வணக்கம்!
140 கோடி இந்தியர்கள் சார்பாக, ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாடு, ஒரு விதத்தில், 'மஹாகும்ப்' அல்லது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்ற நடைமுறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டமாகும். உங்களைப் போன்ற அனைத்துப் பிரதிநிதிகளும் வெவ்வேறு நாடாளுமன்றங்கள் செயல்படும் பாணியில் அனுபவம் பெற்றவர்கள். இத்தகைய வளமான ஜனநாயக அனுபவங்களைக் கொண்ட உங்கள் பாரதப் பயணம் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
நண்பர்களே,
இது இந்தியாவில் பண்டிகைக் காலம். இந்த நாட்களில், இந்தியா முழுவதும் பல பண்டிகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த முறை ஜி-20 ஆண்டு முழுவதும் பண்டிகைக் காலத்தின் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஜி-20 பிரதிநிதிகளுக்கு விருந்தளித்தோம். இதனால், அந்த நகரங்களில் கொண்டாட்ட சூழல் உருவானது. அதன் பிறகு இந்தியா நிலவில் இறங்கியது. இதனால் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. பின்னர், தில்லியில் வெற்றிகரமாக ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தினோம். இப்போது இந்த பி20 உச்சிமாநாடு இங்கு நடைபெறுகிறது. எந்தவொரு நாட்டினதும் மிகப்பெரிய பலம் அதன் மக்கள்; அதன் மக்களின் விருப்ப சக்தி. இன்று, இந்த உச்சிமாநாடு மக்களின் இந்த வலிமையைக் கொண்டாட ஒரு காரணமாகவும் மாறியுள்ளது.
நண்பர்களே,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படும் இந்தியாவில் பி20 மாநாடு நடைபெறுகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகளாக, நாடாளுமன்றங்கள் விவாதத்திற்கு முக்கியமான இடங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கூட இங்கு நடந்த விவாதங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கும் மேலான நமது வேதங்களில், கூட்டங்கள் மற்றும் குழுக்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அங்கு சமூக நலன் கருதி கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இது நமது பழமையான வேதமான ரிக்வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலும், கிராமங்கள் தொடர்பான முடிவுகள் கிராம சபைகளில் விவாதம் மூலம் எடுக்கப்பட்டன.
கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் இந்தியாவில் இத்தகைய அமைப்பைப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டார். பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் நிலவிய இந்த முறை பற்றி விரிவாக எழுதியிருந்தார். 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். இது கிராம சட்டமன்றங்களின் விதிகள் மற்றும் குறியீடுகளைக் குறிப்பிடுகிறது. மேலும் அந்த 1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில், எந்த உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படலாம், எந்தக் காரணத்திற்காக, எந்த சூழ்நிலையில் என்று கூட எழுதப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நான் 1200 ஆண்டுகளுக்கு முன்பு பேசுகிறேன். அனுபவ மண்டபத்தைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். மகா சாசனத்துக்கு முன்பே, 12 ஆம் நூற்றாண்டில் "அனுபவ மண்டப" பாரம்பரியம் இருந்தது. இதிலும் விவாதங்கள் ஊக்குவிக்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பினரும், ஒவ்வொரு சாதியினரும், ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் கருத்துக்களை “அனுபவ மண்டபத்தில்” தெரிவிக்க அங்கு செல்வார்கள். ஜகத்குரு பசவேஸ்வரரின் இந்தப் பரிசு இன்றும் பாரதத்தை பெருமைப்படுத்துகிறது. 5000 ஆண்டுகள் பழமையான வேதங்களிலிருந்து இன்று வரையிலான இந்தப் பயணம், நாடாளுமன்ற மரபுகளின் இந்த வளர்ச்சி நமது பாரம்பரியம் மட்டுமல்ல, முழு உலகத்தின் பாரம்பரியமாகும்.
நண்பர்களே,
இந்தியாவின் பாராளுமன்ற செயல்முறைகள் காலப்போக்கில் தொடர்ந்து மேம்பட்டு மேலும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. இந்தியாவில் பொதுத் தேர்தலை மிகப் பெரிய திருவிழாவாகக் கருதுகிறோம். 1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்தியாவில் 17 பொதுத் தேர்தல்களும், 300க்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. பாரதம் உலகின் மிகப்பெரிய தேர்தல்களை நடத்துவது மட்டுமல்லாமல், அதில் மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019 பொதுத் தேர்தலில், நாட்டு மக்கள் எனது கட்சியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறச் செய்துள்ளனர். 2019 பொதுத் தேர்தல் மனித வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயகப் பயிற்சியாகும். 60 கோடிக்கு மேல் அதாவது, 600 மில்லியன் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 91 கோடியாக அதாவது 910 மில்லியன் ஆக இருந்தது. இது முழு ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். பாரதத்தில் பதிவான மொத்த வாக்காளர்களில் சுமார் 70 சதவீத வாக்குகள், பாரதத்தில் நாடாளுமன்ற நடைமுறைகளில் மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதில், பெண்களின் அதிகபட்ச பங்கேற்பு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. 2019 தேர்தலில் இந்திய பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர். நண்பர்களே, எண்ணிக்கையில் மட்டுமல்ல, அரசியல் பிரதிநிதித்துவத்திலும், பாரதத்தின் தேர்தல்களைப் போல் உலகில் வேறு எந்த உதாரணத்தையும் நீங்கள் காண முடியாது. 2019 பொதுத் தேர்தலில் 600க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்தத் தேர்தல்களில் ஒரு கோடிக்கு மேல் அதாவது. 10 மில்லியன் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்காக நாட்டில் 1 மில்லியன் அல்லது 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
காலப்போக்கில், இந்தியாவும் நவீன தொழில்நுட்பத்துடன் தேர்தல் செயல்முறையை ஒருங்கிணைத்துள்ளது. பாரத் சுமார் 25 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இதனால், தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை, தேர்தல் செயல்பாட்டில் செயல்திறன் அதிகரித்துள்ளது. இந்தியாவில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் பொதுத் தேர்தல் வரப் போகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 100 கோடி வாக்காளர்கள் அதாவது. இந்த தேர்தலில் 1 பில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் காண வருமாறு பி20 உச்சி மாநாட்டின் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு விருந்தளிப்பதில் பாரதம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு, பாரத நாடாளுமன்றம் ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது, அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்தியா தனது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள உள்ளூர் சுயநிர்வாக நிறுவனங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் பெண் பிரதிநிதிகள். இன்று, ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை இந்தியா ஊக்குவித்து வருகிறது. நமது நாடாளுமன்றம் சமீபத்தில் எடுத்த முடிவு நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்தும்.
பாரதத்தின் நாடாளுமன்ற மரபுகள் மீது நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மற்றொரு முக்கியமான காரணம் உள்ளது, அதை நீங்கள் தெரிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம். நமது பலம் நமது பன்முகத்தன்மை, நமது பரந்த தன்மை மற்றும் நமது துடிப்பில் உள்ளது. இங்கு எல்லா மதத்தினரும் இருக்கிறோம். நூற்றுக்கணக்கான உணவு வகைகள், நூற்றுக்கணக்கான வாழ்க்கை முறைகள் நம் அடையாளம். இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன; எங்களிடம் நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகள் உள்ளன. பாரதத்தில் 900 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன, 28 மொழிகளில் மக்களுக்கு நிகழ்நேர தகவல்களை வழங்க அவை 24x7 வேலை செய்கின்றன. சுமார் 200 மொழிகளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு செய்தித்தாள்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. எங்களிடம் வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் சுமார் 3 பில்லியன் பயனர்கள் உள்ளனர். பாரதத்தில் தகவல்களின் ஓட்டம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் அளவு எவ்வளவு பெரியது மற்றும் சக்தி வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் இந்த உலகில், பாரதத்தின் இந்தத் துடிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை, நமது மிகப்பெரிய பலம். இந்தத் துடிப்பு ஒவ்வொரு சவாலையும் எதிர்த்து போராடவும், ஒவ்வொரு பிரச்சனையையும் ஒன்றாக தீர்க்கவும் நம்மை ஊக்குவிக்கிறது.
நண்பர்களே,
இன்று உலகின் பல்வேறு மூலைகளில் என்ன நடந்தாலும் அதை யாரும் தொடாதவர்கள் இல்லை. இன்று உலகம் பூசல்களாலும், மோதல்களாலும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. நெருக்கடிகள் நிறைந்த இந்த உலகம் யாருடைய நலனிலும் இல்லை. பிளவுபட்ட உலகம் மனிதகுலம் எதிர்கொள்ளும் பெரும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்க முடியாது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம்; ஒன்றாக செல்ல ஒரு நேரம்; ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். இது அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான நேரம். உலகளாவிய நம்பிக்கைப் பற்றாக்குறையைச் சமாளித்து, மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையில் நாம் முன்னேற DRAFT-PKV
புதுதில்லியில் 9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை