வணக்கம்!
ஜெய் சுவாமிநாராயண்! எனது கட்ச் சகோதர சகோதரிகளே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாம் நன்றாக இருக்கிறதா? இன்று கே.கே. படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நமது சேவைக்காக தொடங்கப்படுகிறது.
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஆரோக்கியம் தொடர்பான மாபெரும் நிகழ்ச்சிக்காக கட்ச் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குஜராத்தையும் வாழ்த்துவோம்! நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவை புறந்தள்ளி, புஜ் மற்றும் கட்ச் பகுதி மக்கள் தங்கள் கடின உழைப்பால் புதிய எதிர்காலத்தை எழுதி வருகின்றனர். இன்று இந்தப் பகுதியில் பல நவீன மருத்துவ சேவைகள் உள்ளன. இதையொட்டி, பூஜ்ஜில் இன்று நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பெற்றுள்ளது. இது கட்ச் பகுதியின் முதல் அறக்கட்டளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகும். இந்த 200 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கட்ச் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் சிறந்த சிகிச்சையை அளிக்க வகை செய்யும். இது நமது வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் குடும்பங்களுக்கும் வணிக உலகில் உள்ள பலருக்கும் சிறந்த சிகிச்சைக்கான உத்தரவாதமாக அமையும்.
சிறந்த சுகாதார வசதிகள் என்பது நோய்களுக்கான சிகிச்சையுடன், சமூக நீதியையும் ஊக்குவித்து மேம்படுத்துவதாக தெரிவித்தார். ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைக்கும் போது, அந்த அமைப்பின் மீதான நம்பிக்கை வலுவடைகிறது என்று கூறினார். சிகிச்சைக்கான செலவு குறித்த கவலையில் இருந்து ஏழை மக்கள் விடுபடுவதன் மூலம், வறுமையிலிருந்து எளிதாக வெளிவர கடினமாக உழைக்க முடியும் என்றார். கடந்த ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் இத்தகைய சிந்தனைக்கு உத்வேகம் அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் மக்கள் மருந்தகங்கள் திட்டம் போன்ற திட்டங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் சேமிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அனைவருக்கும் சிகிச்சையை எளிதாக அணுகுவதற்கு உதவுகின்றன என்று தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் நோயாளிகளுக்கான வசதிகளை மேலும் அதிகரிக்கும். ஆயுஷ்மான் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மூலம் நவீன மற்றும் முக்கிய சுகாதார உள்கட்டமைப்புகள் மாவட்டம் மற்றும் தொகுதிகள் வரை விரிவுபடுத்தப்படுகிறது. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் தவிர, பல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் கட்டப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் மருத்துவக் கல்வியை எளிதில் அணுகும் வகையில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதை இலக்காக கொண்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
குஜராத் மாநில வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நாட்டின் அணைத்து பகுதிகளுக்கமான வளர்ச்சி என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான டயாலிசிஸ் சிகிச்சை வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இன்று பல்வேறு மாவட்டங்களில் இலவச டயாலிசிஸ் சேவையை தொடங்கியுள்ளோம் என்றார்.
தூய்மையை பேணுவதில் மக்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்; வீட்டிற்கு வெளியே அல்லது உள்ளே எங்கும் அசுத்தத்திற்கான தடயங்கள் இருக்கக்கூடாது. அழுக்கு மீது வெறுப்பு இருக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் உருவாகும் பட்சத்தில், கண்டிப்பாக நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றார். இதேபோல், குடிநீரை தூய்மைப்படுத்துதல், கழிப்பறைகள் கட்டுதல், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குதல் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என்றும் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். ஜல் ஜீவன் இயக்கம் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
தற்போது, கட்ச்சில் பசுமை உள்ளது. கட்ச் பகுதியில் சீரகம் விளைகிறது. கட்ச் மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.