“30th and 31st October are a source of great inspiration for everyone as the former is the death anniversary of Govind Guru ji and the latter is the birth anniversary of Sardar Patel ji”
“India’s development story has become a matter of discussion around the world”
“Whatever resolution Modi takes, he fulfills it”
“Scope of irrigation in North Gujarat has increased manifold in 20-22 years owing to irrigation projects”
“Water conservation scheme started in Gujarat has now taken the form of Jal Jeevan Mission for the country”
“More than 800 new village dairy cooperative societies have also been formed in North Gujarat”
“Unprecedented work of linking our heritage with development is being done in the country today”

பாரத் மாதா கி - ஜே,

பாரத் மாதா கி - ஜே,

என்ன ஆச்சு? உங்கள் குரல் அம்பாஜியையும் சென்றடையும் வகையில் கொஞ்சம் பலமாக  முழக்கமிடுங்கள் .

பாரத் மாதா கி - ஜே,

பாரத் மாதா கி - ஜே,

மேடையில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய், மற்றும் இதர அமைச்சர்கள், நாடாளுமன்றத்தின் எனது சகாக்கள், குஜராத் பாஜகவின் தலைவர் சி.ஆர்.பாட்டீல்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, வட்டப்  பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர்;  குஜராத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் எனது அன்பைப் பெற்றவர்கள் உள்ளனர்.

ககாரியா தப்பாவின் நடனம் எப்படி இருந்தது? முதலில், உங்களுடன் இருக்கவும், எனது பள்ளி நாட்களில் என்னோடு படித்த பரிச்சயமான முகங்களைப் பார்க்கும் தருணத்தைப் பெறவும் எனக்கு வாய்ப்பளித்த குஜராத் முதல்வருக்கும், அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் வீடுகளுக்குள் நான் அடியெடுத்து வைக்கும் போது உங்கள் அனைவரையும் சந்திப்பதும், பழைய நினைவுகளை நினைவுகூர்வதும் அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

 

இந்த நிலத்திற்கும்  என்னை உருவாக்கிய மக்களுக்கு நான் பட்ட கடனை ஏற்று, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் இதயம் அவர்களை அரவணைக்கிறது. எனவே, இந்த கடனை நான் ஒப்புக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இது.  அதாவது அக்டோபர் 30, மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் ஆதிவாசிகளை வழிநடத்தி ஆங்கிலேயர்களைத் தோற்கடித்த கோவிந்த் குருஜியின் நினைவு தினம் இன்றும், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நாளையும்  கொண்டாடப்படுகிறது.

எங்கள் தலைமுறையினர் சர்தார் சாஹேப் மீது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் வரும் தலைமுறையினரின் தலைகள் குனியாது, ஒற்றுமை சிலையைப் பார்க்கும்போது அவர்களின் தலை நிமிர்ந்து நிற்கும். சர்தார் சாஹேபின் காலடியில் நிற்கும் ஒவ்வொருவரும் தலை குனிய மாட்டார்கள்.  அவர்கள் தலை நிமிர்ந்து நிற்பார்கள்.

குரு கோவிந்த்ஜி தனது முழு வாழ்க்கையையும் சுதந்திரப் போராட்டத்திலும் ஆதிவாசி சமூகத்தின் சேவையிலும் பாரத அன்னையின் சேவையிலும் அர்ப்பணித்தார். சேவை மற்றும் தேசபக்திக்கான அவரது அர்ப்பணிப்பு மிகவும் தீவிரமானது, அவர் தியாகங்களின் பாரம்பரியத்தை நிறுவினார். அவரே தியாகத்தின் அடையாளமாக மாறினார். மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தின் பழங்குடிப் பகுதியில் உள்ள குரு கோவிந்த்ஜியின் நினைவாக எனது அரசு மங்கர் தாமை நிறுவியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது நினைவை தேசிய அளவில் கொண்டாடுகிறோம்.

 

எனதருமை நண்பர்களே

நான் இங்கு வருவதற்கு முன்பு அம்பாளின் பாதங்களில் ஆசீர்வாதம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அம்பாளின் பிரகாசத்தையும், அவள் இடத்தின் மகிமையையும் கண்டு மகிழ்ந்தேன். கடந்த ஒரு வாரமாக நீங்கள் தூய்மைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர்கள் என்று கேள்விப்பட்டேன். அம்பாஜியில் தூய்மைப் பணிக்காக உங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்னை அம்பாளின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும். கப்பார் மலையில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வரும் விதம், அது காட்டும் பிரம்மாண்டம் ஆகியவற்றையும் நேற்று எனது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டேன். உண்மையிலேயே அசாதாரணமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

அன்னை அம்பாளின் ஆசீர்வாதமும், கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த திட்டம் விவசாயிகளின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வடக்கு குஜராத்தை நாட்டுடன் இணைப்பதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த இணைப்பாகும்.

பதான், பனஸ்கந்தா, சபர்கந்தா, மஹிசாகர், கேடா, அகமதாபாத், காந்திநகர் என மெஹ்சானாவைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களின் பொக்கிஷமாகும். விரைவான பணிகள் இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு நேரடியாக பயனளிக்கும், இது பலருக்கு மகிழ்ச்சியைத் தரும். வளர்ச்சிப் பணிகளுக்காக குஜராத் மக்களை நான் பாராட்ட விரும்புகிறேன்.

 

நான் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றவும், மேலும் சாதிக்கவும், இந்த அபிலாஷைக்கு முழு மனதுடன் பங்களிக்கவும் உங்கள் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். இந்த எதிர்பார்ப்புடன், என்னுடன் முழங்குங்கள்

 

நான் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றவும், மேலும் சாதிக்கவும், இந்த அபிலாஷைக்கு முழு மனதுடன் பங்களிக்கவும் உங்கள் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். இந்த எதிர்பார்ப்புடன், என்னுடன் முழங்குங்கள்

பாரத் மாதா கி - ஜே,

 

பாரத் மாதா கி - ஜே,

பாரத் மாதா கி - ஜே,

மிகவும் நன்றி!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi