வணக்கம், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பரிச்சயமான பல முகங்களை இங்குப் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சந்தித்தோம். இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்த முருகன் அவர்களுக்கு நன்றி. எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு பண்டிகையைக் கொண்டாடுவது போல உணர்கிறேன்.
நண்பர்களே,
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு – அதாவது பயிர்கள், படித்தவர்கள் மற்றும் நேர்மையான செல்வந்தர்கள் ஒன்றிணைந்து ஒரு தேசத்தை உருவாக்குகிறார்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இது நம் அனைவருக்கும் ஒரு செய்தி. பொங்கல் பண்டிகையின் போது அறுவடை செய்த விளைச்சலை இறைவனின் திருவடிகளுக்கு அர்ப்பணிப்பது வழக்கம். எங்கள் 'அன்னதாதா' (விவசாயிகள்) இந்த முழு விழா பாரம்பரியத்தின் மையத்தில் உள்ளனர். எது எப்படியோ, பாரதத்தின் ஒவ்வொரு பண்டிகையும் கிராமங்கள், விவசாயம் மற்றும் பயிர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னா தமிழ் கலாச்சாரத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை நாம் விவாதித்தது எனக்கு நினைவிருக்கிறது. இந்த மேலான உணவு குறித்து நாட்டிலும் உலகிலும் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல இளைஞர்கள் சிறுதானியங்கள் மற்றும் ஸ்ரீ அன்னா தொடர்பான புதிய ஸ்டார்ட் அப்களைத் தொடங்குகிறார்கள், மேலும் இந்த ஸ்டார்ட் அப்கள் இன்று மிகவும் பிரபலமாகி வருகின்றன. நம் நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் ஸ்ரீ அன்னா உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ அன்னாவை நாம் ஊக்குவித்தால், அது இந்த மூன்று கோடி விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.
நண்பர்களே,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழ்ப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே கோலம் போடுகிறார்கள். முதலில், அவர்கள் தரையில் பல புள்ளிகளை உருவாக்க மாவைப் பயன்படுத்துகிறார்கள். அனைத்துப் புள்ளிகளும் அமைந்தவுடன், ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் படம் தன்னையே வசீகரிக்கிறது. இருப்பினும், இந்தப் புள்ளிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு, வண்ணங்கள் நிறைந்த ஒரு அற்புதமான கலைப்படைப்பை உருவாக்கும்போது கோலத்தின் உண்மையான அழகு வெளிப்படுகிறது.
நமது நாடும் அதன் பன்முகத்தன்மையும் கோலங்கள் போன்றதுதான். நாட்டின் ஒவ்வொரு பகுதியும் உணர்வுபூர்வமாக ஒன்றோடொன்று இணையும்போது, நமது பலம் வேறு வடிவம் பெறுகிறது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அண்மைக் காலமாக காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவற்றின் முக்கிய மரபுகள் இந்த உணர்வை வெளிப்படுத்துகின்றன. இந்நிகழ்வுகள் அனைத்திலும் எமது தமிழ் சகோதர சகோதரிகள் பெருமளவில் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
நண்பர்களே,
இந்த ஒற்றுமை உணர்வுதான் 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதத்தை'க் கட்டமைப்பதற்கான மிகப்பெரிய சக்தியும் மூலதனமும் ஆகும். நாட்டின் ஒற்றுமைக்கு ஆற்றலை ஊட்டுவதும், ஒற்றுமையை வலுப்படுத்துவதும் முதன்மையான அம்சமாக இருப்பதால், செங்கோட்டையில் இருந்து ஐந்து உறுதிமொழிகளை நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் புனிதமான பொங்கல் திருநாளில், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
நண்பர்களே,
இன்று, புகழ்பெற்ற கலைஞர்கள் தங்கள் விளக்கக்காட்சிகளுக்குத் தயாராக உள்ளனர். நீங்களும் அவர்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள். நானும் அப்படித்தான். இந்தக் கலைஞர்கள் அனைவரும் தலைநகர் தில்லியில் தமிழகத்தைத் துடிப்புடன் மாற்றப் போகிறார்கள். சில கணங்கள் தமிழர் வாழ்வியலைப் பார்ப்போம். அதுவும் ஒரு பாக்கியம்தான். இந்தக் கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முருகனுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!