உலக இந்திய உணவு 2024 அமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

பல நாடுகளின் பங்கேற்பு, உலக உணவுத் தொழில் 2024-ஐ உலகளாவிய உணவுத் தொழில், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியைச் சேர்ந்த பிரகாசமான ஒரு துடிப்பான தளமாக வெளிப்படுத்துகிறது. அதிகரித்து வரும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தவும், ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து இருவழி கற்றலில் ஈடுபடவும், பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

 

இந்தியா ஒரு துடிப்பான மற்றும் மாறுபட்ட உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இந்திய உணவுச் சூழலின் முதுகெலும்பு விவசாயிகள் ஆவர். சமையல் சிறப்பின் சத்தான மற்றும் சுவையான பாரம்பரியங்களை உருவாக்குவதை உறுதி செய்தவர்கள் விவசாயிகள். புதுமையான கொள்கைகள் மற்றும் கவனம் செலுத்தும் அமலாக்கம் மூலம் அவர்களின் கடின உழைப்பை நாம் ஆதரிக்கிறோம்.

 

நவீன சகாப்தத்தில், முற்போக்கான வேளாண் நடைமுறைகள், வலுவான நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம், உணவுத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உலகளாவிய அளவுகோல்களை இந்தியா அமைப்பதை உறுதி செய்வதே நமது முயற்சியாகும்.

 

கடந்த 10 ஆண்டுகளில், உணவு பதனப்படுத்துதல் துறையை மாற்றியமைக்க விரிவான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். உணவுப் பதனப்படுத்துதலில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கான, பிரதமரின் உழவர் மேம்பாட்டுத் திட்டம், நுண் உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல், உணவு பதனப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற பல்நோக்கு முன்முயற்சிகள் மூலம், நவீன உள்கட்டமைப்பு, வலுவான விநியோகச் சங்கிலிகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை நாடு முழுவதும் உருவாக்கி வருகிறோம்.

 

சிறு நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பது நமது தொலைநோக்குப் பார்வையின் முக்கியப் பகுதியாகும். நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செழித்து வளர்ந்து, உலகளாவிய மதிப்புச் சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், அதே நேரத்தில், பெண்களை குறுந்தொழில் முனைவோராக மாற்ற ஊக்குவித்து வருகிறோம்.

 

இத்தகைய சூழ்நிலையில், B2B கலந்துரையாடல்கள் மற்றும் கண்காட்சிகள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகள் மற்றும் நாடு, மாநில மற்றும் துறை சார்ந்த அமர்வுகள் மூலம் உலகத்துடன் பணியாற்ற உலக இந்திய உணவு திட்டம் ஒரு சிறந்த தளமாகும்.

 

கூடுதலாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் உலகளாவிய உணவு கட்டுப்பாட்டாளர்கள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வது, உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் பல மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட உலகளாவிய கட்டுப்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, உணவுப் பாதுகாப்பு, தர தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் போன்ற பரந்த அளவிலான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க வகை செய்யும்.

 

மேலும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் உணவு வீணாவதைக் குறைப்பதற்கும் உணவு கதிர்வீச்சு, ஊட்டச்சத்து மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த தாவர அடிப்படையிலான புரதங்கள் மற்றும் வட்டப் பொருளாதாரம் போன்ற முக்கியமான தலைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்.

 

நிலையான, பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் சத்தான உலகத்தை உருவாக்கும் கனவை நனவாக்கி, நாம் முன்னேறிச் செல்வோம்.

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India-UK CETA unlocks $23‑billion trade corridor, set to boost MSME exports

Media Coverage

India-UK CETA unlocks $23‑billion trade corridor, set to boost MSME exports
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 27, 2025
July 27, 2025

Citizens Appreciate Cultural Renaissance and Economic Rise PM Modi’s India 2025