"நமது பூமிக்கான இந்த போரில் சரியான முடிவுகளை எடுப்பவர்கள் மிக முக்கியமானவர்கள். இதுவே மிஷன் லைஃப்-யின் அடிப்படை"
“காலநிலை மாற்றத்தை வெறும் மாநாடுகளின் மூலம் மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் போராட வேண்டும்”
"மிஷன் லைஃப் என்பது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரை ஜனநாயகப்படுத்துவதாகும்"
"இந்திய மக்கள் கடந்த சில ஆண்டுகளில் மக்கள் இயக்கங்கள் மற்றும் நடத்தை மாற்றம் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராக நிறைய செய்துள்ளனர்"
"நடத்தை மாற்றங்களுக்கும் போதுமான நிதி முறைகள் உருவாக்கப்பட வேண்டும். மிஷன் லைஃப் போன்ற முன்னெடுப்புகளுக்கு உலக வங்கியின் ஆதரவு பல மடங்கு விளைவை ஏற்படுத்தும்”

உலக வங்கியின் தலைவர், மாண்புமிகு, மொராக்கோவின் ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களே எனது அமைச்சரவை சக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, லார்ட் நிக்கோலஸ் ஸ்டெர்ன், பேராசிரியர் சன்ஸ்டீன் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களே

வணக்கம்

 

பருவநிலை மாற்றத்தில் நடத்தை மாற்றத்தின் தாக்கம் குறித்து உலக வங்கி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என் இதயத்திற்கு நெருக்கமான பிரச்சினை. மேலும் இது ஒரு உலகளாவிய இயக்கமாக மாறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

சாணக்யர், ஒரு சிறந்த இந்திய தத்துவஞானி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை எழுதினார்: ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச || "சிறிய துளிகள் தண்ணீர், அவை ஒன்று சேர்ந்ததும், ஒரு பானையை நிரப்பும். அதேபோல், அறிவு, நற்செயல்கள் அல்லது செல்வம், படிப்படியாகக் கூடுகிறது." இதில் நமக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது. தானாகவே, ஒவ்வொரு துளி நீரும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இது போன்ற பல துளிகள் சேர்ந்து வரும்போது, ​​அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தானாகவே, பூமிக்கான ஒவ்வொரு நல்ல செயலும் முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்கள் ஒன்றாகச் செய்தால், அதன் தாக்கம் மிகப்பெரியது. நமது பூமிக்கான சரியான முடிவுகளை எடுக்கும் நபர்கள்  இந்தப் போரில் முக்கியமானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் மிஷன் லைஃப்இன் அடிப்படை.

 

நண்பர்களே, இந்த இயக்கத்தின் விதை நீண்ட காலத்திற்கு முன்பே விதைக்கப்பட்டது. 2015ல், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், நடத்தை மாற்றத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசினேன். அதிலிருந்து நாம்  வெகுதூரம் வந்துவிட்டோம். 2022 அக்டோபரில், ஐநா பொதுச் செயலாளரும் நானும் மிஷன் லைஃப் திட்டத்தைத் தொடங்கினோம். CoP-27 இன் விளைவு ஆவணத்தின் முன்னுரை நிலையான வாழ்க்கை முறை மற்றும் நுகர்வு பற்றி பேசுகிறது. பருவநிலை மாற்றத் துறையில் உள்ள வல்லுநர்களும் இந்த மந்திரத்தை ஏற்றுக்கொண்டது அற்புதம் ஆகும்.

 

நண்பர்களே, உலகெங்கிலும் உள்ள மக்கள் பருவநிலை மாற்றம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் இதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்று தெரியாததால், மிகுந்த கவலைப்படுகிறார்கள். அரசுகள் அல்லது உலகளாவிய நிறுவனங்களுக்கு மட்டுமே பங்கு உள்ளது என்று அவர்கள் தொடர்ந்து உணர வைக்கப்படுகிறார்கள். அவர்களும் பங்களிக்க முடியும் என்பதை அறிந்தால், அவர்களின் கவலை செயலாக மாறும்.

 

நண்பர்களே, பருவநிலை மாற்றத்தை மாநாட்டு அட்டவணையில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் சாப்பாட்டு மேசைகளில் இருந்தும் போராட வேண்டும். ஒரு யோசனை விவாத மேசையிலிருந்து சாப்பாட்டு மேசைக்கு நகரும்போது, ​​அது வெகுஜன இயக்கமாக மாறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களின் தேர்வுகள் உலகத்தின் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளச் செய்வது அவசியம். மிஷன் லைஃப் என்பது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரை ஜனநாயகப்படுத்துவதாகும். அன்றாட வாழ்வில் எளிய செயல்கள் சக்தி வாய்ந்தவை என்பதை மக்கள் உணர்ந்தால், சுற்றுச்சூழலில் மிகவும் சாதகமான தாக்கம் ஏற்படும்.

 

நண்பர்களே, வெகுஜன இயக்கங்கள் மற்றும் நடத்தை மாற்றத்தின் விஷயத்தில், இந்திய மக்கள் கடந்த சில ஆண்டுகளில் நிறைய செய்திருக்கிறார்கள். மக்களின் முயற்சிகள் இந்தியாவின் பல பகுதிகளில் பாலின விகிதத்தை மேம்படுத்தின. மக்கள்தான் மாபெரும் தூய்மை இயக்கத்தை முன்னெடுத்தனர். ஆறுகள், கடற்கரைகள் அல்லது சாலைகள் என எதுவாக இருந்தாலும் பொது இடங்கள் குப்பைகள் இல்லாமல் தூய்மையானதாக இருப்பதை உறுதி செய்கின்றனர். மேலும், எல்.ஈ.டி பல்புகளுக்கு மாறியதை வெற்றிகரமாகச் செய்தவர்கள் மக்கள்தான். இந்தியாவில் கிட்டத்தட்ட 370 மில்லியன் எல்.ஈ.டி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 39 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது. இந்திய விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் ஏறக்குறைய ஏழு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை பாதுகாப்பதை உறுதி செய்தனர். ஒவ்வொரு துளி நேரிலும் அதிக விளைச்சல் என்ற மந்திரத்தை நிறைவேற்றுவதன் மூலம், இது  பெரிய அளவு தண்ணீரை சேமிக்கிறது. இதுபோன்ற இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

 

நண்பர்களே, மிஷன் லைஃப் திட்டத்தின் கீழ், எங்கள் முயற்சிகள் பல களங்களில் பரவியுள்ளன. சிறுதானியங்களை ஊக்குவித்தல். இந்த முயற்சிகள்:

இருபத்தி இரண்டு பில்லியன் யூனிட்களுக்கு மேல் ஆற்றலைச் சேமிக்கவும், ஒன்பது டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கவும்,  கழிவுகளை முந்நூற்று எழுபத்தைந்து மில்லியன் டன்களாக குறைக்கவும்,  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டன் மின் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், 2030 ஆம் ஆண்டுக்குள் நூற்று எழுபது மில்லியன் டாலர்களை சேமிக்கவும் முடியும்.

 

மேலும், இது பதினைந்து பில்லியன் டன் உணவு வீணாவதைக் குறைக்க உதவும். இது எவ்வளவு பெரியது என்பதை அறிய ஒரு ஒப்பீடு தருகிறேன். FAO இன் படி 2020 இல் உலகளாவிய முதன்மை பயிர் உற்பத்தி சுமார் ஒன்பது பில்லியன் டன்கள்!

 

நண்பர்களே,

உலகம் முழுவதும் உள்ள நாடுகளை ஊக்குவிப்பதில் உலகளாவிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவநிலை நிதியை 26% லிருந்து 35% ஆக, மொத்த நிதியுதவியின் பங்காக அதிகரிக்க உலக வங்கி குழு எதிர்பார்க்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த பருவநிலை நிதியின் கவனம் பொதுவாக வழக்கமான அம்சங்களில் உள்ளது. நடத்தை முயற்சிகளுக்கும் போதுமான நிதியுதவி முறைகள் உருவாக்கப்பட வேண்டும். மிஷன் லைஃப் போன்ற நடத்தை முன்முயற்சிகளுக்கு உலக வங்கியின் ஆதரவு பல மடங்கு விளைவை ஏற்படுத்தும்.

 

நண்பர்களே,

 

இந்நிகழ்ச்சியை நடத்தும் உலக வங்கிக் குழுவை நான் வாழ்த்துகிறேன். மேலும், இந்த சந்திப்புகள் தனிநபர்களின் நடத்தையில் மாற்றத்தை நோக்கித் திருப்புவதற்கான  தீர்வுகளைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். நன்றி. மிக்க நன்றி.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers

Media Coverage

Cabinet extends One-Time Special Package for DAP fertilisers to farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 2, 2025
January 02, 2025

Citizens Appreciate India's Strategic Transformation under PM Modi: Economic, Technological, and Social Milestones