காசநோய் இல்லாத பஞ்சாயத்து முன்முயற்சியை தொடங்கி வைத்து, இந்தியா முழுவதும் காசநோய் தடுப்பு சிகிச்சை மற்றும் குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சையையும் தொடங்கி வைத்தார்
காசநோய் இல்லாத சமுதாயத்தை உறுதிப்படுத்துவதை நோக்கி இந்தியா தனது உறுதிப்பாட்டை அர்ப்பணித்துள்ளது
2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் லட்சியத்தை செயல்படுத்தும் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது
“காசநோய் போன்ற நோயை எதிர்த்துப் போராட உலகளவிலான தீர்மானத்திற்கு புதிய ஆற்றலை காசி வழங்கும்”
“ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டின் மூலம் உலக நலனுக்கான மற்றொரு உறுதிப்பாட்டை இந்தியா நிறைவு செய்கிறது”
காசநோய்க்கு எதிரான உலகப் போருக்கான புதிய மாதிரியை வழங்கும் இந்தியாவின் முயற்சிகள்”
“காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பு இந்தியாவின் மிகப் பெரிய பங்களிப்பாகும்”
“2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முடிவு கட்ட இந்தியா தற்போது இலக்கு வைத்து பாடுபடுகிறது”
“இந்தியாவின் நவீன தொழில்நுட்பம், புத்தாக்கங்கள் அனைத்துப் பிரச்சாரங்களின் பயனை மேலும் மேலும் நாடுகள் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்”

ஹர ஹர மகாதேவ்!

உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பாதக் அவர்களே, பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்களே, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அவர்களே, அனைத்து பிரதிநிதிகளே, ஸ்டாப் டிபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, மகளிரிரே மற்றும் பண்பாளரே!

ஒரே உலகம் காசநோய் மாநாட்டை காசியில் நடத்துவது எனக்கு சிறந்த மகிழ்ச்சியை தருகிறது. அதிர்ஷ்டவசமாக, நானும் காசியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். காசநோய் போன்ற நோய்க்கு எதிரான உலகளாவிய நமது முயற்சிக்கு காசி புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

ஒரே உலகம் காசநோய் மாநாட்டிற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் மனப்பூர்வமாக வரவேற்று நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தில் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளை காசி நகரம் பெற்றுள்ளது.  எந்தவிதமான தடைகள் இருந்தாலும் காசி எப்போதும் அனைவரது முயற்சியுடன் புதிய வழிகளை உருவாக்கி வந்துள்ளது. காசநோய் போன்ற நோய்களுக்கு எதிராக போராடுவதில் உலக உறுதிப்பாட்டுக்கு காசி புதிய ஆற்றலாக விளங்குகிறது.

உலகம் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தம் ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உலகுக்கு வழங்கியுள்ளது.  ஜி20 அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா அதன் கருப்பொருளாக “ஒரே குடும்பம், ஒரே உலகம், ஒரே எதிர்காலம்” என்பதை மையமாக வைத்துள்ளது. ஒரே உலகம் ஒரே சுகாதாரம் என்ற தொலைநோக்குடன் உலகில் இந்தியா முன்னேறி செல்கிறது. ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டுடன் உலக நன்மைக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.

2014-ம் ஆண்டுக்கு பிறகு காச நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாடும், அர்ப்பணிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. காச நோய்க்கு எதிரான உலகளாவிய போரில் புதிய நடைமுறையில் இந்தியாவின் முயற்சிகள் முக்கியமானவை. உடல் தகுதி இந்தியா இயக்கம், யோகா, கேலோ இந்தியா உள்ளிட்டவற்றின் மூலம் ஊட்டச்சத்து, சிகிச்சைகளில் புதுமை, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ஆரோக்கியம், நோய்த்தடுப்பு போன்றவை மக்களின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுத்தப்படுகிறது.

நிசாய் மித்ரா இயக்கத்தின் மூலம் மக்களின் பங்களிப்புடன் காசநோயாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் மூலம் 10 லட்சம் காச நோயாளிகள் பொது மக்களால் தத்தெடுக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கூட இந்த இயக்கத்தின் கீழ் உதவ முன்வந்துள்ளனர்.  இந்த திட்டத்தின் கீழ் காசநோயாளிகளுக்கான நிதியுதவி 1000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்த இயக்கம் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.  வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே!

2018-ம் ஆண்டில் காசநோயாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் இதுவரை 2000 கோடி ரூபாய் நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் அவர்களது சிகிச்சைக்காக செலுத்தப்பட்டுள்ளது. சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட காசநோயாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். நாட்டில் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. காச நோயாளிகள் அதிகம் உள்ள பகுதிகளை கருத்தில் கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ப சிறப்பு செயல்திட்ட கொள்கைகள் வகுக்கப்படுகிறது. இவற்றின் ஒரு பகுதியாக ‘காச நோய் இல்லாத ஊராட்சிகள் இயக்கம்’ என்ற புதிய இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. காச நோய்க்கு 6 மாத  சிகிச்சைக்கு பதிலாக 3 மாத சிகிச்சை திட்டத்தையும் அரசு தொடங்கியிருக்கிறது. முன்னதாக நோயாளிகள் 6 மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது புதிய நடைமுறையில் நோயாளிகள் வாரத்தில் ஒரு நாள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையே போதுமானது.

நண்பர்களே!

சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நோய் கண்காணிப்பு தொடர்பான புதிய நடைமுறையை உருவாக்கியிருக்கிறது. உலக சுகாதார அமைப்பை தவிர பிற நாடுகள் எதுவும் இத்தகையை முறையை உருவாக்கவில்லை. இந்தியா மட்டுமே இந்த நடைமுறையை உருவாக்கியிருக்கிறது.

காச நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று இது தொடர்பான நோய் தடுப்பு பணிகளுக்காக கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.  உலகளவில் காச நோயை ஒழிக்க 2030-ம் ஆண்டு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் அதை ஒழிக்க இலக்கு நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மற்றொரு உறுதியான நடவடிக்கையாகும். நோய் கண்டறிதல், பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களை பயன்படுத்தி பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா போராடியது.  இந்தியாவின் உள்ளூர் அணுகுமுறை உலகளவில் திறன் வாய்ந்ததாக இருந்தது.  காச நோய்க்கான மருந்துகளைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே 80 சதவீத மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் இயக்கங்கள், புதுமையான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பல நாடுகள் பயன்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளும் இது தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கலாம்.  நமது இந்த தீர்மானம் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதிபட கூறுகிறேன். நாம் காசநோய்க்கு முடிவுகட்ட முடியும்.

தொழுநோய்க்கு எதிரான மிகப்பெரிய இயக்கம் 2001-ம் ஆண்டு நான் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொடங்கப்பட்டது. இதன் மூலம் குஜராத்தில் தொழுநோய் விகிதம் 23 சதவீதத்தில் இருந்து 1 சதவீதத்துக்கும் குறைவாக சரிந்தது. காச நோய்க்கு எதிராகவும் போராடி இந்தியா  வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.  இன்றைய புதிய இந்தியா இலக்குகளை அடைவதில் பெயர் பெற்றது.  திறந்தவெளி கழிப்பிடங்களை அகற்றுதல், சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் தொடர்பான இலக்கு பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகித இலக்கை முன்கூட்டியே எட்டியது போன்றவை இதில் அடங்கும். பொது மக்களின் பங்களிப்பு  ஒட்டுமொத்த உலகத்துக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும்.  பொது மக்களின் பங்களிப்பின் மூலம் காச நோய்க்கு எதிரான போரில் இந்தியா வெற்றிபெறும். காச நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களே!

சுகாதார சேவைகளை காசி நகருக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது சுகாதார கண்காணிப்புப் பிரிவு  இயக்கப்பட்டு இருப்பதையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள  குழந்தைகள் நல நிறுவனத்தில்  நவீனமயமாக்கப்பட்ட ரத்தவங்கி, பன்னோக்கு மருத்துவ வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டு இருப்பதையும், பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதையும் நான் சுட்டிக்காட்டுகிறேன். இதேபோல், கபீர் சௌரா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, டயாலிசஸ் வசதிகள், சி டி ஸ்கேன் வசதிகள் என காசி நகரத்தின் கிராமப்பகுதிகள் அனைத்திலும் சகாதார வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. வாரணாசியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க ஏதுவாக 70-க்கும் மேற்பட்ட மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலான தேசத்தின் அனுபவம், மனவலிமை,  நிபுணத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தி காசநோயை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்கவேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு அவற்றின் தேவைக்கேற்ப தொடர்ந்து உதவ இந்தியா, எப்போதுமே தயாராக உள்ளது.  காசநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒவ்வொருவரின் முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றிபெறும்.  நம்முடைய இன்றைய முயற்சிகள் நமது பாதுகாப்பான எதிர்காலத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் என நம்புகிறேன். நமது எதிர்கால சந்ததியினரிடம்  ஆரோக்கியமான உலகத்தை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. மிக்க நன்றி.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi