Quoteநம் நாடு இந்திய அறிவியல் துறையினருக்கு தகுதியான இடமாக அமையும்
Quote21-ம் நூற்றாண்டின் மிகுதியான தகவல் மற்றும் தொழில்நுட்பம் இந்திய அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும்
Quoteஅறிவியல் மூலம் பெண்களுக்கு மேன்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பின் மூலம் அறிவியலை மேம்படுத்துவதே நமது நோக்கமாகும்
Quoteபெண்களும், அறிவியலும் நமது தேசத்தில் முன்னேறி வருவது அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்புக்குச் சான்றாகும்
Quoteஅறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகத்திலிருந்து வெளிவந்து உலக அளவிலிருந்து உள்ளூர் அளவிலும் பெயரளவிற்கு இல்லாமல் பயன்பாட்டு அளவிலும் அதன் தாக்கங்கள் ஆய்வு நடவடிக்கைகளிலிருந்து அன்றாட வாழ்க்கை முறைக்கு வருவதுமே அறிவியலின் சிறந்த சாதனையாகும்
Quoteஎதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் புதிய அம்சங்கள் குறித்த முன்முயற்சிகளை நம் நாடு மேற்கொள்ளும் போது தான் தொழில்துறை 4.0-க்கு வழி நடத்தும்

வணக்கம்!

 

இந்திய அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்.  அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு நம் நாட்டின் அறிவியல் திறனின் முக்கியத்துவம் அவசியமாகும். நாட்டிற்காக சேவையாற்றும் உணர்வோடு அறிவியலின் ஆற்றல் இணையும் போது, நன்மைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமையும். நம் நாட்டின் அறிவியல் துறையினருக்கு பொருத்தமான இடத்தை அடைவதை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பாடுகள் அமையும் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நண்பர்களே,

உன்னிப்பாக கவனிப்பதே அறிவியலின் அடிப்படையாகும். விஞ்ஞானிகள் கூர்மையாக உற்று நோக்குவதன் மூலமாகவே தேவைப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இதற்கு தகவல் சேகரிப்பு மற்றும் முடிவுகளை ஆய்வு செய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் உள்ளது. 

தரவுகள் பகுபாய்வுத் துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருவதன் விளைவாக, தகவல்கள் ஞானம் பெறும் வகையிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையிலும் அமைகிறது.  பாரம்பரிய அறிவாற்றல் திறனாக இருந்தாலும் நவீன தொழில்நுட்பம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியப் பங்காற்றும். ஆராய்ச்சி தொடர்பான மேம்பாடு மூலம் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளை வலுப்பெறும் விதமாக மாற்றுவது அவசியமாகும்.

அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் இந்தியாவின் ஆற்றல் என்பது உலகளாவியப் புத்தாக்க குறியீட்டின்படி, கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியா 81-வது இடத்திலிருந்து தற்போது 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்வதில் உலகளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

இந்த ஆண்டு அறிவியல் மாநாட்டின் கருப்பொருள், பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சிக் கொள்கிறேன். அறிவியல் மூலம் பெண்களுக்கு மேன்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பின் மூலம் அவற்றை மேம்படுத்துவதே நமது நோக்கமாகும்.

சமீபத்தில் ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை இது காட்டுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் ஆட்சி அமைப்பிலிருந்து சமூகம் சார்ந்த பொருளாதார மேம்பாடுகளை  முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கின்றோம்.  அத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் இன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிறு மற்றும் குறுந் தொழில் துறையாக இருந்தாலும், பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாக இருந்தாலும், பெண்களின் ஆளுமைத் திறன் சிறந்து வெளிப்படுகிறது. இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டிற்காக முத்ரா கடன் உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பெண்களும், அறிவியலும் நமது தேசத்தில் முன்னேறி வருவது, அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்புக்குச் சான்றாகும்.

அறிவாற்றல் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக செயல்படுவது, விஞ்ஞானிகளுக்கு எப்பொழுதுமே சவால் நிறைந்ததாகும். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகத்திலிருந்து வெளிவந்து, உலக அளவிலிருந்து உள்ளூர் அளவிலும், பெயரளவிற்கு இல்லாமல் பயன்பாட்டு அளவிலும், அதன் தாக்கங்கள் ஆய்வு நடவடிக்கைகளிலிருந்து அன்றாட வாழ்க்கை முறைக்கு வருவதுமே அறிவியலின் சிறந்த சாதனையாகும்.

ஆய்வக சோதனைகளுக்கும், மக்கள் அனுபவங்களுக்கும் இடையேயான தூரத்தை அறிவியலின்  சாதனைகள் முழுமை பெறச் செய்கிறது. மேலும், இளைய தலைமுறையினருக்கு  அறிவியலின் முக்கியத் தகவலை அளிக்கிறது. இளைஞர்களுக்கு உதவ அமைப்பு ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு திறன் தேடல் மற்றும் ஹேக்கத்தான் போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் உள்ள அறிவியல் அறிவாற்றலை வெளிக்கொணர்வதற்கு உதவி செய்கிறது. விளையாட்டுத்துறையில் முன்னேறுவதற்கு அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் குரு-சீடர் அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.   இந்தக் கலாச்சாரமே அறிவியல் துறையின் வெற்றிக்கும்  அடித்தளமாகும்.

இந்தியாவின் தேவைகள் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த அறிவியல் துறையினரின் ஊக்கத்திற்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. நாட்டில் அறிவியல் துறை தற்சார்பு தன்மை பெறவேண்டும். அறிவியல் ஆற்றல் மிக்க 17-18 சதவீதம் பேரைக் கொண்ட  இந்தியாவில், அவர்களின் பயனுள்ள நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும். ஒட்டு மொத்த மனித இனத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் அமையப் பெற்றிருக்கும் துறைகள் வளர்ச்சி அடையவேண்டும். தேசிய ஹைட்ரஜன் இயக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.  அதன் விளைவாக மிக நுட்பமான உபகரணங்களை இந்தியாவிலேயே  உற்பத்தி செய்வதை சாத்தியமாக்க வேண்டும். புதிய நோய்களைத் தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை அறிவியல் துறையினர் கண்டு உணர வேண்டும். மேலும், புதிய தடுப்பூசிகள் குறித்த ஆராய்ச்சியும் முக்கியமானதாகும். நோய்களைக் குறித்த காலத்தில் கண்டறிவதற்கு ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு அவசியமாகும்.  இதற்கு அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தகுந்த வாழ்க்கை முறை இயக்கம் விஞ்ஞானிகளுக்கு பேருதவி புரிந்துள்ளது.

விண்வெளித்துறையில் தற்போது இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. குறைந்த செலவில், செயற்கைக் கோள்களை உருவாக்குவதன் மூலம் நமது சேவையை பல்வேறு உலக நாடுகள் தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கைகளை தனியார் துறையினரும், ஸ்டார்ட்- அப் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.  கணினி, ரசாயனம், தகவல் தொடர்பு, சென்சார்கள், க்ரிப்டாகிராஃபி போன்ற துறைகளில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் துறைகளில் இளம் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், தேவைப்படும் அறிவாற்றல்களைப் பெற்று அந்தந்த துறைகளில், நிபுணத்துவம் பெறவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு,  நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், இணைக்கும் தொழில்நுட்பம், போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். செமிகண்டக்டர் சிப்-கள் துறையில் புத்தாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் புதிய அம்சங்கள் குறித்த முன்முயற்சிகளை நம் நாடு மேற்கொள்ளும் போது தான் தொழில்துறை 4.0-க்கு வழி நடத்தும்.

பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமாக இந்திய அறிவியல் மாநாட்டில் விவாதித்த முக்கிய விஷயங்கள் எதிர்காலத் திட்டங்களை உருவாக்கப் பயனுள்ளதாக அமையும் என நான் நம்புகிறேன்.  சுதந்திர இந்தியாவின் அமிர்தகாலப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நவீன அறிவியல் துறையில் இந்தியா மேன்மை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Apple India produces $22 billion of iPhones in a shift from China

Media Coverage

Apple India produces $22 billion of iPhones in a shift from China
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 13, 2025
April 13, 2025

Citizens Appreciate Transforming India: PM Modi’s Leadership Drives Economic and Spiritual Growth"