ஹர ஹர மஹாதேவ்!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மகேந்திர நாத் பாண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரஜேஷ் பதக் அவர்களே, பனாஸ் பால் பண்ணையின் தலைவர் திரு சங்கர்பாய் சவுத்ரி அவர்களே, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு பூபேந்திர சவுத்ரி அவர்களே, மாநிலத்தின் பிற அமைச்சர்கள், பிரதிநிதிகள், காசியைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளே.
சகோதர சகோதரிகளே,
இன்று, 13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கான திறப்பு, அடிக்கல் நாட்டு விழாக்கள் நடைபெற்றன. இந்தத் திட்டங்கள் காசியின் வளர்ச்சியை மட்டுமின்றி, பூர்வாஞ்சல் உள்ளிட்ட கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும். ரயில்வே, சாலை, விமான நிலையங்கள், கால்நடை பராமரிப்பு, தொழில், விளையாட்டு, திறன் மேம்பாடு, சுகாதாரம், தூய்மை, ஆன்மிகம், சுற்றுலா, சமையல் எரிவாயு மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்கள் இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் காரணமாக வாரணாசி மற்றும் ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பிராந்தியத்திற்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே,
சில மாதங்கள் முன்பாக வாரணாசிக்கு நான் வந்தபோது, புல்வாரியா மேம்பாலத்தை நான் தொடங்கி வைத்தேன். வாரணாசிக்கு இந்த மேம்பாலம் எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக மாறியுள்ளது என்பது தெளிவாகிறது.
நண்பர்களே,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பனாஸ் பால் பண்ணையை நான் திறந்து வைத்தேன். அந்த நேரத்தில், இந்தத் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று வாரணாசி உட்பட பூர்வாஞ்சலைச் சேர்ந்த அனைத்து கால்நடை பராமரிப்பாளர்கள், பால் பண்ணை விவசாயிகளுக்கு நான் உத்தரவாதம் அளித்தேன். இன்று மோடியின் உத்தரவாதம் உங்கள் முன் உள்ளது. அதனால்தான் மக்கள் சொல்கிறார்கள் - மோடியின் உத்தரவாதம் என்பது நிறைவேறுவதற்கான உத்தரவாதம். சரியான முதலீட்டுடன் வேலை வாய்ப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதற்கு பனாஸ் பால் பண்ணை ஒரு சிறந்த உதாரணம். தற்போது, பனாஸ் பால் பண்ணை வாரணாசி, மிர்சாபூர், காசிப்பூர், ரேபரேலி மாவட்டங்களில் உள்ள கால்நடை பராமரிப்பாளர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கிறது.
நண்பர்களே,
இது மட்டுமின்றி, பனாஸ் காசி சங்குல் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த சங்குல் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பால் தவிர, மோர், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், பன்னீர் மற்றும் பல்வேறு வகையான உள்ளூர் இனிப்புகளும் தயாரிக்கப்படும். இவை அனைத்தும் செய்யப்படும்போது, அவற்றை விற்பவர்களுக்கும் வேலை கிடைக்கும். வாரணாசியின் புகழ்பெற்ற இனிப்புகளை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதை உறுதி செய்வதில் இந்த ஆலை முக்கியப் பங்கு வகிக்கும்.
நண்பர்களே,
இந்த முயற்சிகளுக்கு இடையே, பனாஸ் பால் பண்ணையின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய எங்கள் மூத்த சகாக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாலுக்கான பணத்தை எந்த ஆண் உறுப்பினருக்கும் கொடுக்காமல், டிஜிட்டல் முறையில் நேரடியாக நமது சகோதரிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது சிறந்த முடிவுகளைத் தருகிறது என்று என் அனுபவம் கூறுகிறது. கால்நடை வளர்ப்பு என்பது நமது சகோதரிகள் அதிகம் ஈடுபடும் ஒரு துறையாகும். இது நமது சகோதரிகளை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வழியாகும்.
நண்பர்களே,
எங்கள் அரசு விவசாயிகளை எரிசக்தி வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவது மட்டுமின்றி, தற்போது விவசாயிகளை உரம் வழங்கும் நிறுவனமாக மாற்றவும் பணியாற்றி வருகிறது.
நண்பர்களே,
விவசாயிகள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு எப்போதும் பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு குவிண்டாலுக்கு ரூ .340 ஆக உயர்த்தியது.
சகோதர சகோதரிகளே,
'வளர்ச்சியடைந்த பாரதம்' கட்டமைப்பு 'தற்சார்பு பாரத்' வலிமையின் அடிப்படையில் இருக்கும். ஒவ்வொரு பொருளையும் வெளியில் இருந்து இறக்குமதி செய்து 'வளர்ச்சியடைந்த பாரதம்' அமைக்க முடியாது. இதுதான் முந்தைய அரசுகளின் அணுகுமுறைக்கும், நமது அரசுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். நாட்டின் ஒவ்வொரு சிறிய சக்தியும் விழிப்படைந்தால், சிறு விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு உதவி வழங்கப்படும்போது மட்டுமே தற்சார்பு பாரதம் சாத்தியமாகும்.
நண்பர்களே,
காசி, உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் விரைவான வளர்ச்சியை நாம் தடைக்கு உட்படுத்திவிடக் கூடாது. காசியின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. மோடியின் உத்தரவாதத்தின் மீது நாடும், உலகமும் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், உங்கள் பிணைப்பும், பாபாவின் ஆசீர்வாதமும் இதன் பின்னால் இருக்கிறது. புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்! என்னுடன் சொல்லுங்கள்.

பாரத் மாதா கீ - ஜே!
பாரத் மாதா கீ - ஜே!
பாரத் மாதா கீ - ஜே!
ஹர ஹர மஹாதேவ்!