Quote“மக்களின் குறைகளைத் தீர்க்க தொழில்நுட்பத்தை எவ்வாறு திறமையுடன் பயன்படுத்துவது என்பதை குஜராத்தின் ஸ்வாகத் முன்முயற்சி எடுத்துக்காட்டுகிறது”
Quote“பதவியின் கட்டுப்பாடுகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். நான் மக்களிடையே இருந்தேன், மக்களுக்காக இருப்பேன்”
Quote“வாழ்க்கையை எளிதாக்குதல், நிர்வாகத்தைப் பரவலாக்குதல் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக ஸ்வாகத் உள்ளது”
Quote“நிர்வாகம் என்பது பழையச் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்பட்டதல்ல அது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு உரிய இடமளிக்கிறது என்பதை நாங்கள் நிரூபித்தோம்”
Quote“நிர்வாகத்தின் பல தீர்வுகளுக்கு ஸ்வாகத் உந்துசக்தியாக மாறியது பல மாநிலங்கள் இந்த முறையில் செயல்படுகின்றன”
Quote“கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் துரிதமான வளர்ச்சியில் பிரகதி பெரும்பங்கு வகிக்கிறது. இந்தக் கோட்பாடும் ஸ்வாகத் சிந்தனையின் அடிப்படையைக் கொண்டது”
Quoteஇந்த நிகழ்ச்சியின் போது திட்டத்தின் கடந்தகால பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

நண்பர்களே,

ஸ்வாகத் திட்டம்  தொடங்கப்பட்டதன் நோக்கம் வெற்றிகரமாக நிறைவு பெற்றிருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இதன் மூலம் குடிமக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளனர்.  அரசின் அணுகுமுறை என்பது நட்புரீதியாக இருக்க வேண்டும், அரசில் இருப்பவர்களுடன் தங்களின் பிரச்சனைகளை சாமானிய மக்களும் எளிதில் பகிர்ந்துகொள்ள வேண்டும். குடிமக்களின் முயற்சியும், அர்ப்பணிப்பும் தான் ஸ்வாகத் திட்டத்தின் முன்முயற்சியை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளன. இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

நண்பர்களே,

2003-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, நான் மிகவும் வயது முதிர்ந்த முதலமைச்சராக இருக்கவில்லை. பதவியின் கட்டுப்பாடுகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். நான் மக்களிடையே இருந்தேன், மக்களுக்காக இருப்பேன்”. இந்த உறுதியான முடிவால்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைகளைத் தீர்ப்பதற்கு மாநிலம் முழுவதும் கவனம் செலுத்துவது (ஸ்வாகத்) என்ற திட்டம் பிறந்தது. வாழ்க்கையை எளிதாக்குதல், நிர்வாகத்தைப் பரவலாக்குதல் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக ஸ்வாகத் உள்ளது.

நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, குஜராத் மாநிலத்தின் சிறந்த நிர்வாகம், உலகில்  சுய அடையாளத்தை பெற்றது. மின்னணு- வெளிப்படைத்தன்மை, மின்னணு - பொறுப்புடைமையாக ஸ்வாகத் மூலம், சிறந்த நிர்வாகத்திற்கு சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு  முன்னுதாரணமாக விளங்குகிறது. ஐநாவில் ஸ்வாகத் மிகுந்த பாராட்டைப் பெற்று பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க விருதை பெற்றது. 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, ஸ்வாகத் மூலமான சிறந்த நிர்வாகத்திற்காக குஜராத் அரசு மத்திய அரசின் தங்கப்பதக்க விருதை பெற்றது.

நண்பர்களே,

ஸ்வாகத் மூலம் குஜராத் மக்களுக்கு நாங்கள் சேவை செய்ய முடிந்தது எனக்கான மிகப்பெரிய விருது. ஸ்வாகத் முறையில் செயல்முறை திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். ஸ்வாகத் முறையின் கீழ், வட்டார மற்றும் வட்ட அளவில் பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டது. அதன் பிறகு மாவட்ட அளவில் அதற்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்புடையவராக நியமிக்கப்பட்டார். மாநில அளவில் நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். திட்ட அமலாக்க முகமைகள் – கடைக்கோடி பயனாளிகள் ஆகியோருக்கு இடையேயான தொடர்பு, அவர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் திட்டங்களை சென்றடைய செய்தல், அவற்றின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொண்டு உதவி புரிதல் சிறந்த ஒன்று. ஸ்வாகத் முறை குடிமக்களுக்கு அதிகாரமளித்து நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. 

|

நண்பர்களே,

வாரம் ஒருமுறை மட்டுமே  ஸ்வாகத் நிகழ்ச்சி நடைபெற்றாலும், நூற்றுக்கணக்கான குறைதீர்ப்புகளுக்காக அது தொடர்பான பணிகள் மாதந்தோறும் நடைபெற்றது. எந்த குறிப்பிட்டத் துறைகளில், அதிகாரிகள் அல்லது பிராந்தியங்களில் மற்றவைகளை விட, அதிகளவு புகார்கள் வருவது குறித்து நான் பகுப்பாய்வு செய்தேன். அது குறித்து ஆழ்ந்து, ஆராய்ந்து தேவைப்பட்டால், அதுகுறித்த கொள்கைகள் அமல்படுத்தப்பட்டது., இது சாதாரண மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தியது. சமூகத்தில் சிறந்த நிர்வாகத்தின் அளவீடு என்பது பொதுமக்கள் குறைதீர்ப்பு முறையில் தரத்தை சார்ந்துள்ளது. 

|

நண்பர்களே,

ஸ்வாகத் முறை அரசின் பழைய  கருத்துக்களை மாற்றியமைத்தது. நிர்வாகம் என்பது பழைய விதிகள் மற்றும் சட்டங்கள் என்றில்லாமல், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகளை நாங்கள் ஏற்படுத்தினோம். 2003-ம் ஆண்டில் மின்னணு நிர்வாகத்திற்கு அப்போதைய அரசு அதிக முன்னுரிமை அளிக்கவில்லை. காகித முறைகள் மற்றும் கோப்புகளால் மிகவும் தாமதம் ஏற்பட்டது. காணொலிக்காட்சி குறித்து அறியப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, எதிர்கால சிந்தனைகளின் அடிப்படையில் குஜராத் அரசு பணியாற்றியது. இன்று ஸ்வாகத் போன்ற முறைகள் நிர்வாகத்திற்கு பல தீர்வுகளை வழங்குவதற்கான உத்வேகத்தை அளித்துள்ளது. மத்தியிலும், அரசின் செயல்பாடுகள் குறித்து மறு சீராய்வு செய்வதற்காக பிரகதி என்ற முறை ஏற்படுத்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு பிரகதி மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது. இது ஸ்வாகத் சிந்தனை அடிப்படையிலான கருத்துடையது. பிரகதி மூலம்  16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து நான், மறுசீராய்வு செய்துள்ளேன். அதன் காரணமாக பல்வேறு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டது. 

|

நண்பர்களே,

முந்தையை அரசுகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடும் போது ஸ்வாகத் பெருமளவில் நம்பிக்கை அளித்துள்ளது.  இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் அரசின் முன்னெடுப்புகள் புது வாழ்க்கைக்கு புத்துயிர் ஊட்டும் விதத்தில் அமையும். இதே திட்டம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, மக்களை மையப்படுத்திய அரசுக்கு சிறந்த முன்உதாரணமாக மாறும்.

  • Jitendra Kumar January 26, 2025

    🇮🇳🇮🇳🇮🇳❤️❤️🙏❤️❤️💪🌈🌄🌈
  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • Seema lalwani August 29, 2024

    Jay shree ram
  • Rohit pawar August 29, 2024

    jai ho
  • Kishore Sahoo August 28, 2024

    JAI SHREE RAM JAI SHREE KRISHNA JAI. 🙏😭🇪🇬!!
  • Kishore Sahoo August 28, 2024

    In Order to meet the Clear and Safe Society, No Women should be there in Any Advertisement, Promulgated for Sale and other Aspects of Production. Let's Hope Industry Products in Bazar shouldn't be Advertised By any Women in General. It will Hamper the Sale's of Product, But they're Also Helpful for Avoiding Female Orientation of mind 🙏 Also Helpful gradually for Abnoxious, feeling for Women in General. Nation Building is Important than Sales of Industrial Products. Hopefully this may indirectly Distract Younger mind's and Sales May Hamper. 🙏😭🎯🇪🇬.
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 12, 2024

    🙏🏻🙏🏻👏🏻
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
It's a quantum leap in computing with India joining the global race

Media Coverage

It's a quantum leap in computing with India joining the global race
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to participate in three Post- Budget webinars on 4th March
March 03, 2025
QuoteWebinars on: MSME as an Engine of Growth; Manufacturing, Exports and Nuclear Energy Missions; Regulatory, Investment and Ease of doing business Reforms
QuoteWebinars to act as a collaborative platform to develop action plans for operationalising transformative Budget announcements

Prime Minister Shri Narendra Modi will participate in three Post- Budget webinars at around 12:30 PM via video conferencing. These webinars are being held on MSME as an Engine of Growth; Manufacturing, Exports and Nuclear Energy Missions; Regulatory, Investment and Ease of doing business Reforms. He will also address the gathering on the occasion.

The webinars will provide a collaborative platform for government officials, industry leaders, and trade experts to deliberate on India’s industrial, trade, and energy strategies. The discussions will focus on policy execution, investment facilitation, and technology adoption, ensuring seamless implementation of the Budget’s transformative measures. The webinars will engage private sector experts, industry representatives, and subject matter specialists to align efforts and drive impactful implementation of Budget announcements.