நம பார்வதி பதயே..., ஹர ஹர மஹாதேவ்!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பேராசிரியர் வசிஷ்ட் திரிபாதி அவர்களே, காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் நாகேந்திரா அவர்களே, காசி விஸ்வநாத் நியாஸ் பரிஷத் தலைவர் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, மதிப்பிற்குரிய அறிஞர்களே, பங்கேற்பாளர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்! அனைத்து அறிஞர்களுக்கும், குறிப்பாக இளம் அறிஞர்களுக்கு மத்தியில், மஹாமன என்ற புனித அரங்கில் ஞான நதியில் நீராடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காலத்தைக் கடந்த காசியும், தொன்மையானதாகக் கருதப்படும் காசியும், நமது நவீன இளைஞர்களும் எவ்வளவு பெரிய பொறுப்புடன் தங்கள் அடையாளத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மனதிற்கு மனநிறைவை அளிப்பது மட்டுமின்றி, பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது, அமிர்த காலத்தின் போது அனைத்து இளைஞர்களும் எதிர்காலத்தில் நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உண்மையில் காசி என்பது அனைத்து அறிவின் தலைநகரம். காசி நாடாளுமன்ற சமஸ்கிருதப் போட்டி, காசி நாடாளுமன்ற அறிவுப் போட்டி, காசி நாடாளுமன்ற புகைப்படக்கலை போட்டி ஆகிய விருதுகளை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். வெற்றி பெற்ற அனைவருக்கும் அவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். அவர்களின் திறமைக்காக, நான் அவர்களின் குடும்பத்தினரை வாழ்த்துகிறேன், அவர்களின் வழிகாட்டிகளையும் வாழ்த்துகிறேன். வெற்றியை நோக்கி சில அடிகள் பின்தங்கியவர்கள், சிலர் நான்காவது இடத்தை எட்டியவுடன் தடுமாறியிருக்கலாம், அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காசியின் அறிவுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என்பதும், அதன் போட்டிகளில் பங்கேற்றீர்கள் என்பதும் நமக்குப் பெருமை அளிக்கிறது. உங்களில் யாரும் தோற்றுவிடவுமில்லை, பின்தங்கவுமில்லை. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் நிறையக் கற்றுக்கொண்டீர்கள். பல படிகளை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளீர்கள். எனவே, இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை, காசி வித்வத் பரிஷத் மற்றும் அனைத்து அறிஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எனது கனவை நனவாக்குவதில் நீங்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளீர்கள். முன்னெப்போதும் இல்லாத ஆதரவை வழங்கியுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் காசியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த முழுமையான தகவல்களைக் கொண்ட இரண்டு புத்தகங்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் காசி தொடங்கியுள்ள வளர்ச்சிப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், அதன் கலாச்சாரத்தின் விவரிப்பையும் இந்தப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், காசியில் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றப் போட்டிகள் குறித்தும் சிறிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக காசி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் நண்பர்களே,
நாங்கள் வெறும் கருவிகள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். காசியில் சிவபெருமானும் அவரது பக்தர்களும் மட்டுமே அனைத்தையும் செய்கிறார்கள். சிவபெருமானின் அருள் எங்கு விழுகிறதோ, அந்த இடம் தானாகவே தழைக்கும். இந்த நேரத்தில், சிவபெருமான் மிகுந்த ஆனந்தத்தில் இருக்கிறார், மிகவும் மகிழ்ச்சியடைகிறார். எனவே, சிவபெருமானின் ஆசீர்வாதத்துடன், கடந்த 10 ஆண்டுகளில் காசியில் அனைத்து திசைகளிலும் வளர்ச்சி எதிரொலித்தது. மீண்டும் இன்று நமது காசி குடும்ப மக்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிவராத்திரி மற்றும் வண்ணமயமான ஏகாதசிக்கு முன்னதாக, வளர்ச்சித் திருவிழா இன்று காசியில் கொண்டாடப்படுகிறது. மேடைக்கு வருவதற்கு முன்பு, காசி நாடாளுமன்ற புகைப்படக் கலை போட்டியின் அரங்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நண்பர்களே,
காசி என்பது நமது நம்பிக்கையின் புனித யாத்திரை மட்டுமல்ல; இது பாரதத்தின் நித்திய உணர்வின் விழிப்புணர்வு மையமாகும். பாரதத்தின் செழிப்பின் கதை உலகம் முழுவதும் எதிரொலித்த ஒரு காலம் இருந்தது. இதன் பின்னணியில் பாரதத்தின் பொருளாதார வலிமை மட்டுமல்ல, நமது கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக செழிப்பும் இருந்தது. காசி போன்ற நமது புனித யாத்திரைத் தலங்களும், விஸ்வநாதர் தாம் போன்ற நமது கோயில்களும் நாட்டின் முன்னேற்றத்தின் யாகங்களாக இருந்தன. இங்கு தியானமும், தத்துவ விவாதங்களும் நடந்து வந்தன. இங்கு உரையாடல்களும், ஆராய்ச்சிகளும் நடந்து வந்தன. இங்கு பண்பாட்டின் ஊற்றுக்கண்களும், இலக்கியம், இசை ஆகியவற்றின் நீரோட்டங்களும் இருந்தன. எனவே, பாரதம் எத்தகைய புதிய சிந்தனைகளை வழங்கியிருந்தாலும், எத்தகைய புதிய விஞ்ஞானங்களுக்கு அது பங்களித்திருந்தாலும், அவற்றின் தொடர்பு ஏதேனும் ஒரு கலாச்சார மையத்துடன் உள்ளது.
நண்பர்களே,
நமது அறிவு, அறிவியல் மற்றும் ஆன்மீகம் பல மொழிகளால் கணிசமாக வளப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் சமஸ்கிருதம் முதன்மையானது. பாரதம் ஒரு சிந்தனை, சமஸ்கிருதம் அதன் முதன்மையான வெளிப்பாடு. பாரதம் ஒரு யாத்திரை (பயணம்), சமஸ்கிருதம் அதன் வரலாற்றின் முதன்மை அத்தியாயம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பூமி பாரதம், அதன் பிறப்பு சமஸ்கிருதம்.
நாடு முழுவதும் புத்த பகவானுடன் தொடர்புடைய இடங்களில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் கட்டப்படுவதால் உத்தரப்பிரதேசம் பயனடைந்துள்ளது. இதுபோன்ற பல திட்டங்கள் இன்று நாட்டில் நடந்து வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாடு அதே நம்பிக்கையுடன் வளர்ச்சியை துரிதப்படுத்தி, வெற்றிக்கான புதிய அளவுகோல்களை அமைக்கும். இது மோடியின் உத்தரவாதம், மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் மொபைல் போனில் உள்ள நமோ செயலிக்கு சென்று, நமோ செயலியை டவுன்லோட் செய்து, அதில் புகைப்படம் எடுக்க ஒரு பகுதி உள்ளது, செல்ஃபி எடுத்து அங்கு பதிவேற்றி, ஒரு பொத்தானை அழுத்துங்கள், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் என்னுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவு வழியாக உங்களுக்கு அனுப்பப்படும். ஆக, நம் காசியில் சமஸ்கிருதமும், அறிவியலும் இருக்கும்.
ஹரஹர மஹாதேவ்.