திரு.சபாநாயகர் அவர்களே,
முதலில், குடியரசுத் தலைவர் அவர்களின் உரைக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இதற்கு முன்னர் பலமுறை குடியரசுத் தலைவர்களின் உரைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். ஆனால் இந்த நேரத்தில், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் தமது தொலைநோக்கு அம்சம் கொண்ட உரையில் நம் அனைவருக்கும், கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும் வழிகாட்டியுள்ளார். குடியரசுத் தலைவராக அவர் இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. நாட்டின் கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.
பழங்குடி சமுதாயத்தின் பெருமையை குடியரசுத் தலைவர் அவர்கள் உயர்த்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்று, பழங்குடி சமூகத்தில் சுயமரியாதை மற்றும் நம்பிக்கை உணர்வு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்துள்ளது, மேலும் இந்த சாதனைக்காக இந்த சபை மற்றும் நாடு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தமது உரையில், 'சங்கல்ப்' (தீர்மானங்கள்) முதல் 'சித்தி' (சாதனை) வரையிலான நாட்டின் பயணத்தின் செயல்திட்டத்தை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். இது நாட்டிற்கு பொறுப்புக் கூறக்கூடியது மற்றும் மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
திரு. சபாநாயகர் அவர்களே, உறுப்பினர்கள் அனைவரும் விவாதத்தில் பங்கேற்று, அவரவர் தங்கள் செயற்சார்பு மற்றும் அணுகுமுறை ஏற்ப புள்ளி விவரங்களையும், வாதங்களையும் முன்வைத்தனர். அந்த வாதங்களைக் கேட்பதன் மூலம் உறுப்பினர்களின் திறன், ஆற்றல், புரிதல் மற்றும் எண்ணம் ஆகியவற்றைப் பற்றியும் வெளிப்படையாகவே அறிந்து கொள்ள முடிகிறது. அதையும் நாடு கவனிக்கிறது.
விவாதத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நேற்று, சில உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் தங்கள் உரைகளுக்குப் பிறகு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டேன். அவர்கள் இரவில் நன்றாக தூங்கியிருக்கலாம். அவர்களில் சிலரால் இன்று எழுந்திருக்க முடியாமல் போயிருக்கலாம். அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல பழமொழி உள்ளது:
”இப்படிச் சொல்லி மனதை மகிழ்விக்கிறோம். மனதை மகிழ்விக்கிறோம் என்று சொல்லிவிட்டு அப்போது சென்றுவிட்டார்கள். அப்போது சென்றவர்கள், இப்போது வருகிறார்கள்”.
திரு. சபாநாயகர் அவர்களே,
சில உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் உரையின் நடுவில் கூட சபையை விட்டு வெளியேறினர். மேலும் அவையின் ஒரு முக்கிய தலைவர் மேதகு குடியரசுத் தலைவரை அவமதித்துள்ளார். பழங்குடி சமூகத்தின் மீதான அவர்களின் வெறுப்பையும், நமது பழங்குடி சமூகத்தின் மீதான அவர்களின் சிந்தனை என்ன என்பதையும் நாம் பார்த்தோம். ஆனால், இதுபோன்ற கருத்துகளை தொலைக்காட்சி முன் வைக்கும்போது, அவர்களின் உண்மையான வெறுப்பு உணர்வு வெளிப்பட்டது. எனினும், ஒரு கடிதம் (ஜனாதிபதிக்கு) எழுதி, நிலைமையிலிருந்து வெளியேற முயற்சி மேற்கொள்ளப்பட்டது திருப்தியளிக்கிறது.
திரு. சபாநாயகர் அவர்களே,
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நான் செவிமடுத்த போது, சில உறுப்பினர்கள் மௌனமாக இருந்து பல விஷயங்களை ஏற்றுக்கொண்டதை உணர்ந்தேன். குடியரசுத் தலைவரின் உரையில் எந்த உறுப்பினருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது போல், யாரும் அவரை விமர்சிக்கவில்லை. ஜனாதிபதி என்ன சொன்னார்?
நான் அவரை மேற்கோள் காட்டுகிறேன். குடியரசுத் தலைவர் தமது உரையில், ஒரு காலத்தில் தனது பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்து இருந்த இந்தியா, இன்று உலகின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஊடகமாக மாறி வருகிறது.
நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் பல தசாப்தங்களாக காத்திருந்த அடிப்படை வசதிகள் இப்போது அவர்களுக்கு கிடைக்கப்பெற்று உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அரசு திட்டங்களில் ஊழல் மற்றும் ஊழல்களில் இருந்து நாடு இறுதியாக விடுதலை பெற்று வருகிறது.
கொள்கை முடக்கம் என்ற நிலையிலிருந்து, இன்று நாடு வேகமான வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு முடிவுகளை எடுக்கும் வகையில் உயர்ந்துள்ளது. குடியரசுத் தலைவரரின் உரையிலிருந்து இந்தப் பத்தியை மேற்கோள் காட்டுகிறேன். முன்னதாக, குடியரசுத் தலைவரின் இத்தகைய கருத்துக்களை இங்குள்ள சிலர் நிச்சயமாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவரது உரையை யாரும் எதிர்க்கவில்லை. வரவேற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திரு. சபாநாயகர் அவர்களே, குடியரசுத் தலைவரின் உரைக்கு சபை ஒப்புதல் அளித்ததற்காக 140 கோடி நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைவிட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும்?