வணக்கம்!
மோடியின் 'உத்தரவாத வாகனம்' குறித்து அனைத்து சிறிய மற்றும் பெரிய கிராமத்திலும் காணப்படும் உற்சாகம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது.
மேலும், மக்கள் தாங்களாகவே வந்து, கிராம சாலையின் நடுவில் நின்று, வாகனத்தை நிறுத்தி அனைத்துத் தகவல்களையும் பெறுகிறார்கள் என்பதை நான் அறிந்தேன்.
இப்போது சில பயனாளிகளுடன் உரையாடியுள்ளேன். இந்த வாகனத்தின் வருகையின்போது, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பற்றி விவரிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும், அவை பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 10 - 15 நாட்களில், கிராம மக்களின் உணர்வுகளை, அவ்வப்போது கண்டு வருகின்றேன்; திட்டங்கள் வந்து சேர்ந்தனவா; அவை முழுமையாக செயல்படுத்தப்பட்டதா இல்லையா என்று அவர்கள் கூறுகின்றனர்.
மக்களின் அனுபவங்களைக் கொண்ட வீடியோக்களைப் பார்க்கும்போது, கிராம மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரசின் திட்டங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்போது, ஒருவருக்கு ஒரு பக்கா வீடு கிடைத்தால், அது அவரது வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாகும். இதுவரை தண்ணீர் வசதியின்றி சிரமப்பட்டு வந்ததால், இப்போது குழாய் மூலம் தண்ணீர் கிடைத்தால், ஒருவழியாக தனது வீட்டிற்கு தண்ணீர் வந்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறார்.
ஒருவருக்குக் கழிவறை கிடைத்தால், அவர் இந்த 'மரியாதைக்குரிய வீடு' காரணமாக மகிழ்ச்சியடைகிறார், ஏனெனில் பழங்காலத்தில், முக்கிய நபர்களின் வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் இருந்தன, ஆனால் இப்போது அவரது வீட்டிலும் கழிப்பறை உள்ளது. எனவே, இது அவருக்கு சமூக அந்தஸ்தாக மாறியுள்ளது.
சிலர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்; சிலருக்கு இலவச ரேஷன் கிடைத்துள்ளது; சிலருக்கு எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது; சிலருக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது; சிலர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்; சிலர் பிரதமரின் வேளாண் நிதியைப் பெறுகிறார்கள்; சிலர் பிரதமரின் பயிர் காப்பீடு பெறுகிறார்கள். சிலர் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் நன்மையைப் பெற்றுள்ளனர், சிலர் பிரதமர் சொத்து திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளைப் பெற்றுள்ளனர். அதாவது, இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் ஏதாவது ஒரு அரசின் திட்டங்களால் நிச்சயமாக பயனடைந்துள்ளன. ஒருவர் இந்த நன்மைகளைப் பெறும்போது, அவருக்குள் நம்பிக்கை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு சிறிய நன்மையுடனும், வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு புதிய பலம் தனிநபரிடம் இருந்து வெளிப்படுகிறது. இதற்காக அவர்கள் மீண்டும் மீண்டும் எந்த அரசு அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. சலுகைகளைப் பெற பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மன நிலை போய்விட்டது.
பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதனால்தான் இன்று மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேற்றப்படுவதற்கான உத்தரவாதம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
என் குடும்ப உறுப்பினர்களே
இதுவரை அரசின் திட்டங்களுடன் இணைக்க முடியாத அத்தகைய மக்களைச் சென்றடைய நமது லட்சியம் வளர்ச்சியடைந்த இந்தியா யாத்திரை ஒரு சிறந்த ஊடகமாக மாறியுள்ளது.
அது தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. இரண்டு மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இந்த யாத்திரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பல நகரங்களைச் சென்றடைந்துள்ளது.
இது ஒரு பெரிய விஷயம், ஏனென்றால், இவ்வளவு குறுகிய காலத்தில், 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் மோடியின் உத்தரவாத வாகனத்தை அணுகியுள்ளனர், அதை வரவேற்றுள்ளனர், அதைப் புரிந்து கொள்ளவும் இணைக்கவும் முயற்சித்துள்ளனர், அதை வெற்றிகரமாக்க உழைத்துள்ளனர்.
இந்த உத்தரவாத வாகனத்தை மக்கள் பாராட்டி வரவேற்று வருகின்றனர். மேலும் பல இடங்களில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு வகையான செயல்பாடுகள் முடிக்கப்பட்டு வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லவும், கிராமத்தை முன்னோக்கி கொண்டு செல்லவும், குடும்பத்தை முன்னோக்கி கொண்டு செல்லவும், அரசு திட்டங்களின் பலன்களைப் பெறவும், முன்னோக்கிச் செல்லவும் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே எந்தவொரு முக்கியத் தலைவரும் இல்லாத இத்தகைய பிரச்சாரம் முன்னேறி வருவதை நான் காண்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே
இந்த லட்சிய யாத்திரையின் போது நாம் எடுக்கும் தீர்மானங்கள் சில வாக்கியங்கள் அல்ல. மாறாக, இவை நமது வாழ்க்கை மந்திரங்களாக மாற வேண்டும்.
அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் முழு பக்தியுடன் ஒன்றிணைய வேண்டும். அனைவரின் முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியா வளர்ச்சியடையும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1984520