ஜப்பானில் ‘ஜென்’ என்பது, இந்தியாவில் ‘தியானம்’: பிரதமர்
வெளிப்புற வளர்ச்சியுடன் உள்ளார்ந்த அமைதி என்பது இரு கலாச்சாரங்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்: பிரதமர்
மத்திய அரசின் ஏராளமான துறைகள், நிறுவனங்கள் மற்றும் திட்டங்களில் கைசன் பயன்படுத்தப்பட்டு வருகிறது: பிரதமர்
குஜராத்தில் மினி-ஜப்பானை உருவாக்கும் தமது தொலைநோக்குப் பார்வை பற்றி பிரதமர் விளக்கினார்
வாகனங்கள், வங்கிகள் முதல் கட்டுமானம், மருந்தகங்கள் வரை சுமார் 135 நிறுவனங்கள் குஜராத்தை தமது தலைமையிடமாகக் கொண்டுள்ளன: பிரதமர்
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சார உறவுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான தொலைநோக்குப் பார்வையில் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்: பிரதமர்
பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிளஸ் என்ற சிறப்பு ஏற்பாட்டை நாம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர்
பெருந்தொற்றின் போது சர்வதேச நிலைத்தன்மை மற்றும் செழுமைக்காக இந்திய- ஜப்பான் நாடுகளின் நட்புணர்வு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது: பிரதமர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஜப்பானிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரி

வணக்கம்!

நலமா?  ஜென் தோட்டம், கைசான் அகாடமி தொடக்கம், இந்திய-ஜப்பான் உறவுகளில் தன்னிச்சை மற்றும் நவீனத்துவத்தின் அடையாளமாகும். ஜென் தோட்டம், கைசான் அகாடமியை மீண்டும் உருவாக்குவது, இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களை மிக நெருக்கமாகக் கொண்டு வரும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். குறிப்பாக, ஹையாகோ பிரிபெக்சர் தலைவர்களுக்கும், எனது நண்பரும், ஆளுநருமான திரு. தோஷிசோ இடோ-வுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 2017-ல் இடோ அகமதாபாத் வந்திருந்தார். அகமதாபாத்தில் ஜென் தோட்டம், கைசான் அகாடமியை நிறுவுவதில் இடோவும், ஹையாகோ இண்டர்நேசனல் அசோசியேசனும் முக்கிய காரணமாக இருந்தனர். குஜராத்தின் இந்திய-ஜப்பான் நட்புறவு சங்கத்தின் சகாக்களையும் நான் வாழ்த்துகிறேன். இரு நாட்டு உறவுகளில் புதிய ஆற்றலை வழங்குவதில், அவர்கள் தொடர்ந்து சிறப்பாக பாடுபட்டு வருகின்றனர். ஜப்பான் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் இதற்கு ஓர் உதாரணமாகும்.

நண்பர்களே, இந்தியாவும், ஜப்பானும் வெளி முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், உள் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஜப்பானிய ஜென் தோட்டம், அமைதி மற்றும் எளிமை தேடலின் அழகிய உணர்வாகும். இந்திய மக்கள் பல நூற்றாண்டுகளாக, யோகா, ஆன்மீகம் ஆகியவற்றின் மூலம் அமைதியையும், எளிமையையும் கண்டு வருகின்றனர். ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு இந்தியாவில் தியானம் என்று பொருளாகும். புத்தர் இந்தத் தியானத்தையும், புத்த மதத்தையும் உலகுக்கு தந்தார். கைசான் என்ற கருத்தியலுக்கு தற்போதைய நோக்கம் மற்றும் தொடர்ந்து முன்னேறும் உறுதி ஆகியவற்றின் வலிமை என்பது நிரூபணமாகிறது.

கைசான் என்ற சொல்லுக்கு முன்னேற்றம் என்பது உள் அர்த்தம் என்பதை உங்களில் பலர் அறிவீர்கள். ஆனால், அதன் உட்பொருள் இன்னும் விரிவானது. அது முன்னேற்றத்தை மட்டுமல்லாமல், தொடர் முன்னேற்றத்தை வலியுறுத்துகிறது.

நண்பர்களே, நான் முதலமைச்சரான பின்னர் குஜராத்தில் கைசான் தொடர்பாக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நிர்வாகப் பயிற்சியில் அது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், 2005ஆம் ஆண்டில் சிறந்த ஆட்சிப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது. தொடர்    வளர்ச்சி, செயல் முறைகளின் சீரமைப்பில் பிரதிபலிக்கப்பட்டதுடன், ஆளுகையில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆளுகையின் முக்கியத்துவத்தை தேசிய மேம்பாட்டில் தொடரும் வகையில், குஜராத்தின் கைசான் தொடர்பான அனுபவத்தை பிரதமர் அலுவலகம் மற்றும் இதர மத்திய அரசு துறைகளில் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் செயல் முறைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதுடன், அலுவலக இடம் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏராளமான துறைகள், நிறுவனங்கள் மற்றும் திட்டங்களில் கைசன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நண்பர்களே, ஜப்பானிய மக்களின் பணி கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை போற்றுதலுக்குரியதாகும். குஜராத்தில் மினி-ஜப்பானை உருவாக்க நான் விரும்பினேன். இந்த உறுதிப்பாடு ஜப்பானிய மக்களைக் காண்பதற்கான உணர்ச்சியார்வத்தை உள்ளடக்கியது. பல ஆண்டுகளாக ‘துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டில்' ஜப்பான் ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளது. வாகனங்கள், வங்கிகள் முதல் கட்டுமானம், மருந்தகங்கள் வரை சுமார் 135 நிறுவனங்கள் குஜராத்தை தமது தலைமையிடமாகக் கொண்டிருக்கின்றன. சுசுகி மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார் சைக்கிள், மிட்சுபிஷி, டொயோட்டா, ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் குஜராத்தில் உற்பத்திப் பணிகளில் ஈடுபடுகின்றன. உள்ளூர் இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் இந்த நிறுவனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. குஜராத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் பணியில் 3 ஜப்பான்-இந்திய உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவின் அகமதாபாத் வர்த்தக உதவி மையம், ஒரே சமயத்தில் 5 நிறுவனங்கள் கணினி சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அளித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஜப்பானிய நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன. சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தும் வகையில் குஜராத்தில் கோல்ஃப் வசதிகளை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன். சாதாரண முறையிலான விவாதத்தின்போது ஜப்பானிய மக்கள் கோல்ஃப் போட்டிகளை விரும்புவது எனக்குத் தெரியவந்தது. அந்தச் சமயத்தில் குஜராத்தில் கோல்ஃப் வகுப்புகள் மிகவும் பிரபலமடையவில்லை. தற்போது குஜராத்தில் ஏராளமான கோல்ஃப் வகுப்புகள் செயல்படுகின்றன. அதே போல    குஜராத்தில் ஜப்பானிய உணவகங்களும், ஜப்பானிய மொழியும் பிரபலமடைந்துள்ளன.

நண்பர்களே, ஜப்பான் நாட்டின் பள்ளிக்கல்வி முறையை அடிப்படையாக கொண்ட மாதிரிப் பள்ளிகளை குஜராத்தில் உருவாக்க வேண்டும். நவீனத்துவம் மற்றும் நீதி மாண்புகளின் கலவையாக உள்ள ஜப்பான் பள்ளிக்கல்வி முறை பாராட்டுதலுக்குரியதாகும். டோக்கியோவில் உள்ள டாய்மெய் ஆரம்ப பள்ளியை நான் நேரில் சென்று பார்த்து மாணவர்களுடன் உரையாடிய அனுபவத்தை மறக்கமுடியாது.

ஜப்பானுடனான பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சார உறவுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான தொலைநோக்குப் பார்வையில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஜப்பான் நாட்டுடனான சிறப்பு கேந்திர மற்றும் சர்வதேச கூட்டணியை வலுப்படுத்துவது அவசியமாகும்.இந்தியாவில் கைசான் மற்றும் ஜப்பானிய பணி கலாச்சாரத்தின் பரவல் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடையீட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நண்பர்களே, நாடுகளின் நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரம், வருங்காலத்துக்கான பொதுவான தொலைநோக்கு ஆகியவற்றில் நமக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. இதன் அடிப்படையில், நமது பல்துறை உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். இதற்காக பிரதமர் அலுவலகத்தில் ஜப்பானுக்கு என பிரத்யேக பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்திய ஜப்பான் நாடுகளின் உறவிற்கு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் பயணம் புதிய உத்வேகத்தை அளித்தது. பெருந்தொற்றின் போது சர்வதேச நிலைத்தன்மை மற்றும் செழுமைக்காக இந்திய, ஜப்பான் நாடுகளின் நட்புணர்வு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தற்போதைய ஜப்பான் பிரதமர் திரு யோஷிஹிடே சுகா கூறியுள்ளார். இந்தப் பரஸ்பர நம்பிக்கை நமது நட்பு மற்றும் கூட்டணி ஆகியவை இந்தப் பெருந்தொற்று காலத்திலும், மேலும் வலுப்பெறுவது தற்போதைய சவால்களின் தேவையாகும்.

நமது முயற்சிகள் தொடரும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடையும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஏற்பாடு செய்ததற்காக, ஜப்பானுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi