுகாதாரம் மற்றும் நலவாழ்வின் சர்வதேச விழாவாக சர்வதேச யோகா தினத்தை உலக நாடுகள் அனைத்தும் இன்று கொண்டாடுகின்றன. முன்னதாக புறக்கணிக்கப்பட்ட யோகா மற்றும் ஆயுர்வேதா இன்று மனித சமுதாயம் முழுமைக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மருந்துக்கான மையம் போன்ற நிலையங்களில் யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சி குறித்த அறிக்கைகள் சர்வதேச பிரபல பத்திரிகைகளில் வெளியிடப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
சகோதரர்களே, சகோதரிகளே,
ஆயுர்வேதம் என்பது சிகிச்சைக்காக மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஆயுர்வேதா நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
நண்பர்களே,
கோவா உலக ஆயுர்வேத மாநாட்டில் ஆயுர்வேதம் குறித்து அனைத்து வழிகளும் விவாதிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன் மூலம் ஆயுர்வேத முறையை ஒட்டுமொத்தமாக முன்னோக்கி எவ்வாறு எடுத்து செல்வது என்பது குறித்த வழிமுறைகள் தயார் செய்யப்பட வேண்டும். இதே நம்பிக்கையுடன் நான் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆயுஷ் மற்றும் ஆயுர்வேதத்துக்கு வாழ்த்துக்கள்.