“The identity, traditions and inspirations of India cannot be defined without the contributions of Karnataka”
“From Ancient times, Karnataka has played the role of Hanuman in India”
“If any epoch-changing mission starts from Ayodhya and goes to Rameshwaram, then it gets strength only in Karnataka”
“Democratic teachings of Lord Basveshwara through ‘Anubhava Mantapa’ are like a ray of light for India”
“Karnataka is the land of traditions and technology. It has historical culture as well as modern artificial intelligence”
“Between 2009-2014 Karnataka received 4 thousand crores in railway projects in five years, whereas, only this year’s Budget has allocated 7 thousand crores for Karnataka Rail infra”
“Films depicting Kannada culture got very popular among non-Kannadiga audiences and created a desire to know more about Karnataka. This desire needs to be leveraged”

கர்நாடகா முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி அவர்களே, நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் டாக்டர் வீரேந்திர ஹெக்டே அவர்களே, மரியாதைக்குரிய  நிர்மலானந்த சுவாமி அவர்களே, மரியாதைக்குரிய ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ நஞ்சவடுத சுவாமி அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ சிவமூர்த்தி சிவாச்சாரிய சுவாமி அவர்களே, மத்திய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சி டி  ரவி அவர்களே, தில்லி கர்நாடக சங்க உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!

முதலில் உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன், இந்த விழா கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுகிறது. தில்லி-கர்நாடக சங்கம் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடும் நேரத்தில், தில்லி கர்நாடக சங்கத்தின் 75-வது ஆண்டு விழா நடைபெறுகிறது.

நண்பர்களே!

கர்நாடகத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் அடையாளம், பாரம்பரியங்கள் மற்றும் உத்வேகங்களை வரையறுக்க முடியாது.  'புராண காலத்தில்' அனுமனின் பாத்திரத்திற்கு ஒப்பானது அது. இந்தியாவுக்கு கர்நாடகம் அதே போன்ற பங்கை ஆற்றியுள்ளது. மேலும் சகாப்தத்தை மாற்றும் பணி அயோத்தியில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடிவடைந்தாலும், அது கர்நாடகாவில் இருந்துதான் அதன் வலிமையைப் பெற்றது.

சகோதர சகோதரிகளே,

படையெடுப்பாளர்கள் நாட்டை நாசம் செய்து, சோமநாத் போன்ற சிவலிங்கங்களை இடைக்காலத்தில் அழித்தனர். தேவர தாசிமையா, மதரா சென்னையா, தோஹரா காக்கையா,  பகவான் பசவேஸ்வரா போன்ற துறவிகள்தான் மக்களை நம்பிக்கையுடன் இணைத்தார்கள். அதே போல், ராணி அப்பாக்கா, ஒனகே ஓபவ்வா, ராணி சென்னம்மா, கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா போன்ற வீராங்கனைகள்  அந்நிய சக்திகளை எதிர்கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, கர்நாடகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்தியாவைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.

நண்பர்களே,

“ஒரே பாரதம், உன்னத பாரதம்”  என்ற முழக்கத்தின் எடுத்துக்காட்டாக கர்நாடக மக்கள் எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். கவிஞர் குவேம்பு, ‘நாட கீதே’ என்ற பாடலில் தேசிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். “இந்தப் பாடலில், இந்தியாவின் நாகரீகம் சித்தரிக்கப்பட்டு, கர்நாடகாவின் முக்கியத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் உணர்வைப் புரிந்து கொள்ளும்போது, ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மையக்கருவும் நமக்குக் கிடைக்கும்.

நண்பர்களே,

ஜி-20 போன்ற உலகளாவிய அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் போது, ஜனநாயகத்தின்  லட்சியங்களால் இந்தியா வழிநடத்தப்படுகிறது. பல மொழிகளில் உள்ள சபதங்களின் தொகுப்புடன் பஸ்வேஷ்வரா பகவான் சிலையை லண்டனில் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது  போதனைகள் அடங்கிய நூல்களை பல மொழிகளில் வெளியிடும் வாய்ப்பையும் நான் பெற்றேன்.

நண்பர்களே,

கர்நாடகம், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் பூமி. இது வரலாற்று கலாச்சாரத்தையும் நவீன செயற்கை நுண்ணறிவையும் கொண்டுள்ளது. பாரம்பரியமும் தொழில்நுட்பமும் புதிய இந்தியாவின் குணாதிசயங்களாகும். வளர்ச்சி, பாரம்பரியம், முன்னேற்றம் ஆகியவற்றுடன்  ஒன்றாக நாடு முன்னேறி வருகிறது. ஒருபுறம், இந்தியா தனது பழங்கால கோவில்கள் மற்றும் கலாச்சார மையங்களை புத்துயிர் பெறச்செய்கிறது. மறுபுறம், டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலகில் முன்னணியில் உள்ளது. இன்றைய இந்தியா தனது திருடப்பட்ட சிலைகள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கலைப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து திரும்பக் கொண்டுவருகிறது. இது புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையாகும். இது ஒரு வளர்ந்த தேசத்தின் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.

நண்பர்களே,

இன்று கர்நாடகாவின் வளர்ச்சி நாட்டிற்கும், கர்நாடக அரசுக்கும் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. 2009-2014 க்கு இடையில் 11 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்கியது. ஆனால், 2019-2023 முதல் தற்போது வரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2009-2014 க்கு இடையில் கர்நாடகா ரயில்வே திட்டங்களில் ரூ.4,000 கோடிக்கும் குறைவாகவே கர்நாடகா நிதியைப் பெற்றுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கர்நாடக ரயில் உள்கட்டமைப்பிற்கு நமது அரசு ரூ.7,000 கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.6,000 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால்  கடந்த 9 ஆண்டுகளில், கர்நாடகா தனது நெடுஞ்சாலைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.5,000 கோடி முதலீடு பெற்றுள்ளது.

நண்பர்களே,

பத்ரா திட்டத்திற்கான நீண்டகால கோரிக்கையை தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த வளர்ச்சி அனைத்தும் கர்நாடகாவின் முகத்தை வேகமாக மாற்றி வருகிறது.

நண்பர்களே,

தில்லி கர்நாடக சங்கத்தின் 75 ஆண்டுகள் வளர்ச்சி, சாதனை மற்றும் அறிவின் பல முக்கிய தருணங்களை முன்வைத்துள்ளன. அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு மிக முக்கியமானது. கன்னட மொழி அழகு மற்றும்  செழுமையான இலக்கியத்தைக் கொண்டது. அறிவு மற்றும் கலையின் மீது மையக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நண்பர்களே,

கலைத் துறையில் கர்நாடகா அசாதாரண சாதனைகளைப் படைத்துள்ளது. கம்சாலே முதல் கர்நாடக இசை பாணி வரையிலும், பரதநாட்டியம் முதல் யக்ஷ்கானம் வரையிலும் கர்நாடகம் பாரம்பரிய மற்றும் பிரபலமான கலைகள் இரண்டிலும் நிறைந்துள்ளது. இந்தக் கலை வடிவங்களை பிரபலப்படுத்த கர்நாடக சங்கத்தின் முன் முயற்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். இந்த முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம்.

நண்பர்களே,

இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தானியங்களின் முக்கிய மையமாக கர்நாடகா விளங்குகிறது. ஸ்ரீ அன்ன ராகி கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளத்தின் ஒரு பகுதியாகும். ஒட்டுமொத்த நாடும் கன்னடர்களின் வழியைப் பின்பற்றி வருகிறது. சிறுதானியங்களை ‘ஸ்ரீ அன்னா’ என்று தற்போது  அழைக்கத் தொடங்கியிருக்கிறோம். ஸ்ரீ அன்னாவின் பலன்கள் முழு உலகமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதன் தேவை அதிகரிக்கப்போகிறது, இதனால் கர்நாடக விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

நண்பர்களே,

கலைத் துறையில் கர்நாடகா அசாதாரண சாதனைகளைப் படைத்துள்ளது. கம்சாலே முதல் கர்நாடக இசை பாணி வரையிலும், பரதநாட்டியம் முதல் யக்ஷ்கானம் வரையிலும் கர்நாடகம் பாரம்பரிய மற்றும் பிரபலமான கலைகள் இரண்டிலும் நிறைந்துள்ளது. இந்தக் கலை வடிவங்களை பிரபலப்படுத்த கர்நாடக சங்கத்தின் முன் முயற்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். இந்த முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம்.

நண்பர்களே,

இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தானியங்களின் முக்கிய மையமாக கர்நாடகா விளங்குகிறது. ஸ்ரீ அன்ன ராகி கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளத்தின் ஒரு பகுதியாகும். ஒட்டுமொத்த நாடும் கன்னடர்களின் வழியைப் பின்பற்றி வருகிறது. சிறுதானியங்களை ‘ஸ்ரீ அன்னா’ என்று தற்போது  அழைக்கத் தொடங்கியிருக்கிறோம். ஸ்ரீ அன்னாவின் பலன்கள் முழு உலகமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதன் தேவை அதிகரிக்கப்போகிறது, இதனால் கர்நாடக விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

நண்பர்களே,

2047-ல் இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்து, வளர்ந்த நாடாக இந்தியா திகழும் போது புகழ்பெற்ற அமிர்த காலத்தில் தில்லி கர்நாடக சங்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொளகிறேன். துறவிகளின் ஆசீர்வாதங்களைப் பெறும் நல்வாய்ப்பைப் பெற்றதில் நான் பெருமிதம் அடைகிறேன். எனது ஆழ்மனதிலிருந்து மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024

Media Coverage

Mutual fund industry on a high, asset surges Rs 17 trillion in 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets Prime Minister
December 25, 2024

Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister's Office posted on X:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi

@AndhraPradeshCM"