Quote“நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மணிப்பூரும், வடகிழக்கு மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன”
Quote“வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணங்களை சேர்த்து இருப்பதுடன் விளையாட்டுப் பன்முகத்தன்மைக்கும் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன”
Quote“எந்த ஒரு சிந்தனை முகாமும் சிந்தனைகளில் தொடங்கி ஆலோசனைகளின் மூலம் தொடரப்பட்டு செயலாக்கத்தில் நிறைவடைகிறது”
Quote“ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால இலக்குகளையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்”
Quote“விளையாட்டு உள்கட்டமைப்புகள் தொடர்பாக ரூ.400 கோடிக்கும் கூடுதலான திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதன் மூலம் இத்திட்டங்கள் இப்பகுதியின் மேம்பாட்டுக்கு புதிய பாதையை வகுத்துள்ளன”

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாவான அனுராக் தாக்கூர் அவர்களே, அனைத்து மாநிலங்களின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்களே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

இந்த ஆண்டு சிந்தனை முகாம் மணிப்பூரில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக கோப்பைகளை வென்று மூவர்ணக் கொடியின் புகழை மேலும் உயர்த்தியுள்ளனர். இந்தப் பகுதியின் உள்ளூர் விளையாட்டுகளான சாகோல் கஞ்சாய், தங்-டா, யூபி லக்பி, முக்னா மற்றும் ஹியாங் தன்பா போன்றவை தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளன. நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மணிப்பூரும், வடகிழக்கு மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.    மணிப்பூரின் ஊ-லவாபி விளையாட்டு கபடியைப் போன்றது. இதேபோல் ஹியாங் தன்னபா விளையாட்டு கேரள மாநிலத்தில் நடத்தப்படும் படகுப் போட்டியை போன்றது. போலோ எனப்படும் குதிரையேற்றத்துடன் மணிப்பூர் மாநிலம் வரலாற்று ரீதியிலான நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது.  அத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணங்களை சேர்த்து இருப்பதுடன் விளையாட்டுப் பன்முகத்தன்மைக்கும் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன. சிந்தனை முகாமின் இறுதியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுவார்கள்.

நண்பர்களே,

எந்த ஒரு சிந்தனை முகாமும் சிந்தனைகளில் தொடங்கி ஆலோசனைகளின் மூலம் தொடரப்பட்டு செயலாக்கத்தில் நிறைவடைகிறது. எதிர்கால இலக்குகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் முந்தைய மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் செயலாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். 2022-ம் ஆண்டு கெவாடியாவில் நடைபெற்ற முந்தையக் கூட்டத்தில் பல முக்கியமான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் விளையாட்டு சூழல் அமைப்பை மேலும் சிறந்ததாக மாற்றியமைப்பது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது. விளையாட்டுத்துறையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு  அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிறந்த முன்னேற்றங்கள் சாத்தியமாகும்.  இந்த ஆய்வுகள், கொள்கை மற்றும் திட்டங்கள் என்ற அளவில் மட்டும் எடுத்துச் செல்லப்படாமல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முந்தைய ஆண்டு சாதனைகள் என்பதன் அடிப்படையிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு இந்திய தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனைப்படைத்துள்ளனர். அவர்களின் சாதனையைக் கொண்டாடும் வேளையில், நிதியுதவியையும், பரிசுகளையும் வழங்கி ஆதரவுக் கரம் நீட்டுவது அவசியம். உலகப்கோப்பை ஸ்குவாஷ் போட்டி, ஆசியான் சாம்பியன் கோப்பை ஹாக்கி, ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்குதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அனைத்து துறைகளும், வழிவகை செய்து கொடுத்துள்ளன. வீரர்கள், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைகளை செய்துகொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவற்றால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து வீரர்களை மீட்பதற்கு மாறுப்பட்ட அணுகுமுறையை அனைத்து அமைச்சகங்களும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். விளையாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமான உத்திகளை கையாள வேண்டியது அவசியம். அதே நேரத்தில், கால்பந்தாக இருந்தாலும் சரி, ஹாக்கியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு போட்டியின் சூழலுக்கேற்ற வகையில், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்து அதற்காக உழைக்கவேண்டியது அவசியமாகும்.

நண்பர்களே,

உடல் தகுதி என்பது விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை உள்ளூர் விளையாட்டுகளில் அதிக அளவில் பங்கேற்பதன் மூலம், போட்டிக்கான பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில், எந்தவொரு வீரரின் விளையாட்டுத்திறமையையும் நிராகரிக்கப்படவில்லை என்பதை விளையாட்டு அமைச்சகம் உறுதி செய்யவேண்டும்.

நண்பர்களே,

நாட்டில் உள்ள ஒவ்வொரு திறமையான விளையாட்டு வீரருக்கும், தரமான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை ஆகும். இந்த விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கேலோ இந்தியா திட்டம், மாவட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நிச்சயம் மேம்படுத்தும். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானது. தேசிய இளைஞர் திருவிழா என்பது, மாநில அளவில் வெறும் சம்பிரதாயமாக நடத்தப்படாமல், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாக மாற்றப்பட வேண்டும். எல்லா விளையாட்டுக்களிலும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் போது, இந்தியா தன்னை ஒரு முன்னணி விளையாட்டு நாடாக நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.

நண்பர்களே,

 

வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் தேசத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்கின்றன. ரூ.400 கோடி மதிப்பிலான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், தற்போது வடகிழக்கு மாநிலங்களை மேம்பாட்டிற்கான புதிய திசையில் பயணிக்கச் செய்துள்ளன. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை எதிர்காலத்தில்  நிச்சயம் உருவாக்கித் தரும். இதற்கு, கேலோ இந்தியா திட்டம், ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும். வடகிழக்கு மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கேலோ இந்தியா மையங்கள் உருவாக்கப்படும். இந்த முயற்சிகள், விளையாட்டு உலகத்தில் புதிய இந்தியாவிற்கான அடித்தளமாக அமையும். நாட்டிற்கு புதிய அடையாளத்தைத் தரும். இந்த முயற்சிகளை வேகமாக செயல்படுத்த அனைத்து மாநிலங்களின் துறை சார்ந்த வல்லுநர்களும் முன்வரவேண்டும். இதற்கு இத்தகைய சிந்தனை முகாம்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.  இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

 

  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 27, 2024

    मोदी जी 400 पार
  • Vaishali Tangsale February 12, 2024

    🙏🏻🙏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 11, 2024

    जय हो
  • B.Lakshmana April 25, 2023

    It is said average age of youth in INDIAis ten years younger than CHINA.INDIA is bubbling with young and energetic youths.Their strength should be properly tapped and utilised to make MADE IN INDIA a grand success.
  • Bibekananda Mahanta April 25, 2023

    🚩🙏ଜୟ ଶ୍ରୀ ରାମ 🙏🚩
  • Nagendra Kumar Voruganty April 25, 2023

    JAI BJP and MODIJI
  • Anil Mishra Shyam April 25, 2023

    Ram Ram 🙏🙏 g
  • Kuldeep Yadav April 25, 2023

    આદરણીય પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારા નમસ્કાર મારુ નામ કુલદીપ અરવિંદભાઈ યાદવ છે. મારી ઉંમર ૨૪ વર્ષ ની છે. એક યુવા તરીકે તમને થોડી નાની બાબત વિશે જણાવવા માંગુ છું. ઓબીસી કેટેગરી માંથી આવતા કડીયા કુંભાર જ્ઞાતિના આગેવાન અરવિંદભાઈ બી. યાદવ વિશે. અમારી જ્ઞાતિ પ્યોર બીજેપી છે. છતાં અમારી જ્ઞાતિ ના કાર્યકર્તાને પાર્ટીમાં સ્થાન નથી મળતું. એવા એક કાર્યકર્તા વિશે જણાવું. ગુજરાત રાજ્ય ના અમરેલી જિલ્લામાં આવેલ સાવરકુંડલા શહેર ના દેવળાના ગેઈટે રહેતા અરવિંદભાઈ યાદવ(એ.બી.યાદવ). જન સંઘ વખત ના કાર્યકર્તા છેલ્લાં ૪૦ વર્ષ થી સંગઠનની જવાબદારી સંભાળતા હતા. ગઈ ૩ ટર્મ થી શહેર ભાજપના મહામંત્રી તરીકે જવાબદારી કરેલી. ૪૦ વર્ષ માં ૧ પણ રૂપિયાનો ભ્રષ્ટાચાર નથી કરેલો અને જે કરતા હોય એનો વિરોધ પણ કરેલો. આવા પાયાના કાર્યકર્તાને અહીંના ભ્રષ્ટાચારી નેતાઓ એ ઘરે બેસાડી દીધા છે. કોઈ પણ પાર્ટીના કાર્યકમ હોય કે મિટિંગ એમાં જાણ પણ કરવામાં નથી આવતી. એવા ભ્રષ્ટાચારી નેતા ને શું ખબર હોય કે નરેન્દ્રભાઇ મોદી દિલ્હી સુધી આમ નમ નથી પોચિયા એની પાછળ આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તાઓ નો હાથ છે. આવા પાયાના કાર્યકર્તા જો પાર્ટી માંથી નીકળતા જાશે તો ભવિષ્યમાં કોંગ્રેસ જેવો હાલ ભાજપ નો થાશે જ. કારણ કે જો નીચે થી સાચા પાયા ના કાર્યકર્તા નીકળતા જાશે તો ભવિષ્યમાં ભાજપને મત મળવા બોવ મુશ્કેલ છે. આવા ભ્રષ્ટાચારી નેતાને લીધે પાર્ટીને ભવિષ્યમાં બોવ મોટું નુકશાન વેઠવું પડશે. એટલે પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારી નમ્ર અપીલ છે કે આવા પાયા ના અને બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ મૂકો બાકી ભવિષ્યમાં ભાજપ પાર્ટી નો નાશ થઈ જાશે. એક યુવા તરીકે તમને મારી નમ્ર અપીલ છે. આવા કાર્યકર્તાને દિલ્હી સુધી પોચડો. આવા કાર્યકર્તા કોઈ દિવસ ભ્રષ્ટાચાર નઈ કરે અને લોકો ના કામો કરશે. સાથે અતિયારે અમરેલી જિલ્લામાં બેફામ ભ્રષ્ટાચાર થઈ રહીયો છે. રોડ રસ્તા ના કામો સાવ નબળા થઈ રહિયા છે. પ્રજાના પરસેવાના પૈસા પાણીમાં જાય છે. એટલા માટે આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ લાવો. અમરેલી જિલ્લામાં નમો એપ માં સોવ થી વધારે પોઇન્ટ અરવિંદભાઈ બી. યાદવ(એ. બી.યાદવ) ના છે. ૭૩ હજાર પોઇન્ટ સાથે અમરેલી જિલ્લામાં પ્રથમ છે. એટલા એક્ટિવ હોવા છતાં પાર્ટીના નેતાઓ એ અતિયારે ઝીરો કરી દીધા છે. આવા કાર્યકર્તા ને દિલ્હી સુધી લાવો અને પાર્ટીમાં થતો ભ્રષ્ટાચારને અટકાવો. જો ખાલી ભ્રષ્ટાચાર માટે ૩૦ વર્ષ નું બિન ભ્રષ્ટાચારી રાજકારણ મૂકી દેતા હોય તો જો મોકો મળે તો દેશ માટે શું નો કરી શકે એ વિચારી ને મારી નમ્ર અપીલ છે કે રાજ્ય સભા માં આવા નેતા ને મોકો આપવા વિનંતી છે એક યુવા તરીકે. બાકી થોડા જ વર્ષો માં ભાજપ પાર્ટી નું વર્ચસ્વ ભાજપ ના જ ભ્રષ્ટ નેતા ને લીધે ઓછું થતું જાશે. - અરવિંદ બી. યાદવ (એ.બી યાદવ) પૂર્વ શહેર ભાજપ મહામંત્રી જય હિન્દ જય ભારત જય જય ગરવી ગુજરાત આપનો યુવા મિત્ર લી.. કુલદીપ અરવિંદભાઈ યાદવ
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Modi’s Red Fort Arch – From Basics Of Past To Blocks Of Future

Media Coverage

Modi’s Red Fort Arch – From Basics Of Past To Blocks Of Future
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 16, 2025
August 16, 2025

Citizens Appreciate A New Era for Bharat PM Modi's Ambitious Path to Prosperity