“புத்தரின் ஞானம் அழிவே இல்லாதது”
“புத்தரின் படிப்பினைகளால் ஈர்க்கப்பட்டு உலக நன்மைக்காக இந்தியா புதிய முன்முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது”
“ஒவ்வொரு மனிதனின் துன்பத்தை தனது துன்பமாக இந்தியா கருத்தில் கொள்ளும்”
“சர்வதேச புத்த கூட்டமைப்பு போன்ற தளங்கள் மூலம் ஒரே சிந்தனையாற்றல் மற்றும் ஒருமித்த கருத்துக்கொண்ட நாடுகள் புத்த தருமத்தையும், அமைதியையும் நிலைநாட்டுகிறது”
“ஒவ்வொரு தனிநபர் மற்றும் தேசத்தின் முன்னுரிமை உலக நலனோடு சேர்த்து நாட்டுநலத்துடன் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் ”
“பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பாதையே புத்தரின் பாதையாகும்”
“இன்று உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வுகளை கொண்டிருந்தார்”
“புத்தரின் பாதையானது எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மைத் தொடர்பான பாதையாகும்”
“ புத்தரின் உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கமானது, புத்தரின் சிந்தனைகளை மேலும் மேன்மையடையச் செய்கிறது”
19 தலைசிறந்த புத்த பிட்சுகளுக்குப் பிரதமர் புத்தபிட்சு அங்கிகளை வழங்கினார்.

நமோ புத்தாய!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்கள்  திரு கிரண் ரிஜிஜூ, திரு கிஷண் ரெட்டி,  திரு அர்ஜூன் ராம் மெக்வால், திருமதி மீனாட்சி லேகி, சர்வதேச புத்த கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் இருந்தும் வந்துள்ள புத்த துறவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்!

 

இந்த உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவிற்கு உலகின் பல திசைகளில் இருந்து வருகை தந்திருக்கும் அனைவரையும் நான் வரவேற்கிறேன். விருந்தினர்கள், இறைவனுக்கு சமம் என்பதே நமது பாரம்பரியமாகும். இந்தப் புத்த பூமியின் பாரம்பரியமும் இதுதான். புத்தரின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கி வாழ்ந்த பலர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருப்பது, இங்கு புத்தர் நம்மிடையே இருப்பதாக உணர்கிறேன். புத்தர் தனிநபர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர். அது ஒரு ஞானமாகும். எல்லையற்ற ஞானமாகும். அவர் மேம்பட்ட சிந்தனை வடிவானவர். எல்லையில்லா வகையில், எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வே புத்தராவார். புத்தரின் ஞானம் அழிவே இல்லாதது.

வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட மக்கள், புத்தரின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமையப்பெற்று, ஒரு இழையில் மனித நேயம் இணைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிந்தனையாற்றலின் பலம், உலகளவில் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் தீர்மானமானது உலக மேம்பாட்டிற்காக செயல்படுகிறது.

 

இந்த சர்வதேச புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழா, அனைத்து தேசங்களுக்கும் ஒரு சிறந்த தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கைக் கொள்கிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் சர்வதேச புத்த கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

புத்த மதத்தோடு எனக்கான தனிப்பட்ட முறையிலான இணைப்பு வாட்நகர் மூலம் அமையப்பெற்றிருந்தது. நான் அங்கு தான் பிறந்தேன். அந்த முக்கிய புத்தமத மையத்திற்கு யுவான் சுவாங் வருகை தந்தார். சாரநாத் பின்புலத்தில் காசிக்கும் தொடர்புள்ளதை நான் காண்கிறேன். புத்தமத பாரம்பரியத்திற்கான இணைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

நண்பர்களே!

நம் நாடு சுதந்திரம் அடைந்து 75-வது விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான முக்கிய நோக்கம் மற்றும் உலக நன்மைக்கான புதிய தீர்மானங்கள் உள்ளன. சமீபத்தில் பல்வேறு துறைகளில் உலக அளவில் இந்தியா பெற்றிருக்கும் சாதனைகளுக்கு புத்தரின் உணர்வுகள் மற்றும் உத்வேகம் தான் காரணம்.

 

கடந்த ஒன்பது ஆண்டுகளாக புத்தரின் கொள்கை, பயிற்சி மற்றும் உள்ளுணர்தல் போன்றவைகளை உள்ளடக்கியே இந்தியாவின் பயணம் அமைந்துள்ளது. புத்தரின் கோட்பாடுகளை முழுமனதோடும், அர்ப்பணிப்போடும், பரப்புவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் உள்ள புத்தமத மையங்களுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்துதல், சாரநாத் மற்றும் குஷிநகர் புனரமைத்தல், குஷிநகர் சர்வதேச விமானநிலையம், லும்பினியில் உள்ள சர்வதேச புத்தக் கூட்டமைப்போடு இணைந்து இந்திய சர்வதேச புத்த கலாச்சார மையம் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மனித இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து, போதனைகளை தந்திருக்கும் புத்தர், இந்தியாவை கருத்தில் கொண்டே குறிப்பிட்டிருக்க வேண்டும். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களின் போது, மீட்பு நடவடிக்கையில் இந்தியா முழு மனதோடு செயல்பாடுகள் மற்றும் அமைதிக்கான இயக்கங்களை மேற்கொண்டது. இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அறியப்பட்டு, உணரப்பட்டு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச புத்த கூட்டமைப்பு போன்ற தளங்கள் மூலம் ஒரே சிந்தனையாற்றல் மற்றும் ஒருமித்த கருத்துக்கொண்ட நாடுகள் புத்தத் தருமத்தையும், அமைதியையும் நிலைநாட்டுகின்றன.

பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பாதையே புத்தரின் பாதையாகும் . புத்தரின் வாழ்க்கைப் பயணத்தின் போது அடுத்தவர்களின் வாழ்வில் உள்ள வலிகளை அவர் நன்குணர்ந்தார். புத்தர், தனது அரண்மனை மற்றும் ராஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்தார். சுயநலம், குறுகிய எண்ணம் போன்றவைகளை தவிர்த்து, உலகளாவிய நன்மைக்கான எண்ணம் என்ற புத்தரின் மந்திரத்தை ஏற்பதே வளமான உலகை உருவாக்குவதின் நோக்கமாகும்.

 

ஆதாரக்குறைப்பாடுகளை எவ்விதம் எதிர்நோக்குகிறோம் என்பதை பொறுத்தே, நிலையான உலகை உருவாக்க முடியும். ஒவ்வொரு தனிநபர் மற்றும் தேசத்தின் முன்னுரிமை உலக நலனோடு சேர்த்து நாட்டு நலத்துடன் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் .

நண்பர்களே!

இந்த நூற்றாண்டின் மிகவும் சவால் நிறைந்த நேரம் இது. போர், பொருளாதார நிலையற்ற தன்மை, மதவெறி, பருவநிலை மாற்றத்தின் விளைவாக உயிரினங்கள் மறைவது, பனிப்பாறைகள் உருகுவது போன்றவைகள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மத்தியில் புத்தரை நம்பும் மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் நலன்களுக்காக செயல்படுகிறார்கள். இந்த நம்பிக்கைத்தான் பூமியின் மிகப்பெரிய வலிமையாகும். இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து புத்தரின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் போது, மனித இனத்திற்கான நம்பிக்கையை உணர செய்யும் விதத்தில் அமையும்.

நண்பர்களே!

இன்று உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வுகளை கொண்டிருந்தார் . போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு வெற்றி -தோல்விகளை துறப்பதன் மூலம் உலக அமைதி ஏற்படும். பகையை பகையால் எதிர்கொள்வதைத் தவிர்த்து, ஒற்றுமையில் தான் மகிழ்ச்சி நிறைந்துள்ளது என்பதை உணரவேண்டும். இதையே, புத்தர் தனது போதனைகள் மூலமாக எடுத்துரைத்தார். முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு முன், தனது நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் அச்சுறுத்தும் போக்கு நிலவுகிறது. புத்தரின் மிகவும் பிரபலமான போதனை, உங்கள் உணர்வு ஒளி ஆற்றல் மூலமாக இறைவன் கோட்பாடுகளை உலகளாவிய இருப்பை உணருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐநா சபை, யுத்தத்தைப் பற்றியல்ல, புத்தரைப்பற்றி உலகத்திற்கு அறிவித்தது நம் நாடுதான் என்று கூறியதை  நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

நண்பர்களே!

புத்தரின் பாதையானது எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மைத் தொடர்பான பாதையாகும். புத்தரின் போதனைகளை உலகம் பின்பற்றி இருந்தால், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்திருக்காது. அதாவது, தேசங்கள் மற்ற நாடுகளைப் பற்றியும், எதிர்கால சந்ததியினரைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்தி விட்டன. இந்த தவறை மிகப்பெரிய அளவில் உருமாறி மோசமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளது. சுய லாபமில்லாத நன்னடத்தையுடன் செயல்பட்டு, அனைவரும் நலத்துடன் வாழ வேண்டும் என்றே புத்தர் போதித்தார்.

நண்பர்களே!

 

இந்தப் பூமிக்கு ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அது வாழ்வியல் முறை, உணவு, பயண பழக்கவழக்கங்கள் மூலமாக பருவ நிலை மாற்றத்திற்கு காரணியாக அமைகின்றன. புத்தரின் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பாலேயே சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறை இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் சூழ்நிலைகளை உணர்ந்து, தங்களது வாழ்வியல் முறையை மாற்றியமைக்கும் போது, பருவ நிலை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். புத்தரின் உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கமானது, புத்தரின் சிந்தனைகளை மேலும் மேன்மையடைய செய்கிறது .

 

உலக இன்பங்கள் மற்றும் சுயநலம் போன்றவற்றில் இருந்து வெளிவருவது அவசியம். புத்தர் இதற்கு அடையாளமாக மாறியதோடு மட்டுமல்லாமல், பிரதிபலிப்பாக விளங்கினார். அதாவது பின்னோக்கி பார்ப்பதை தவிர்த்து முன்னேறி செல்வதை நினைவில் கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினால் மட்டுமே, புத்தரின் தீர்மானம் முழுமைப்பெறும். அனைவரும் ஒன்றிணையும் போது, இந்த தீர்மானங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடையும்.

பின்வாங்காமல் செயல்பாடுகளில் முன்னோக்கிச் செல்லுங்கள். வெற்றிக்கான தீர்மானங்களை  நாம் இணைந்து ஏற்போம். நமது இணைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நம்பிக்கையின் மூலம், மனித நேயம்  புதிய ஒளியை பெற்று, புதிய உத்வேகத்தைப் பெறும். இந்த இரண்டு நாள்  விவாதங்கள் மூலம், புதிய சக்தி கிடைக்கும். அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

நமோ புத்தாய!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Govt saved 48 billion kiloWatt of energy per hour by distributing 37 cr LED bulbs

Media Coverage

Govt saved 48 billion kiloWatt of energy per hour by distributing 37 cr LED bulbs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 12, 2025
March 12, 2025

Appreciation for PM Modi’s Reforms Powering India’s Global Rise