Quoteஉத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ன் நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமான மதிப்பிலான 14000 திட்டங்களை தொடங்கி வைத்தார்
Quote"உத்தரப்பிரதேசத்தின் இரட்டை என்ஜின் அரசு மாநில மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இரவும் பகலும் உழைத்து வருகிறது"
Quote"கடந்த 7 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசத்தில் வணிகம், வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது"
Quote"மாற்றத்திற்கான உண்மையான நோக்கம் இருந்தால், அதை யாராலும் தடுக்க முடியாது என்பதை இரட்டை என்ஜின் அரசு நிரூபித்துள்ளது"
Quote"உலக அளவில், இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத நன்மதிப்பு உள்ளது"
Quote" உத்தரப்பிரதேசத்தில் வாழ்க்கையை எளிதாக்குதல், மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு நாங்கள் சமமான முக்கியத்துவம் அளித்துள்ளோம்"
Quote"அரசு திட்டங்களின் பலன்கள் அனைவரையும் சென்றடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்"
Quote"அதிக எண்ணிக்கையிலான அதிவேக விரைவுச்சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உத்
Quoteஉற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி போன்ற துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

வணக்கம்,

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, துடிப்பான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகா, நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே,  பாரதம் மற்றும் வெளிநாடுகளின் தொழில்துறை பிரதிநிதிகளே, என் குடும்ப உறுப்பினர்களே

வளர்ந்த இந்தியாவுக்காக வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தை உருவாக்கும் உறுதியுடன் நாம் இங்கு ஒன்றுபட்டு நிற்கிறோம். உத்தரப்பிரதேசத்தின் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தொழில்நுட்பத்தின் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் இந்த நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்துள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காணொலிக் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் நிலை மோசமாக இருந்தது. குற்றங்கள், கலவரங்கள், திருட்டுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், இன்று உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது மாநிலத்தின் முன்னேற்றங்களைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிவைக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தின் சூழலை மிகச் சிறப்பாக மாற்றும். அனைத்து முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

|

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முன்பு இந்த மாநிலத்தை பாதித்த அதிகாரத்துவ தடைகள் அகற்றப்பட்டு, வணிகம் செய்வதில் எளிதான கலாச்சாரம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.  குற்ற விகிதங்கள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் வணிக வாய்ப்புகள் செழித்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது.  மின்சார உற்பத்தியாக இருந்தாலும் சரி, மின்சார பகிர்மானமாக இருந்தாலும் சரி, இன்று உத்தரப் பிரதேசம் பாராட்டத்தக்க பணிகளை செய்து வருகிறது. அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் உத்தரப்பிரதேசத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இன்றைய நிகழ்ச்சி வெறும் முதலீடு பற்றியது மட்டுமல்ல. இது ஒரு பரந்த நம்பிக்கை மற்றும் சிறந்த வருமானத்திற்கான எதிர்பார்ப்பைக் குறிக்கிறது. உலகெங்கிலும், பாரதத்தின் வளர்ச்சிப் பாதை குறித்து முன்னெப்போதும் இல்லாத நேர்மறை எண்ணங்கள் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாடுகளுக்குச் சென்று திரும்பினேன். ஒவ்வொரு நாடும் பாரதத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது. 

 

|

சகோதர சகோதரிகளே,

வளர்ச்சியடைந்த பாரதம் என்று நான் பேசும் போது, புதிய கண்ணோட்டங்களும், புதிய பாதைகளும் தேவைப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக மக்களுக்கு அடிப்படை வசதிகளே கிடைக்காமல் இருந்தது.  முந்தைய அரசாங்கங்கள் ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டுமே வசதிகளையும் வேலை வாய்ப்புகளையும் குவித்தன. நாட்டின் பெரும்பகுதியை வளர்ச்சியடையாத நிலையில் விட்டுவிட்டன. உத்தரப்பிரதேசம் கடந்த காலங்களில் இதேபோன்ற புறக்கணிப்பை சந்தித்தது. ஆனால், இந்த நிலையை இரட்டை இன்ஜின் அரசு தகர்த்தெறிந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், வர்த்தக செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் நாங்கள் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இரட்டை இன்ஜின் அரசின் நோக்கம், தகுதியான எந்தவொரு பயனாளியும் அரசுத் திட்டங்களின் பயன்களில் இருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். மோடியின் உத்தரவாத வாகனம் ஒவ்வொரு கிராமத்தையும், நகரத்தையும் சென்றடைந்து, மக்களுக்கு திட்டப் பயன்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

 

 

|

நண்பர்களே,

முன்பு புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு மோடி ஆதரவை வழங்குகிறார். ஸ்வநிதி திட்டத்தின் சாலையோர வியாபாரிகளுக்கு எங்களது அரசு உதவுகிறது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22 லட்சம் ஆகும்.  

நண்பர்களே,

நமது இரட்டை இன்ஜின் அரசின் முடிவுகளும், முன்முயற்சிகளும் சமூக நீதிக்கும், பொருளாதார வளத்துக்கும் பங்களிக்கின்றன. லட்சாதிபதி சகோதரிகள் முன்முயற்சியின் மூலம் நாடு முழுவதும் ஒரு கோடி பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மூன்று கோடி பெண்களை இந்த அந்தஸ்துக்கு உயர்த்த அரசாங்கம் இப்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தைப் பற்றி நாம் பேசும்போது, அதன் பின்னால் உள்ள மற்றொரு உந்து சக்தியை நாம் கவனிக்க வேண்டும். அது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வலிமை ஆகும். இரட்டை இன்ஜின் அரசு அமைந்ததிலிருந்து, உத்தரப் பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.

 

|

நண்பர்களே,

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டமும் குடிசைத் தொழில்களின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. பூட்டு தயாரித்தல் முதல் பித்தளை வேலை வரை, கம்பள நெசவு முதல் வளையல் உற்பத்தி வரை, களிமண் கலை முதல் பூ தையல் வரை, இந்த பாரம்பரியங்கள் வளமாக உள்ளன. பாரம்பரிய கைவினைப்பொருட்களை நவீனமயமாக்குவதற்கும், அத்தகைய கைவினைப்பொருட்களில் ஈடுபட்டுள்ள விஸ்வகர்மா குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.  இது அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவும்.

சகோதர சகோதரிகளே,

எங்கள் முயற்சிகள் பொம்மை உற்பத்தித் துறையிலும் விரிவடைந்துள்ளன. காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அங்கு தயாரிக்கப்படும் மர பொம்மைகளை நான் தீவிரமாக ஊக்குவித்து வருகிறேன்.

 

|

நண்பர்களே,

பொம்மை தயாரிப்பில் இந்தியாவுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருந்தபோதிலும், பாரதம் பொம்மை இறக்குமதியை பெரிதும் நம்பியிருந்தது. நமது கைவினைஞர்கள் பல தலைமுறைகளாக திறமை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவும் நவீனமயமாக்கல் நடைமுறைகளும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, இந்திய சந்தைகள் மற்றும் வீடுகளில் வெளிநாட்டு பொம்மைகள் ஆதிக்கம் செலுத்தின. இதை மாற்ற தீர்மானித்து, நாங்கள் நாடு முழுவதும் பொம்மை தயாரிப்பாளர்களை ஆதரித்துள்ளோம். இதன் விளைவாக இறக்குமதி குறைந்து தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் முதன்மையான சுற்றுலாத் தலமாக மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளது. இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வாரணாசி மற்றும் அயோத்திக்கு வர விரும்புகிறார்கள்.  வாரணாசியும் அயோத்தியும் தினமும் எண்ணற்ற மக்களை ஈர்க்கின்றன. இது உத்தரப் பிரதேசத்தில் வணிகங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகிறது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பயணிகளும் தங்கள் பயண நிதியில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2025-ம் ஆண்டில் நடைபெறும் கும்பமேளாவும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். எதிர்காலத்தில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உத்தரப் பிரதேசத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 

|

நண்பர்களே,

நமது வலிமையைப் பயன்படுத்தி, அவற்றை நவீனமயமாக்கி, வளர்ந்து வரும் துறைகளில் சிறந்து விளங்குவதே நமது குறிக்கோள். இந்தியா தற்போது மின்சார வாகனப் போக்குவரத்து மற்றும் பசுமை எரிசக்திக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகிறோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, பிரதமரின் சூரிய சக்தி வீடு இலவச மின்சார திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும். மேலும் தனிநபர்கள் அதிகப்படியாக உள்ள மின்சாரத்தை அரசிற்கு விற்கலாம்.

நண்பர்களே,

சூரிய மின்சக்தி மட்டுமின்றி,  மின்சார வாகனங்கள் தொடர்பான இயக்க முறையிலும் நாங்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். மின்சார வாகன உற்பத்தியாளர்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 34.5 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் சூரிய மின்சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டிலும் கணிசமான வாய்ப்புகள் உள்ளன.

 

|

நண்பர்களே,

விவசாயிகளின் நலனுக்காகப் பாடுபட்ட செளத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் வாய்ப்பை எங்கள் அரசு பெற்றுள்ளது. உத்தரபிரதேச மண்ணின் மைந்தரான செளத்ரி சரண் சிங்கை கௌரவிப்பது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துவதாகும். செளத்ரி சரண் சிங் தமது கொள்கைகளில் உறுதியாக இருந்தார். சிறு விவசாயிகளின் நலனுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாடு என்றென்றும் நினைவில் கொள்ளும். அவரிடமிருந்து உத்வேகம் பெற்று, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நண்பர்களே,

நாட்டின் விவசாயத்தை ஒரு புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல நாங்கள் நினைக்கிறோம்.  விவசாயிகளுக்கு நாங்கள் பல உதவிகளைச் செய்து ஊக்குவித்து வருகிறோம். இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானியங்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.

 

 

|

உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் சிறு விவசாயிகளை ஒரு வலிமையான சந்தை சக்தியாக மாற்றுவதற்கு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதும், அவர்களின் பொருட்களை வாங்குவதை உறுதி செய்வதும் விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் பயனளிக்கும். அது மட்டுமல்லாமல், வணிகங்களையும் மேம்படுத்தும். இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் உத்தரப்பிரதேசம் வரலாற்று ரீதியாக முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை முழு அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரப்பிரதேச மக்களின் திறன் மீதும், இரட்டை இன்ஜின் அரசின் முயற்சிகள் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இன்றைய முயற்சிகள் உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை மேலும் வலுவாக்கும். யோகி ஆதித்யநாத்  மற்றும் உத்தரபிரதேச அரசுக்கு சிறப்பு வாழ்த்துகள். உத்தரப்பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய விரும்புகிறது என்பதைக் கேட்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உத்தரப்பிரதேசத்தைப் பின்பற்றி, உங்கள் மாநிலங்களில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் லட்சிய கனவுகள் மற்றும் தீர்மானங்களுடன் செயல்படுவோம். தொழில்துறை நண்பர்களே, எல்லையற்ற வாய்ப்புகளுடன் நேரம் கனிந்துள்ளது. வாருங்கள், ஒன்றாக இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.

நண்பர்களே

உத்தரப்பிரதேசம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் இன்று 400 இடங்களில் கூடியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம் தனது தீர்மானங்களை விரைவாக நிறைவேற்றுகிறது. நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி!

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
July 09, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

 கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

நாடுகளால் வழங்கப்பட்ட விருதுகள்:

1. 2016, ஏப்ரலில் சௌதி அரேபியாவுக்கான அவரது பயணத்தின் போது, சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது - மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  கௌரவமிக்க இந்த விருது மன்னர்  சல்மான்வின் அப்துலாசிஸ் அவர்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

|

2. அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய சிவில் விருதான ஸ்டேட் ஆர்டர் ஆஃப் காஸி அமீர் அமானுல்லா கான் விருது பிரதமர்  மோடிக்கு வழங்கப்பட்டது.

|

3. 2018- ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டபோது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

|

4. 2019-ல், ஆர்டர் ஆஃப் சையது விருது  பிரதமருக்கு வழங்கப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் விருதாகும்.

|

5. 2019-ல் ரஷ்யாவின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

6. வெளிநாட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் மிக உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குயிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இஸ்ஸூதின் விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

7. 2019-ல் கௌரவமிக்க மன்னர் ஹமாத் ஆர்டர் ஆஃப் தி ரினைசான்ஸ் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இந்த விருதினை பஹ்ரைன் வழங்கியது.

|

8. ஒப்பற்ற சேவைகள் மற்றும் சாதனைகள் செய்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் விருதான லெஜியன் ஆஃப் மெரிட் அமெரிக்க அரசால் 2020-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

9. பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மிக உயரிய சிவில் விருதுகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள கௌரவமிக்க அமைப்புகளால் பல விருதுகளும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. சியோல் அமைதிப் பரிசு: மனித குலத்தின் நல்லிணக்கம், நாடுகளுக்கிடையே சமரசம் செய்தல், உலக சமாதானம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்ததன் மூலம் சிறப்பு பெறும் தனி நபர்களுக்கு சியோல் அமைதிப் பரிசு, கலாச்சார அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. கௌரவமிக்க இந்த விருது 2018-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

|

2. புவிக்கோளின் சாம்பியனுக்கான ஐநா விருது: இது ஐநா சபையின் மிக உயரிய சுற்றுச்சூழலுக்கான விருதாகும் உலகளாவிய அரங்கில் பிரதமர் மோடியின் துணிச்சலான சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை அங்கீகரித்து . 2018-ல் ஐநா இதனை வழங்கியது.

|

3. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.

|

4. உலகளாவிய கோல்கீப்பர் விருது”: தூய்மை இந்தியா திட்டத்திற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால்  இந்த விருது 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தை “மக்கள் இயக்கமாக” மாற்றிய மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்த இந்தியர்களுக்கு இந்த விருதினைப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

|

5. பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது: முதல் முறையாக இந்த விருது பிரதமர் மோடிக்கு 2019-ல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. “தேசத்தின் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக”  பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருதுக்கான பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.