Quote“ஒரே உலகம், ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற தொலைநோக்குச் சிந்தனையை நாம் உலகிற்கு உணர்த்தியுள்ளோம். மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்து படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது இது”
Quote“குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது நமது அரசின் முதன்மையான முக்கியத்துவமாகும்”
Quote“ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தகத் திட்டங்கள், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது”
Quote“பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் புதிய மருத்துவமனைகளை மட்டும் உருவாக்காமல், புதிய முழுமையான சுகாதார சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது”
Quote“சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் கவனம் செலுத்துவது தொழில்முனைவோருக்கு சிறந்த வாய்ப்பாகும் மற்றும் நமது முயற்சிகளை உலகளாவிய சுகாதாரத் துறையில் கவனம் செலுத்த செய்யும்”
Quote“மருந்து உற்பத்தித் துறையின் இன்றைய சந்தைய மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாயாகும். தனியார் மற்றும் கல்வித் துறையினர் இடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் இதன் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்”

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் இன்று உரையாற்றினார்.

வணக்கம்!

நண்பர்களே,

கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும். வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்தது. தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியது.  அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியது. இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது.

பெருந்தொற்றுக் காலத்தில் விநியோகம் குறித்து பாடம் கற்றுக்கொண்டது. இது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக இருந்தது. பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் ஆகியவை ஆயுதங்களாக இருந்தது.  முந்தைய ஆண்டுகளில் வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை குறைக்க, அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதில் அனைத்து தரப்பினரின் பங்களிப்பு அவசியம்.

நண்பர்களே,

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக இந்தியாவில் சுகாதாரம் தொடர்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் நீண்ட கால பார்வை இல்லாமல் இருந்தது. சுகாதார அமைச்சகம் என்றோடு மட்டும் உடல்நலன் குறித்து வரையறுப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறையை நாம் தற்போது மேற்கொண்டு வருகிறது. குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது நமது அரசின் முதன்மையான முக்கியத்துவம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் 80,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. மார்ச் 7-ம் நாள் மக்கள் மருந்தக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 9,000 மக்கள் மருந்தகங்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் 20,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.  இந்த 2 திட்டங்கள் வாயிலாக மக்களின் 1 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது.

நண்பர்களே,

ஆபத்தான நோய்களின் சிகிச்சைக்கான வலிமையான சுகாதார உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் அவசியம்..  அரசின் முன்னுரிமை நடவடிக்கையால், நாடு முழுவதும் வீடுகளுக்கு அருகிலேயே 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் பரிசோதனை வசதியும், முதல் சிகிச்சை உதவியும் கிடைத்தது. நீரிழிவு, புற்றுநோய், இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறியும் வசதியும் இந்த மையங்களில் உள்ளது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரகால சுகாதார உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புதிய மருத்துவமனைகளை மட்டும் உருவாக்காமல், புதிய முழுமையான சுகாதாரச் சுற்றுச்சூழலை இது ஏற்படுத்தியுள்ளது. சுகாதார தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில் நிபுணர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை இது உருவாக்கியுள்ளது.

நண்பர்களே,

சுகாதாரத்துறையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோடு மனிதவள மேம்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளில் 260-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரட்டிப்பாகியுள்ளன. செவிலியர் கல்லூரிகள் திறப்பது குறித்து இந்த ஆண்டுப் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 157 செவிலியர் கல்லூரிகள் திறப்பதன் மூலம் மருத்துவ மனிதவளத் துறையில் இது மிகப்பெரிய நடவடிக்கையாக இருக்கும். இது உள்நாட்டு தேவைமட்டுமல்லாமல் உலகளாவிய தேவையை நிறைவேற்றுவதற்கும் பயனளிக்கும்.

நண்பர்களே,

மருத்துவ சேவைகளை எளிதிலும், கட்டுப்படியாகும் வகையிலும் நிலையாக கிடைக்கச் செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு அவசியம், சுகாதாரத்துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அரசின் கவனம் அதிகரித்துள்ளதோடு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை மூலம் குடிமக்களுக்கு உரிய நேரத்தில் சுகாதார கவனிப்பை வழங்க அரசு விரும்புகிறது. இ-சஞ்ஜீவினி போன்ற திட்டங்கள் மூலம் தொலைதூர ஆலோசனை வழியாக 10 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தத்துறையில் புத்தொழில்களுக்கான புதிய வாய்ப்புகளை 5ஜி உருவாக்கி வருகிறது. மருந்துகள் விநியோகம் மற்றும் பரிசோதனை சேவைகளில் ட்ரோன்கள் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. தொழில்முனைவோருக்கு இது மகத்தான வாய்ப்பாக உள்ளது. அனைவருக்கும் சுகாதாரம் என்பதற்கான நமது முயற்சிகளுக்கு இது உந்துதல் அளிக்கும். மருத்துவ உபகரணங்கள் துறையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  பெருமொத்த மருந்து பூங்காக்கள், மருத்துவ உபகரணப்பூங்காக்கள் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ உபகரணங்கள் துறையில் 12-14 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. வரும்  ஆண்டுகளில் இதன் மூலமான சந்தை ரூ.4 லட்சம் கோடியை எட்டக்கூடும். எதிர்கால மருத்துவத் தொழில்நுட்பத்திற்கு திறன் வாய்ந்த மனித ஆற்றலுக்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உயிரி மருத்துவப் பொறியியல் போன்ற பாட வகுப்புகள்  தொடங்கப்படும்.  தொழில்துறை கல்வி மற்றும் அரசின் ஒருங்கிணைப்புக்கான வழிவகைகளைக் கண்டறியுமாறு பங்கேற்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் மருந்துத்துறை மீது அதிகரித்து வரும் உலகின் நம்பிக்கையைப் பாதுகாப்பதும், இதனை சாதகமாகப் பயன்படுத்துவதும் அவசியம். பொருளாதாரத்தை வலுப்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்ல சிறப்பு மையங்கள் மூலம் மருந்து உற்பத்தித்துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருந்துகள் உற்பத்தித்துறையில் சந்தையின் அளவை ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலாக மாற்றுவதற்கு தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை கண்டறிய வேண்டியது அவசியம். இந்தத்துறையில் கூடுதல் ஆய்வுக்கு பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆராய்ச்சித்துறைக்காக ஐசிஎம்ஆர் மூலம் பல புதிய தொழிற்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நோய்த்தடுப்பு சுகாதாரத்திற்கான அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தூய்மைக்காக தூய்மை இந்தியா திட்டம், புகை தொடர்பான நோய்களை தடுக்க உஜ்வாலா திட்டம், தண்ணீர் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்க ஜல்ஜீவன் இயக்கம், சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு தேசிய ஊட்டச்சத்து இயக்கம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாத்ருவந்தனா திட்டம், இந்திர தனுஷ் இயக்கம், யோகா, உடல்தகுதி இந்தியா இயக்கம், ஆயுர்வேதம் போன்றவை நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது. உலக சுகாதார அமைப்பின் ஆதரவில் இந்தியாவில் உலகளாவிய பாரம்பரிய மருந்துகள் மையம் அமைக்கப்பட்டுள்ளதால், ஆயுர்வேதத்தில்  ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சியின் அவசியம் ஏற்பட்டுள்ளது. 

நண்பர்களே,

நவீன மருத்துவ அடிப்படைக்  கட்டமைப்பில் இருந்து மருத்துவ மனித வளத்தை உருவாக்கும் அரசின் முயற்சிகளை நான் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன். புதிய திறன்கள் என்பவை இந்திய குடிமக்களுக்கான சுகாதார வசதிகளுடன் மட்டுப்பட்டதல்ல. உலகின்  அதிக ஈர்ப்புள்ள மருத்துவச் சுற்றுலா இடமாக இந்தியாவை மாற்றுவதும் அவற்றின் நோக்கம். மருத்துவச் சுற்றுலா என்பது இந்தியாவில் மிகப்பெரிய துறையாக உள்ளது, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான  மாபெரும் வழியாகவும் இருக்கிறது.

நண்பர்களே,

அனைவரின் முயற்சி என்பதால் மட்டுமே இந்தியாவில் வளர்ச்சியடைந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய சூழலை உருவாக்க முடியும்,  இதற்குத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. விரும்பிய இலக்குகளை உறுதியான திட்டங்களுடன் உரிய காலத்தில்  நிறைவேற்றுவதற்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் வழங்கப்படும். அடுத்த பட்ஜெட் காலத்திற்கு முன் அனைத்துக் கனவுகளையும் நனவாக்க உங்களின் அனுபவப்பகிர்வு தேவைப்படுகிறது என்று தமது உரையை நிறைவு செய்தார்.

நன்றி

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
From Ghana to Brazil: Decoding PM Modi’s Global South diplomacy

Media Coverage

From Ghana to Brazil: Decoding PM Modi’s Global South diplomacy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 12, 2025
July 12, 2025

Citizens Appreciate PM Modi's Vision Transforming India's Heritage, Infrastructure, and Sustainability