“வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் தங்களது இலக்குகளில் கவனம் செலுத்துவதுடன் தங்கள் பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் வெற்றி கொள்வார்கள்”
“விளையாட்டு மகாகும்ப விழாவைப் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகின்றனர்”
“சன்சத் கேல் மகாகும்ப விழா பிராந்திய திறமைகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது”
“விளையாட்டுக்கள் சமுதாயத்தில் உரிய பெருமையை பெற்று வருகின்றன”
“ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் கீழ் சுமார் 500 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்”
“உள்ளூர் மட்டத்தில் தேசிய அளவிலான வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”
“யோகாவால் உங்களது உடல் வலுவாக இருக்கும், உங்கள் மனதும் விழிப்புடன் இருக்கும்”

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது சக நாடாளுமன்ற உறுப்பினரும்,  இளம் நண்பருமான ஹரிஷ் திவேதி அவர்களே, நான் எங்கும் காண்கின்ற

பல்வேறு விளையாட்டு வீரர்களே, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மூத்த பிரமுகர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்களே எனதருமை சகோதர சகோதரிகளே!

மகரிஷி வசிஷ்டரின் புண்ணிய  பூமியான பஸ்தி , உழைப்பு, தியானம், துறவறம் போன்ற அம்சங்களின் பூமியாக உள்ளது. மேலும், ஒரு விளையாட்டு வீரரைப் பொறுத்தவரை, அவரது விளையாட்டு ஒரு ‘சாதனையாகவும்’, அவர் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு தவமாகவும் உள்ளது.  ஒரு வெற்றிகரமான விளையாட்டு வீரரின் கவனம் மிகவும் துல்லியமானதாக இருப்பதுடன், அவர் புதிய நிலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிகளை பெற்று முன்னேற்றம் அடைகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் திவேதி அவர்கள் மேற்கொண்ட முயற்சி காரணமாக பஸ்தி நகரில் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாரம்பரியமாக, இந்திய விளையாட்டுகளில்  தேர்ச்சி பெற்றுள்ள உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு இந்த விளையாட்டுத் திருவிழா புதிய வாய்ப்புக்களை வழங்கும்.

சுமார் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு முழுவதும்  தத்தம் தொகுதிகளில் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாகவும் என்னிடம்  தெரிவிக்கப்பட்டது. நான் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர். எனது தொகுதியான காசியிலும் இதுபோன்ற தொடர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதுபோன்ற விளையாட்டுத் திருவிழாவை பல்வேறு பகுதிகளில் நடத்துவதன் மூலம் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை வடிவமைக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணியாற்றி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பாக செயல்படும் இளம் விளையாட்டு வீரர்கள்  இந்திய விளையாட்டு ஆணையத்தால் கூடுதல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இது நாட்டின் இளைஞர் சக்திக்குப்  பெரிதும் பயனளிக்கும். இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் .

எனது இளம் நண்பர்களே,

 

உங்கள் அனைவருக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தற்போதுதான் கோ-கோ விளையாட்டுப் போட்டியை காணும்  வாய்ப்பு கிடைத்தது. எங்கள் மகள்களின் புத்திசாலித்தனம் மற்றும் முழுமையான கூட்டு உணர்வுடன் விளையாடுவதைக் காண்பது  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது  கைதட்டல்கள் உங்களால்  கேட்க முடியுமா இல்லையா என்று தெரியவில்லை. இருந்த போதிலும், இந்த மகள்கள் அனைவரையும் சிறப்பாக விளையாடியதற்காகவும், கோ-கோ விளையாட்டை ரசிக்க தனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நான் வாழ்த்துகிறேன்.

 

நன்பர்களே!

 

ஒரு காலத்தில் விளையாட்டு என்பது பாடத்திட்டம் சாராத செயல்பாடாகவும்,  படிப்பைத் தவிர்த்து ஒரு பொழுது போக்கும் அம்சமாகவும் மட்டுமே கருதப்பட்டு வந்தது. குழந்தைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுத்து வந்தனர். இதன் விளைவாக,  சமூகத்தில், விளையாட்டுகள் வாழ்க்கைக்கு முக்கியமில்லை, அவை வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தின் ஒரு பகுதி அல்ல என்ற மனப்பான்மை தலைமுறை தலைமுறையாக  வளர்ந்து வந்தது. இந்த மனோபாவம் நாட்டுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விளையாட்டில் எத்தனையோ சிறப்பான மற்றும் திறமையான இளைஞர்கள்,  விளையாடுவதை இருந்து விலகியிருக்கின்றனர். கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளில், நாட்டில் இருந்த பழைய அணுகுமுறைகளை கைவிட்டு, விளையாட்டுக்கான சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

 

எனவே, தற்போது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும், இளைஞர்களும் விளையாட்டை ஒரு தொழிலாக பார்க்கின்றனர். உடற்தகுதி முதல் ஆரோக்கியம் வரை, குழுக்கள் என்ற  பிணைப்பில் இருந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள் வரை, தொழில்முறை விளையாட்டுப் போட்டியின் வெற்றியிலிருந்து தனிப்பட்ட முன்னேற்றம் வரை, விளையாட்டின் பல்வேறு நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் நமது சமூகத்திற்கும் விளையாட்டிற்கும் நலம் சேர்ப்பதுடன், விளையாட்டுப்  போட்டிகள் தற்போது சமூகத்தில் நன்மதிப்பை பெற்று வருகிறது.

 

 நண்பர்களே,

 

மக்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் நேரடிப் பலன் விளையாட்டுத் துறையில் நிகழ்த்தப்பட்டு வரும் பல்வேறு  சாதனைகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இன்று இந்தியா தொடர்ந்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஒலிம்பிக் போட்டியிலும், பாராலிம்பிக் போட்டியிலும் இதுவரை இல்லாத வகையில் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்தியுள்ளோம். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் செயல்திறன் தற்போது  விவாதப் பொருளாக மாறிவருகிறது.

என் இளம் நண்பர்களே, இது ஒரு தொடக்கம் மட்டுமே. புதிய இலக்குகளை அடையவும், பல்வேறு புதிய சாதனைகளை படைக்கவும், நாம் நீண்ட பயணம் செல்ல வேண்டியதுள்ளது.

நண்பர்களே!

 

விளையாட்டு ஒரு திறமை மட்டுமின்றி  இயல்பான நிலையுமாகும். திறமை மற்றும் மன உறுதியை விளையாட்டு

வளர்க்கிறது. விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதில், பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக உள்ளது, மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொடர்கள்  தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இது வீரர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியை  சோதிக்கும் வாய்ப்பை தொடர்ந்து வழங்குகிறது. பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிலைகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் வீரர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. இதன் விளைவாக, விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறன் குறித்து அறிந்து கொள்வதுடன், தாங்களாகவே சொந்த விளையாட்டு நுட்பங்களை உருவாக்க வகைசெய்கிறது. விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களும், தங்களிடம் பயிற்சி பெறும் வீரர்களின் குறைபாடுகள் குறித்தும், முன்னேற்றத்தின் அவசியம் மற்றும் எதிரணியினர் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது குறித்தும்  உணர்ந்து கொள்கிறார்கள்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுத் திருவிழா முதல் தேசிய விளையாட்டுத் திருவிழா வரை வீரர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால் தான் இன்று நாட்டில்  இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் போன்றவை அதிக அளவில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். கேலோ  இந்தியா பிரச்சாரத்தின் கீழ் மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவியும் வழங்குகிறது. தற்போது, நாட்டில், 2500-க்கும் கூடுதலான விளையாட்டு வீரர்களுக்கு கேலோ இந்தியா பிரச்சாரத்தின் கீழ் மாதந்தோறும் 50,000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற  நமது அரசின் இலக்கு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சுமார் 500 விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில வீரர்களின் தேவையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 2.5 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்க அரசு முன்வந்துள்ளது.

 

நண்பர்களே!

 

இன்றைய புதிய இந்தியா, விளையாட்டுத் துறை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவால்களுக்கும் தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருகிறது. நமது வீரர்கள் போதுமான ஆதாரங்கள், பயிற்சி, தொழில்நுட்ப அறிவு, சர்வதேச வெளிப்பாடு மற்றும் அவர்களின் தேர்வில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படுகிறது. இன்று, பஸ்தி மற்றும் பிற மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகளுக்குத் தேவையான  உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதுடன், மைதானங்கள் கட்டப்பட்டு பயிற்சியாளர்களும் ஏற்பாடு  செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், மாவட்ட அளவில் 1,000-க்கும் மேற்பட்ட கேலோ இந்தியா விளையாட்டு மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 750-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்கனவே, செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் புவிசார் குறியீடு செய்யப்பட்டுள்ளன, இதனால் வீரர்கள் பயிற்சி பெறுவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை.

 

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்காக மணிப்பூரில் ஒரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிறுவியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு விளையாட்டு பல்கலைக்கழகமும் அமைக்கப்பட்டு  வருகிறது. மேலும், அம்மாநிலத்தில் பல்வேறு  புதிய மைதானங்கள் கட்டப்பட்டு வருவதாக  என்னிடம் கூறப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு விடுதிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. உள்ளூரில், விளையாட்டிற்கு தேசிய அளவிலான வசதிகளை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுருக்கமாக, என் இளம் நண்பர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. தற்போது, நீங்கள் வெற்றிக் கொடியை ஏற்றி, நாட்டின் பெயரை ஒளிரச் செய்ய வேண்டும்.

 

நண்பர்களே!

 

உடல்தகுதியுடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அறிந்துள்ளனர்,. இந்த விஷயத்தில் உடல் தகுதி இந்தியா இயக்கம் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது. உடல்தகுதியில் கவனம் செலுத்த நீங்கள் அனைவரும் யோகாவை உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள  வேண்டும். யோகப்பயிற்சி செய்வதால், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.  விளையாட்டிலும் இது உங்களுக்கு பயனளிக்கும். அதேபோல், ஒவ்வொரு வீரருக்கும் சத்தான உணவு சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியது  முக்கியமானது. நமது கிராமங்களில் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் உட்கொள்ளப்படும் தினை உள்ளிட்ட சிறு தானியங்கள், சத்தான உணவை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவின் கோரிக்கை அடிப்படையில்  2023-ம் ஆண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிறு தானியங்களை  உங்கள் உணவு அட்டவணையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அது  சிறந்த ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும்.

 

நண்பர்களே!

 

நமது இளைஞர்கள் அனைவரும் விளையாட்டிலிருந்தும், வாழ்க்கையிலும் ஏராளமான விஷயத்தைக் கற்றுக் கொள்வார்கள். உங்களின் இந்த ஆற்றல் விளையாட்டுத் துறையில் இருந்து விரிவடைந்து நாட்டின் ஆற்றலாக மாறும் என்று நான் நம்புகிறேன். ஹரிஷ் அவர்களை வாழ்த்துகிறேன். மிகுந்த ஆர்வத்துடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார். பஸ்தி இளைஞர்களுக்காக இரவு பகலாக பணியாற்றும் இவரின் இயல்பு விளையாட்டு மைதானத்திலும் தெரிகிறது.

உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi