Quoteநினைவு தபால் தலையையும் வெளியிட்டார்
Quote"புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சான்றாக திகழ்கிறது. இந்தப் புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலை” ;
Quote"கர்நாடக இளைஞர்கள் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பாதுகாப்பு துறையில் பயன்படுத்த வேண்டும்"
Quote"புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் நாடு முன்னேறும் போது, அதன் அமைப்புகளும் புதிய சிந்தனைக்கு ஏற்ப மாறத் தொடங்கும்"
Quote"இன்று, ஏரோ இந்தியா ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையின் நோக்கத்தை வெளிப்படுத்துவதுடன், இந்தியாவின் தன்னம்பிக்கையையும் பறைசாற்றுகிறது "
Quote"21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது "
Quote"பாதுகாப்பு உற்பத்தியில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா விரைவாக முன்னேறும், அதில் நமது தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்"
Quote"இன்றைய இந்தியா வேகமாகவும், வெகு தொலைவுக்கும் சிந்திக்கிறது, விரைவான முடிவுகளை எடுக்கிறது"
Quote"ஏரோ இந்தியாவின் கர்ஜனை இந்தியாவின் சீர்திருத்தம்,

இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கர்நாடக மாநில ஆளுநர், முதலமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எனது அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் தாய்மார்கள், பெரியோர்களுக்கு வணக்கம்.

நண்பர்களே,

புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சாட்சியாக உள்ளது. இந்த புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலையாக உள்ளது. இன்று இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டி வருகிறது.

 இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏரோ இந்தியா 2023 ஒரு சிறந்த உதாரணம். இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்வது முழு உலகமும் இந்தியாவின் மீது காட்டும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இந்திய எம்எஸ்எம்இக்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள், ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை. தற்சார்பு இந்தியாவின் வலிமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக  பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை அமர்வு  நடைபெறவுள்ளது. இந்தத் துறையின் துடிப்பான பங்கேற்புகள் இந்தியாவின் விமானத்துறை திறன்களை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாகத் திகழும் கர்நாடகாவில், ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இது விமானத்துறையில் கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும். நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், தங்களது தொழில் நுட்பத் திறன்களைப்  பாதுகாப்புத் துறையில்  ஈடுபடுத்த வேண்டும்.

 மாறி வரும் புதிய இந்தியாவின் அணுகுமுறையை பிரிதிபலிக்கின்ற ஏரோ இந்தியா 2023 நடைபெறுகிறது.  புதிய சிந்தனையோடும், புதிய அணுகுமுறையோடும் நாடு  முன்னேறும் போது, அதன் நடைமுறைகளும் அதற்கேற்ப புதிய சிந்தனைக்கான மாற்றத்தைத் தொடங்கவேண்டும். ஏரோ இந்தியா முன்பு வெறும் காட்சியாகவும், இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான வழியாகவும் மட்டும் இருந்தது. இப்போது அந்தக் கண்ணோட்டம் மாறியிருக்கிறது.

|

தனது திறன்களை வெளிக்கொண்டு வருவதில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சூரத்திலும் துமாக்கூருவிலும் உள்ள தேஜஸ், ஐஎன்எஸ் விக்ரந்த் மற்றும் நவீன உற்பத்தி வசதிகள், இவை  தற்சார்பு இந்தியாவின் ஆற்றலாகவும், உலகின் புதிய மாற்று மற்றும் வாய்ப்புகளோடு இணைந்ததாகவும் இருக்கிறது.

 சீர்திருத்தங்களின் உதவியுடன் அனைத்துத் துறைகளிலும் புரட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிட்டதும் இல்லை, முயற்சியில் பின்தங்கியதும் இல்லை. பல தசாப்தங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்வதாக இருந்த நாடு இன்று உலகின் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

  கடந்த 8-9 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2024-25க்குள் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதில் நமது தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யுமாறு தனியார் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

|

இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, தொலைநோக்குப் பார்வையுடன் விரைவான முடிவுகளை எடுக்கிறது. அமிர்த காலத்தில் இந்தியாவின் செயல்பாடுடன் போர் விமானியை ஒப்பிட்டார். தயக்கம் ஏதும் இல்லாமல், புதிய உச்சத்தைத் தொடுவதற்கு மிகவும் ஆவலோடு இருக்கும் நாடு, இந்தியா. எத்தனை உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தாலும் இந்தியா வேரூன்றியிருக்கிறது.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய இந்தியாவின் செய்தியை ஏரோ இந்தியா எதிரொலிக்கிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்குகிறது. இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த சூழலியலை உருவாக்குவதற்காக எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் இதர துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்துறைகளுக்கான உரிமங்களை வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கியது. அவற்றின் கால அளவை நீட்டித்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உற்பத்தி ஆலைகளுக்கான வரி சலுகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

|

தேவை, நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஏற்படும் இடங்களில் எல்லாம் தொழில் வளர்ச்சி என்பது இயற்கையானது. துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேலும் ஆற்றல் பெறும்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Why agriculture is key to building Viksit Bharat

Media Coverage

Why agriculture is key to building Viksit Bharat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 05, 2025
August 05, 2025

Appreciation by Citizens for PM Modi’s Visionary Initiatives Reshaping Modern India